Friday, May 01, 2009

மே -3 உலக ஊடக தினம் - சிறீல்ங்காவில் மரணத்தின் நாள்

மே 3 ம் திகதி 2006 ஆம் ஆண்டு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்க்கு அருகில் ஊடக சுதந்திரத்திற்க்கான போராடமும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களுக்கான அஞ்சலியும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாலை 5.30 மணிக்கு தமிழ் சிங்கள முஸ்லிம் ஊடகவியலாளர்கள் ஏறத்தாள 100 பேர் வரையில் கூடியிருந்தோம். சிவாரம்,நடேசன்,ரிச்சட் டி சொய்சா என இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் சிங்கள பத்திரிகையாளர்களின் படங்கள் வரிசைப் படுத்தப் பட்டிருந்தன. கடைசியாக கொல்லப்பட்டதால் சிவராமின் படம் பெரிதாக வைகப் பட்டிருந்தது.

இரவு 6.45 வரை மெழுகு வர்த்திகளைக் கையில் ஏந்தியபடி பத்திரிகைகாரர்கள் இணைந்திருக்க..சுனந்த தேசபிரிய உள்ளிட்டவர்கள் உரத்துக் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். சனத், மஞ்சுள,சுனந்த,ஹராவ பத்திரிகை நண்பர்களின் சிங்களத்திலான கோஷங்களுக்கிடையில் தமிழ் கோஷங்கள் அடங்கிப் போயிருந்தன. தமிழ் பத்திரிகைக்காரகளின் எண்ணிக்கையும் குறைவுதனே..சிவராம் கொலைக்குப் பின்னர் தமிழ் பத்திரிகையாளர்களில் பெரும்பாலனாவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். மீதி உள்ளவர்கள் தலைமறைவு வாழ்க்கையில் ....

வித்தியாதரன் நான் சிவாகுமார் ருஷாங்கன் ஆகியோர் போராட்டம் முடிந்ததும் பேசிய படி விடைபெற்றோம், ஆளுக்கொரு திசையில். இதற்கிடையில் சுதந்திர ஊடக இயக்கம் எழுதுவதற்க்கும் பேசுவதற்க்குமான உரிமையை வலியுறுத்தி அச்சடிக்கப்பட்ட வாசகங்களுடானான ரீ-சேட்டுகளைக் கொடுத்தார்கள் 150 ரூபா கொடுத்து அவற்றை வாங்கிக் கொண்டோம்.

சிவராம் கொலையின் மர்மத்தை விலக்கி குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் பட வேண்டுமென்பதே பிரதான கோரிக்கை. ஏனெனில் இதுவரை கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களின் கொலை விசாரணைகளில் அதிக ஆதாரம் சிவராம் கொலையில் கிடைத்திருக்கிறது. புளட் இயக்க உறுப்பினரின் வாகனம்தான் கொலைக்கு பயன்படுத்தப் பட்டது என்பது கண்டுபிடிக்கப் பட்டு வாகனமும் கைப்பற்றப் பட்டது. சிவராமின் கைபேசியை வைத்திருந்த நபரை கண்டுபிடித்திருந்தார்கள்.

சிவாராம் தமிழ்நெற்க்கு விரைவாக செய்தி அனுபுவதற்க்காக பல்வசதி கொண்ட விலையுயர்ந்த கைபேசி வைத்திருந்தார். கொலை செய்தவர்களோடு இருந்த ஒருவருக்கு அந்த கைபேசியில் விருப்பம் இருந்திருக்குப் போல அவர் அந்த கைபேசியை ஆன் செய்து வைத்திருந்தார். சிவராம் இறந்து சில நாட்களில் அவரின் தொலைபேசிக்கு அழைப்பெடுக்கும் போதெல்லாம் அந்த இனிய பாடல் ஒலிக்கும். இதனை பல முறை காவல்துறைக்கு சொன்ன பின்னர் வேறு வழியில்லாமல் அந்த நபரை சில வாரம் கழித்து கைது செய்தார்கள்.

ஆகா இதைவிட போதிய ஆதராங்கள் ஒரு கொலைவிசாரணைக்கு கிடைக்கது என்றாலும் கூட இலங்கை காவல்துறை ஆதாரங்களைத் தேடியது. இந்த சூழலில் சிவாரம் கொலை நடந்து ஒரு வருடத்தின் பின்னர் நாம் போராட்டம் நடத்தினோம்( இப்ப நாலு வருசமாச்சு.. கடதலுக்கு பயன்பட்ட ஜீப் வைத்திருந்தவர் செல்போன் வைத்திருந்தவர் இருவரையும் விடுவித்துவிட்டார்கள் ஆனல் இன்னமும் ஆதாரம் தேடுகிறார்களாம்)

போராடம் முடிந்து எட்டு மணியளவில் வெள்ளவத்தைக்கு வந்து சேர்ந்த போது தொலைபேசி அலறியது. இப்ப 7 மணிக்கு யாழ்ப்பாணம் உதயன் பேப்பருக்குள் புகுந்து சுட்டிருக்கிறார்கள். 2 பேர் சரியாம்( கொல்லப்பட்டார்கள் என்பதன் கொலோக்கியல்) எடிற்றோறியலுக்குள்ளும் புகுந்து சுட்டிருகிறார்கள். பின்புறமாக இருந்த எடிற்றோறீயலுக்குள் போவதற்க்குள் அங்கிருந்தவர்கள் தப்பித்துவிட்டதால் சாவகாசமாக கணணிகளூக்கு சுட்டு விட்டு கொலையாளிகள் கிளம்பிச் சென்றார்கள் என்ற தகவல் எனக்கு சொல்லப்பட்டது.

நிமலராஜன்,நடேசன்,சிவராம் உள்ளீடவர்களின் கொலைகளுக்காவும் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப் பட்டதற்க்காகவும் போராட்டம் செய்து முடித்த ஊடகதினதின் இரவு 7 மணிக்கு கொலை நடக்குது. நடேசன் கொல்லப்பட்டு ஒருவருடத்தில் சிவராம் கொல்லப் பட்டார். சிவாராம் கொலை செய்யப் பட்டு சரியாக ஒரு வருடமும் 4 நாட்களும் ஆன நிலையில் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்து கொலை....

இப்போது இன்னுமோர் ஊடக தினம் வருகிறது.. இலங்கை அரசு போர் வெற்றியின் போதையில் இருக்கும் ஒரு நிலையில் முன்னணி ஊடகவியலாளர்கள் செயற்பாட்டாளர்கள் எல்லாம் நட்டை விட்டு வெளியேறி விட்ட நிலையில் உரத்து ஊடக சுதந்திரம் பற்றி கத்துவதற்க்கு அங்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள்.

ஆனால் மகிந்த அரசே ஏதாவதுவிழா எடுக்கக் கூடும் சிறந்த ஊடகவியலாளருக்கு விருது கொடுக்கக் கூடும். வன்னியில் இருந்து ரூபவாகினிக்கு செய்திகள் வழங்கியவ்ர் இலங்கையில் சிறந்த பத்திரிகையாலாளராக தேர்ந்தெடுகப் படலாம். ஏற்கனவே இலங்கை அரசின் பல பரிசுகாளைப் பெற்ற" லங்கரட்னா" என்ர இலங்கையின் உயரிய விருதுபெற்ற என் . ராம் (இந்து என்ற சென்னை ஆங்கில பத்திரிகை ஆசிரியர்) ஏதும் விருதுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடும்.

இப்போது அங்கே கடந்த இரண்டு வருடத்தில் 60 முதன்மைப் பத்திரிகையாளர்கள் வெளியேறியிருக்கிரார்கள். இவர்களில் பாதிக்கு மேல் சிங்களவர்கள். லசந்த விக்கிரமதுங்க வரை 19 ஊடகப் பணீயாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். திசநாயகம் ஜசிதரன், வளர்மதி என சிறையில் அடைக்கப்டிருக்கும். டைக்கபட்டு விடுதலையான விசாரிக்கப்பட்ட கடத்தப்பட்ட தொடர்ந்தும் அச்சுறுத்தப் படும் பத்திரிகையாளர்களின் எண்ணிகை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

சாவை எதிர்கொண்டு நெஞ்சு நிமிர்த்தி நிற்க்கும் என் பத்திரிகைத் துறை தோழர்களூக்கு வாழ்த்துக்கள். நமீதா நெஞ்சு நிமிர்த்தி நிற்க்கும் புகைப்படத்தோடு கிசுகிசுகும் பத்திரிகையாளரும் சேர்த்திதாணெ எண்டு கேட்டு அவர்கள் மனதை புண்படுத்த வேண்டாம். மனிதத்தை தொலைத்துவிடாத பத்திரிகைக்காரனுக்கு.....அவன் கிசு கிசு எழுதுபவனாலும் சரி இந்து நாளிதழில் வேலை செய்பவனாக இருந்தாலும் சரி....ஊடகதினத்தில் உறூதியேற்போம்.

2 comments:

Anonymous said...

நாம் ஊடகப் போரை மிகக் காலம் தாழ்த்தியே உணர்ந்து கொண்டோம்.

appan said...

இலங்கையில் ராணுவம் போராளிகள் என இரண்டு தரப்புகளினாலும் ஊடகங்கள் அச்சுறுத்தப் பட்டே வந்திருகின்றன. புலிகளால் சுடப்பட்டவர்களும் பத்திரிகைக் காரர்கள்தான்...