Sunday, March 02, 2008

என்ன நடக்குது தமிழ்மணத்தில.....

தெரியாமத்தான் கேட்கிறன் என்னதான் நடக்குது தமிழ் மணத்தில......யார் யாரை வெளிய போகச் சொல்லுறது...யாருக்கு யார் கழுத்தறுப்பு செய்யுறது.... யாரவது உலகத் தலித் மாநாடு போட்டிச்சினமா? இல்லை தமிழ் தேசிய ஆய்விலும் இலங்கை இனச் சிக்கலுக்கு தீர்வு திட்டம் முன் வைத்தும் பதிவுகள் ஏதும் வந்தனாவா?

இல்லை நம்ம வரவனை முதல் லேட்டஸ் தூயா வரைக்கும் யாரவது புதிசான மொக்கை போட்டார்காளா.? பாலபாரதி பு.பித்தன் பற்றியோ, செ.மோகன் பற்றியோ ஏதேனும் அறிவியல் மன்னிக்கவும் அறிவுபூர்வ கட்டுரை எழுதினாரோ?

வசந்தன் முதல் தமிழரங்ககாரர் வரை ஏதும் சூடாக விவாதம் நடத்தினவையோ( இஞ்ச சயந்தன், வடை சுட்டு இன்ரனெற்றில சுடச் சுட அனுப்பினவை எண்டு நக்கல் விட்டாதையும்) தவிர இன்னும் பிற நம் தோழர்கள் என்னென்ன செய்தவை எண்டு யாரவது எனக்குச் சொல்லுங்கப்பா.....அட கானபிரபாவை கேட்கயில்லை அதுசரி அவர் வேற என்ன செய்திருப்பார் நல்ல சினிமா பாடல்களை வாரி வழங்கியிருப்பார். மலைநாடன் பாற்றியும் கேட்கையில்லைத்தான் அவரின் பாதுகாப்பு காரணங்களுக்காக கேட்காமல் விட்டுடன்.

இத்தால் இப்பிடி நான் கேட்பதின் ஊடாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வலைப்பூ பக்கம் வந்திருப்பதை உங்களுக்கு தெரியப் படுதுகிறேன். டமில் ஸுழலில் இதுகள் முக்கியம்.

முந்தநாள் தமிழச்சி மீண்டு ஆத்திரப்பட்டு பதிவு போட்டிருகிறா வழமை போலவே நிறைய வாழிகள். இப்ப தமிழ் மணத்தில் பதிவெழுதும் பல்லாயிரக் கணக்கானவர்களில் சில ஆயிரம் பேர் மொக்கைப் பதிவுக்கு தாவியிருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.ஈழத்து பதிவர்கள் எழுதுவதை நிறுத்திக் கொண்டது ஏனென்று தெரியல்ல... சிலர் தமிழீழம் கிடைச்சாத்தான் எழுதுவம் எண்டு சொன்னதாகவும் கேள்வி...நல்ல முடிவு.

சரி இதுக்குமேல் இனி மொக்கையாக எதுவும் போடுவதிலை இனிமேல் கிடைகிற நேரத்தில் கடலை போடும் எண்ணமிருப்பதால் வலையர்கள் தப்பித்தீர்கள். கா+ம் என காதலிக்கும் அவள் காதலனுக்கும் கலியாணம்.:)

Saturday, March 01, 2008

யாழ்நூலக ஆவணப்படம்-திரையிடலுக்கு தயார்

'வரும் ஆனா வராது' என்று ரேஞ்சில் இருந்த யாழ்ப்பாண நுலகம் குறித்த ஆவணப் படத்தை அனைவரின் பார்வைக்கும் முன்வைக்கும் நிலை உருவாகியுள்ளது. 2006 இல் ஆரம்பிக்கப் பட்ட வேலை 2 வருடங்களின் பின் திரையிடலுக்காக தாராகியுள்ளது.

இது யாழ் நூலக குறித்து நாம் உருவாக்க நினைத்த முழுமையான ஆவணமாக இல்லை என்கிற போதும் ஏதோ ஒரு நிலையில் வெளியிட்டே ஆகவேண்டும் என்கிற முடிவில் இதனை நிறைவு செய்திருகிறேம்.ஏனெனில் யாழ்ப்பான நூலகம் யாழ்ப்பாண சமூகத்தொடும் இலங்கையின் அரசியலோடும் மட்டும் வரையறுத்துக்கொண்ட ஒன்றல்ல. யாழ் பொதுசன நுலக தனது 75 வருட வரலாற்றில் பல கதைகளைக் கொண்டிருக்கிறது.

இப்போது உருவாக்கியுள்ள படத்தில் முடிந்தளவு நூலகம் சார்ந்த வரலாற்றையும் அதன் எரிப்புக்கு பின்னான இலங்கையின் இனப் போரும் அதற்குள்ளான நூலகத்தின் பயணம் குறித்தும் பதிவு செய்திருக்கிறோம்.இன்னும் இன்னும் நிறைய செய்திகளும் காட்சிகளும் பலரிடம் இருக்கலாம். அவை மேலும் செழுமையான ஒரு வரலாற்று ஆவணத்தை ஒருவாக்க உறுதுனை புரியும்.

நேரம் ,பணம் என்பவை ஒரு வரலாற்று ஆவாணப் படத்தின் உருவாக்கதில் அதிகம் செல்வாக்குப் பெற்றவை.அது போதும் இத்தோடு நிறுத்திக் கொள் என்கிறபோது நாம் நிறுத்தியே ஆக வேண்டும்.

சரி, இனி நீங்கள் படத்தைப் பார்கலாம். பல இடங்களிலும் திரையிடுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருகிறார்கள்.அப்போது நீங்கள் படத்தைப் பார்க்கலாம்.DVD உருவாகியவுடன் அதனை வங்கியும் பர்கலாம். விமர்சிக்கலாம்,நிரகரிகலாம் ,மேலும் பல செய்திகளையும் தகவல்களையும் சேர்க்க உதவலாம்.எங்கு எப்போது யார் திரையிடுகிறார்கள் என்ற விபரம் பின்னர் தருகிறேன்.

இந்த நேரத்தில் என்னோடும் எமது நிகரி திரைப்பட குழுவோடும் இந்த முயற்சிக்கு தோள் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.