ஆனால் இன்றைய சூழலில் என்னைப் போன்றவர்கள் ஈழத்துக்குப் போய் அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட முடியாதவாறு புலிகளின் துப்பாக்கிகளும் அரசின் சிறைகளும் எம்மைத் தடுத்து வைத்துள்ளன. வாய்ப்புள்ள சூழல் வரும்போது நான் என்னை இயக்கச் செயற்பாடுகளில் முழுமையாக இணைத்துக்கொள்வேன். இப்போது கூட அய்ரோப்பாவில் சிறு அளவில் குழுக்களாக அரசியற் செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டுதானிருக்கிறோம். - ஷோபாசக்தி
எழுத்தாளரும் நம்ம நண்பருமான ஷோபாசக்தி கே. பாலமுருகன் என்பவருக்கு எப்பவோ கொடுத்த நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார். இதை இந்த நேரத்தில் வெளியிட்டிருக்கிறார் போல ... ஆனால் துரதிஸ்ட வசமாக ஷோபா சொல்லும் துப்பாகிகள் அங்கு இப்போது செயலிழந்து விட்டன. வேறு இடங்களிலிருந்து வேண்டுமானால் துப்பாக்கிகள் வரக் கூடும். ஒரு வேளை இப்போது பேட்டி கண்டிருந்தால் கருணாவின், பிள்ளையானின் , டக்ளஸ் அண்ணையின் .... ... ... துப்பாகிகளின் அச்சுறுத்தல் இருக்கிறது என ஷோபா சொல்லியிருக்கக் கூடும்.
அடுத்து அரச அடக்கு முறை தடுத்து வைத்திருக்கிறதாம். அட நாதாரிப் பயலுகளா( நாதாரி பயலு எண்டு ஷோபாவைச் சொல்ல வில்லை இதையெல்லம் கேட்க்கும் வாய்ப்புப் பெற்ற என்னையும் உங்களையும்தான் சொல்கிறேன்) அடக்கு முறைக்கு எதிராக போராடுவதற்க்குத்தானே இயக்கம். அதுக்குப் பெயர்தானே போராட்டம். ஷோபா அந்த பேட்டியில் குட்டிரேவதி ஆதவன் தீட்சண்யா எல்லாரும் இயக்கத்தில் இணைந்து போராடுகிறர்கள் எழுத்தாளர்கள் இயக்கத்தில் சேரக் கூடாது என்பதல்ல என்கிறார்.
இதில ஒரு சின்ன தகவல் இயக்கம் என்கிறது தமிழீழத்தில் உபயோகிக்கும் அர்த்தத்தில் அல்லாமல் பொதுவான அர்த்ததில் சொல்லுறன். ஆதவன் தீட்சண்யா லண்டன் சென்று கூட்டங்களில் கலப்பதால் அவர் அனைத்துலக பிரிவுடன் தொடர்பு என்றோ... குட்டி ரேவதி கவிஞர்களின் ஈழத்தமிழர் பாதுகப்பு முயற்சிகளில் முன்நிற்பதால் அரசியற் துறைத் தொடர்பு என்றோ நினைத்து விட வேண்டாம்.
அட ஆமங்கண்ணு அவுங்க மாதிரி உங்களுக்கு நாட்டின் சூழல் இருந்தால் அப்ப சுகமா உக்காந்துகின்னு போராடுவிங்களோ. ( அவுங்க நாட்டில போராடுறது அத்தனை சுகம் என்பதில்லை என்பது வேறு கதை. கருணாநிதி மற்றும் செயலலிதா போன்றவர்களின் அரசாட்சியின் சிறைகள், தேசிய பாதுகாப்புச் சட்டம், ரவுடிகளின் துப்பாகிகள் காரணமாக தமிழ்நாட்டிலும் உங்களைப் போன்றவர்களால் தீவிரமாக போராட முடியாது)
உனக்கு வாய்த்த சமூகத்தின் சூழலில் இருந்து போராட வேண்டும் அல்லது நீ வாழும் சமுகத்தில் நாட்டில் போராட வேண்டும் அல்லது உனது மொழிச் சமுகத்தில் போராட வேண்டும் அதை விட்டு விட்டு புலிகளின் ஆயுதம் இலங்கை அரசின் அடக்கு முறையும் முடியட்டும் இயக்கம் அமைத்து போராடுறன் எண்டால்.... ..... ....
புலியெதிர்ப்பு ஆதாரவு பாசிசம் சாதிய ஆதிக்கம் என்பன எல்லாவற்றையும் உங்களால் முன்வைக்கப்பட்ட பல விமர்சனங்களையும் தாண்டி இலங்கையில் இப்போது வரை இருந்து போராடிய அத்தனை பேரும் உங்களைப் பொறுத்த வரையில் ஒரு வேளை முட்டாள்களாக இருக்க முடியுமோ. ஷோபாசக்தியினது இன்னாள் முன்னாள் தோழர்கள் மற்றும் சில நாட்க்கள், மாதங்கள் முன்பு பிரிந்து போன தோழர்கள் என பலரும் பூட்டிய குளிர் அறைகளுக்குள் கணனி முன்னால் உட்கார்ந்து கொண்டும் அல்லது அழுக்கான ஆடைகளுடன் நிறைந்த போதையிலும் விமர்சித்துக் கொண்டிருக்க இயங்கிக் கொண்டிருந்த மனிதர்களின் மரணங்களை கூட நீங்கள் பாசிசத்தின் மரணங்களாகவே சொன்னீர்கள். சிவராம் உட்பட பலரின் மரணங்களையிட்டே நான் பேசுகிறேன்.
தாங்கள் கொண்ட கருத்துக்காக இயங்கிக் கொண்டிருந்தார்கள். சிவராம் எங்க இயக்கத்தில் இருந்தார் என்றால் பத்திரிகையாளர் அமைப்புகளும் இயக்கம்தான். சுனந்த தேசப்பிரிய, சனத் பால சூரிய, சிறித்துங்க ஜெய சூரிய , விக்கிரமபாகு கருனாரட்ண, ரவிராஜ், என அரசியல் சமூக இயக்கம் சார்ந்து பலரும் இயங்கிக் கொண்டுதானிருக்கிறார்கள். ராவிராஜ் தனது அரசியலாக எதை கொண்டிருந்தாலும் நமக்கு ஒத்து வந்தாலும் வராவிட்டாலும் அவர் ஏதோ ஒரு இயக்கத்தில் இயங்கினார்.
மனித உரிமைகளுக்காக இன்னும் வழக்காடும், முடிந்தவரை அவற்றை வெளிக்கொண்டுவரும் எத்தனை அமைப்புகள் தொடர்ந்து இயங்கின. அதில் பணியாற்றிய நண்பர்களுக்கு அச்சுறத்தலே இல்லையா? இப்போதுதான் படிப்படியாக அவர்கள் வெளியேறுகிறார்கள். ஆனால் அவர்கள் நிரந்தரமாக குடிபெயர்ந்து செல்ல வில்லை. சும்மா என்னகடா விடுகை விடுறீங்க. எங்களால போராட முடியல சும்மா எழுதிக்கிட்டும் பேசிக்கிட்டும் இருப்போம். அதுவும் பிரச்சனை வராமலுக்கு ... .... இந்தியாவுக்கு வந்தால் யரைப் போய் பார்கணும் அவர்களைப் பார்ப்பம். எப்ப பேட்டி கொடுக்கணுமோ எதைப் பற்றிக் கொடுக்கணுமோ அதைக் கொடுத்து விட்டு கிளம்பிடுவம். இதுதானே உங்கள் பார்முலா?
அடுத்து நம்ம நண்பன் ஷோபா அண்ணாச்சி ( மட்டக்களப்புல அண்ணன் என்பதை அன்பா அண்ணாச்சி எண்டு சொல்ர நாங்க..மறுகா யாரும் சரவணபவான் அண்ணாச்சி மாதிரி நினைச்சிடக் கூடாது) சின்னதாக தான் வழும் நாட்டில் சிறு சிறு குழுக்களாக இயங்குகிறாராம். நல்லது அங்க உள்ள தொழிளார்கள் குடியேறிகள் குறித்தாவது வேலை செய்வது என்றால் நல்லதுதான். ஆனால் அதை சத்தமாக சொல்லுமளவிற்க்கு இவர்களின் இயக்கம் அத்தனை ஆழமாக இல்லை . கூட்டம் போடுவதற்க்கும் கூடிப் பேசுவதற்க்கும் புத்தகம் எழுதுவதற்க்கும் புலியை விமர்சிப்பதற்க்கும் . ஈழத்தின் எந்த வேலியில் புலியின் குடும்பியில் சாதியாதிக்கம் இருக்கிறது என்பதை புகுந்து தேடுவதற்க்கும் போதையேற்றுவதற்க்குமே இவர்களுக்கு நேரம் போதாமல் இருக்குமே.
சரியப்பா இப்ப பிரச்சனைக்கு வருவம். சதா புலிகளையும் ஈழத்தில் நடக்கும் சாதிய , வர்க்க அடக்க முறையையும் பேசிக் கோண்டும் தமது அரசியலாகக் கொண்டும் தமக்கிருக்கும் எழுத்துவன்மையைக் கொண்டும் இணையத்தில் இயங்கி வந்த தமிழரங்க ,சத்தியகடதாசிக் காரர்களே இப்போதும் உங்களுக்கு பாதுகாப்பான இணையதில் இயக்கம் வளர்க்கிறீர்களோ? நீங்கள் வைத்திருந்த வைத்திருக்கும் மாற்று அரசியல் என்ன? இப்போதுதான் நீங்கள் இதுவரை விமர்சித்த பாசிஸ்டுகள் அழிக்கப் பட்டனரே அப்படியானால் உங்களின் மாற்று அரசியலை இந்நேரம் துக்கிகொண்டு கிளம்பியிருக்கலாமே.
ஓ..... ஒரு வேளை வெளிநாட்டு புலி பாசிஸ்ட்டுகளும் அழிக்கப் பட வேண்டுமோ. எனக்கென்னமோ இப்ப இருக்கும் நிலையில் அவர்கள் துப்பாக்கி தூக்கிக் கொண்டு உங்களைக் கொல்ல வருவதற்க்கான சூழல் இல்லையென்றே தோன்றுகிறது. உங்க கூடவே யாராவது கூட்டத்தில் துப்பாக்கியோடு இருக்கப் போகிறார்கள் பாருங்கள். சைகிள் கப்பில தோழர்கள் யாரவது உங்கள் மாற்றுத் திட்டங்களை அடித்துப் பறித்து விடப் போகிறார்கள்.
சும்மா புலிகள் 100 வீதம் கொடுமைக் காரர்கள் என்றால் இலங்கை அரசு 200 வீதம் கொடுமைக் காரர்கள் என கருணாநிதித்தன டயலக்குகளை ஷோபசக்திகள் இனியும் சொல்லப் போகிறார்களா? ( இந்த 100வீதம் புலி எதிர்ப்பு,200 வீதம் இலங்கை அரசு எதிர்ப்பு எனபதை குறைந்தது 3 பேட்டிகளிலாவது இதுவரை ஷோபாசக்தி சொல்லியிருக்காலாம்)
உங்கள் கதையாடல்களால் மக்களை மயக்க நினைக்கிறீகளா? இதுதான் மக்களை அணி திரட்டி அரசியல் அறிவு பெற வைப்பதா? அய்யாமாரே என்னைவிடவும் நமது மக்களை விடவும் நிறையப் படித்த கருதியல்கள் இசங்கள் அனுபவங்கள் கற்றுகொண்ட நீங்கள் பேசுவதையே விளக்கங்கெட்டதனாமா பார்த்துக் கொண்டிருக்கும் எங்களிடம் எதுக்கு கதையளக்கிறீர்கள். உங்கள் எழுத்துகளின் மயக்கத்தில் ஊசியேற்றப் பார்க்கிறீர்களா?
நீங்கள் நட்டை விட்டு வெளியேறிய பின்னர் , இதுவரை உங்களில் எத்தனை பேருக்கு ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகள் துயரங்கள் செய்திகள் குறித்து நேரடியாக தகவல் பெற முடிந்தது. உங்களின் தொடர்பு எப்படியிருந்தது. ஷோபா , நீங்கள் உங்கள் கிரமாம் பற்றிய ஒரு கொலை பற்றிய கட்டுரை ஒன்றை எழுதும் போது நான் உங்கள் கிராமத்தில் இருந்தேன்.அப்போது நீங்கள் பிரான்ஸில். அப்போது உங்களுக்கு புலியால் ஆபத்து என்பது உங்கள் வாதமாக இருக்கலாம். ஆனால் அந்த சம்பவம் பற்றி எழுதுவதற்கான உங்களின் தொடர்ப்பு என்பது எது? ஒரு வேளை உங்கள் நண்பர்களும் உறவினர்களும் இருக்காலாம். ஆனால் இதே போன்ற பல கதைகளை வெறும் இணைச் செய்திகளை வைத்தே எழுதும் பலர் உங்களின் கூட்டளிகளாக இருந்தார்கள் இருக்கிறார்கள்.
முடிவாக மீண்டும் முன்பு கேட்ட கேள்வியே, இதுவரை உங்களின் அரசியலுக்கு புலிதான் பிரச்சனை என்றால். உங்கள் எதிர்பார்ப்புப் படி புலிகள் வந்து கொண்டிருந்த தவறான அரசியல் ராணுவ வழிமுறை அவர்களைத் தோல்வி நோக்கி இட்டுச் சென்று கொண்டிருந்தது என்றால் அப்போதே உங்களிடம் மாற்று திட்டங்கள் இருந்திருக்க வேண்டுமே அப்படியானால், உங்களின் மாற்று அரசியல் என்ன? இப்போது தவிக்கும் மக்களுக்கு முன்னால் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். இதுவரை செத்து கொண்டிருந்த மக்களுக்கு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்னை போலவே நீங்களும் சும்ம வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் என்றால் வெளிப்படையாச் சொல்லுங்கள் .
இல்லா விட்டால் ரயாகரன் என்பவர் அசிங்கமாய் தனக்கு ஒத்துப் போகும் புலியெதிர்ப்பு பதிவுகளை இப்போது தேடிக் கண்டுபிடித்து, புலியே அழிந்திருக்கும் நிலையில் வேதனைகளை கொட்டும் உணர்வுகளில் இருக்கும் புலியெதிர்ப்பை தனக்கு சாதகமாக்கி மீள் பிரசுரம் செய்வது போல் புலியெதிர்ப்பாளர்களை தேடிக் கொண்டிருந்தீர்களா?
ஒரு வேளை நீங்கள் புலியும் முடிந்து இலங்கையில் மகிந்த ஆட்சியும் ஒழிந்து வேறு புதிய ஆட்சி வந்து ஒரே நாடு ஒரே மக்களாகி வாழும் ஒரு காலத்தில் ஒரு 20 வருடங்களுக்கு பிறகு தலித்துகளுக்காக போராடுவதற்க்கு இலங்கையில் ஓர் அமைப்பை அல்லது இயக்கத்தை தொடங்க போவதாக நினத்து நீங்கள் சொன்னத நாந்தான் தப்பா புரிஞ்சிகிட்டு உணர்ச்சி வசப்பட்டு எழுதிற்றனோ.... சே தமிழனாப் பிறந்ததால எல்லாத்திலையும் கொஞ்சம் உணர்ச்சி அதிகம்தான்.
Friday, May 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ஓம் உணர்ச்சிவசப்பட்டுத்தான் எழுதிப்போட்டீங்கள் போல:) ஏனெண்டால் நிறைய இடங்களிலை 'அரவை'க் காணேல்லை. ஊகிச்சு வாசிக்கக்கூடியதாக இருந்துது. இருந்தாப்போல சோமி இவ்வளவு உண்மையளை அள்ளிக்கொட்டக்கூடாதப்பா.. எனக்கு இந்தப் பதிவு பிடிச்சிருக்கு.
நீங்கள் நம்மை சரியாகபுரிந்துகொள்ளவில்லை. இப்போது புலிகளின் அராஜகம்தான் ஒழிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் அரச ராஜகம் ஒழிக்கப்படவேண்டும். அரச அராஜகத்திடமிருந்து இன்னும் நமக்கு அச்சுறுத்தல் விலகாதநிலையில் நாம் போராட்டங்களில் ஈடுபடமுடியாதிருக்கிறது.
சகல அராஜகங்களும் முதலில் ஒழிக்கப்பட்டாலேயே நாம் அராஜகங்களுக்கு எதிரான நமது போராட்டத்தை ஆரம்பிக்க முடியும். அதன்முதல்படியே தற்போது நடந்திருக்கிறது. அதுவரை நாம் இங்கே வெளிநாடுகளில் சிறு சிறு குழுக்கள் ஊடாக போராடுவோம்.
தலித்துக்களுக்கு எதிரான சமூக அமைவை எதிர்த்து நாம்போராட வேண்டியுள்ளது. ஆனால் அதற்கும் ஆதிக்க வெள்ளாளர்களிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆகவே அத்தகைய வெள்ளாளர்கள் ஒழிக்கப்பட்டு அந்த அச்சுறுத்தலும் நீக்கப்பட்ட பின்னாலேயே நாம் தலித்துக்களுக்காக போராட முடியும்..
நன்றி சோமி , இனியாவது இந்த
(ஏ)மாற்றுக்கருத்தாளர்களுக்கு உறைக்கட்டும். இதே மாதிரியான ஒரு சிந்தனை வயப்பட்டு நான் வரைந்த எண்ணக் குமுறலை இங்கே நீங்கள் காணலாம்
http://kandumkaanaan.blogspot.com/2009/05/blog-post.html
எல்லாம் மாயை...
என்றோ முடிந்த காரியாம்... ஒரு பொல்லாப்பும் இல்லை..
சோமி வாழ்த்துக்கள். தமிழ்நாட்டு எழுத்தாளர்களை
வாங்குகின்றார்கள்(ஆதவன் தீட்சண்யா),முகங்களை உரியுங்கள்
தொடர்ச்சியாக இயங்குங்கள்
///உனக்கு வாய்த்த சமூகத்தின் சூழலில் இருந்து போராட வேண்டும் அல்லது நீ வாழும் சமுகத்தில் நாட்டில் போராட வேண்டும் அல்லது உனது மொழிச் சமுகத்தில் போராட வேண்டும் அதை விட்டு விட்டு புலிகளின் ஆயுதம் இலங்கை அரசின் அடக்கு முறையும் முடியட்டும் இயக்கம் அமைத்து போராடுறன் எண்டால்.... ..... ....////
வடலி வளர்த்துக் கள்ளுக்குடிக்கும் கனவில் இருப்போருக்காக ரென்சனாகாதையங்கோ சோமி.
புலியில்லாத பூமியில் போய் இனி அரசியல் வல்லமை மிக்க இந்த சபரிசுத்தமானவர்கள் போய் புதிய சனநாயகத்தை நடத்தட்டும்.
செத்துப்போன அத்தனை சீவன்களும் மிஞ்சிய 3லட்சம் பேரையும் வைச்சு இனி ஏதாவதொரு புரபரப்பு நாவல்கள் வரும். அதையும் படித்துத் தொலைவோம்.
பியர் நுரையில் கதையெழுதி
சிகரெட் புகையில் தமிழின விதியை மாற்றும் கனவோடு இருக்கும் இந்தச் சனநாயகவாதிகளையெல்லாம் போகலாம் இனிப்போராட.
சாந்தி
வாங்குன காசுக்கு கொஞ்சமாவது விசுவாசமா இருக்க வேணாமா சோ.மி...
http://allinall01.wordpress.com/
எந்த மக்களுக்காகப்போராடுவதாகச் சொல்லுகிறார்களோ அந்தப் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட அல்லது உரிமைமறுக்கப்பட்ட அந்தமக்கள் வாழும் களங்களிற்குச் சென்று தமது தமது போராட்டங்களை முன்னெடுக்காது மார்க்ஸ் ஏங்கெல்ஸ் நவினகாலனித்துவம்..... என அந்தமக்களுக்குச் சற்றும்புரியாத விடயங்களை அந்த மக்களுக்கு மிகவும் அந்நியப்பட்ட தளங்களில் சொல்லிக்கொண்டு தமது மேதாவித்தனத்தைக்காட்ட முனைபவர்களைத் தோலுரித்துக்காட்டும் அருமையான கருத்துப் பதிவு
எந்த மக்களுக்காகப்போராடுவதாகச் சொல்லுகிறார்களோ அந்தப் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட அல்லது உரிமைமறுக்கப்பட்ட அந்தமக்கள் வாழும் களங்களிற்குச் சென்று தமது தமது போராட்டங்களை முன்னெடுக்காது மார்க்ஸ் ஏங்கெல்ஸ் நவினகாலனித்துவம்..... என அந்தமக்களுக்குச் சற்றும்புரியாத விடயங்களை அந்த மக்களுக்கு மிகவும் அந்நியப்பட்ட தளங்களில் சொல்லிக்கொண்டு தமது மேதாவித்தனத்தைக்காட்ட முனைபவர்களைத் தோலுரித்துக்காட்டும் அருமையான கருத்துப் பதிவு
Post a Comment