Sunday, October 21, 2007

எங்களூரில் வெள்ளாளரும் பள்ளரும்...

எங்களூர் தென்மராட்ச்சியில் இருகிறது.அதை எங்களுர் எனபதை விட என் அம்மாவின் ஊர் என்பதே பொருத்தம்.நான் ஒருவருடத்திற்க்கும் சற்று அதிகமான காலம் அங்கிருந்திருக்கிறேன்.வெற்றியாகச் சொல்லவேண்டுமானால் யாழ்கோட்டை இயக்கத்தின் ஆழுகைக்குள் வந்த போது அந்த ஊருலேயே இருந்தேன்.

கோட்டை பிடித்தபோது சீனவெடி வெடித்த அண்ணாகள் பின்னால் ஓடியிருகிறேன்.வீட்டில் முன்னர் இயக்கத்தில் இருந்த என் மாமா இந்திய இராணுவத்துக்கு பயந்து மண்ணில் புதைத்து வைத்திருந்த புலிக்கொடியை அப்போதுதான் நான் தோண்டி எடுத்தேன்.
என்கொரு பெருமை, கோட்டைபிடித்த சேதி வந்த அந்த மாலைப் பொழுதில் சந்தியில் ஏற்றிய புலிகொடி நான் தோண்டியெடுத்து கொடுத்தது என்பதில்.
அந்த சந்தியில் மூன்று மாவீரர்களின் உருவப் படங்கள் வைக்கப்பட்டிருந்தது அதில் ஒருவர் பள்ளர் மற்றயவர்களைப் பற்றி தெரியாது."அந்த பள்ப்பெடியன்"(இப்பிடித்தான் ஊருக்குள் சொன்னார்கள் அதனால்ததன் எனக்கு அவர் பள்ளரெண்டு தெரியும்) மேஜர் தரம் என்று நினைவு.அவரின் பெயரை அந்த ஊரின் பெருந் தெருவுக்கு வைத்திருந்தார்கள்.

பெருமளவு வெள்ளாளர்களைக் கொண்ட அந்தப் பெருந்தெருவுக்கு அவர் பெயரை வைத்தது பற்றி
ஊரி சத்தமில்லாமல் பேச்சடிபட்டது.சத்தம் போட்டு சாதி சொன்னால் 3 மாதம் பங்கர்.இப்பிடித்தான் ஒருத்தர் பள்ளன் தேங்காய் களவெடுத்துப் போட்டான் எண்டு சொன்னதுக்கு இயக்கம் களவெடுத்தவனை விட பள்ளர் என்று சொன்னவனுக்கு அதிக தண்டனை கொடுத்ததாம்.! இது மாதிரி நிறையச் சேதி வாறதால சனம் கப்சிப்.

ஆனாலும் சண்முகம் ரீச்சர் நான் படிச்ச அந்த வகுப்புல வெள்ளாருக்கு மட்டும் தனியா வகுப்பு முடிஞ்சதும் சொல்லிகொடுப்பா.அத விடுவம் வெள்ளாளர் வீடுகளுக்குள்ள பள்ளர் வாரது எங்கள் ஊரில் இப்பவரைக்கும் இல்லைத்தான்.இப்ப சில இடங்கலில் வரவேற்பறை வரையும் வரவிடுகினம்.ஆனால் புழங்குறதில்ல.அதென்ன புழங்குறது எண்டுறியளோ அதுதான் கொடுக்கல் வாங்கல் செய்யுறது.

ஊர் இப்பிடி இருக்கையில நான் மட்டக்களப்புக்கு வந்துட்டன். சண்டை உச்சமடைய, இருந்த வெள்ளாளரில பாதிப்பேர் வெளிநாட்டுக்கு தப்பியோட வெள்ளாளர் எண்ணிக்கையில் குறையத் தொடங்கினர்.பள்ளர் இளைஞர்களும் வெளிநாட்டுக்குப் போனார்கள் ஆனால் வெள்ளாளரைப் போல குடும்பம் குடும்பமாகப் போகயில்ல.இப்ப வெள்ளாளர், பள்ளரையும் நளவரையும் மற்றசாதியினரையும் விட அதிக எண்ணிகையில் இல்லாமல் போனார்கள்.

வெள்ளாளக் காணிகள் பள்ளருக்கு அதிக விலையில் கனடாவிலோ சுவிசிலோ வைத்து கைமாற்றப் பட்டது. சில வருடங்கள் முன்பு திருச்சியில் நடந்த ஒரு செத்த வீட்டில் இப்பிடி பள்ளருக்கு காணிவித்தது தொடர்பாக இரண்டு பேர் சண்டை போட்டதைப் பார்த்தேன்.இருவருமே பக்கத்துப் பக்கத்துக் காணிக்காரர்.ஒருவர் தனது காணியைப் பள்ளருக்கு வித்ததால் மற்றவரின் காணி மதிப்பு இறங்கி விட்டதே சண்டையின் பிரதான கருப் பொருள்.

இந்த சண்டையில் ஒருவர் சொன்னார் " பள் பெடிகளுக்கு இப்ப பணம் வந்துட்டுது.அதுதான் ஊரில ஒரு காணிவிடாம வாங்குறாங்கள்.எங்கடயதுகளும் காசுக்காக மரியாதையப் பாக்காமல் நளம் பள்ளுகளூக்கு காணியை விக்குதுகள்" இதையடுத்து இன்னொருவர் சொன்னார்" உவங்கள் அறுவாங்கள் எங்கட வீடுகளை வாங்கி எங்கயிருந்தொ வந்ததுகளையெல்லாம் போராளி குடும்பம் மாவீரர் குடும்பம் எண்டு குடியமத்திப் போட்டாங்கள்."

அட இதை விடுங்கோ இப்ப ஊரில நடந்த ஒரு கூத்தைப் பாத்தியளோ! என்று செத்தவீட்டுக்கு வந்த இன்னொருவர் பேசத்தொடங்கினார் அவர் சிலமாதங்களுக்கு முன்னர் இந்தியா வந்தவராம்.
" முதல் ஊரில 'அதுகளும்' ரியூசன் எண்டால் எங்களிட்டதானே வரோணும்.இப்ப என்னாடாவெண்டால் 'அதுகளிண்ட' இடத்தில போய்த்தான் எங்கட பிள்ளையளும் படிக்கோணும்.'அதுகள்' நடத்திற ரியூசந்தான் பெரியது அவங்கள்தான் நல்ல மாஸ்டர்மரும்.அது சரியெண்டு சாதிபாக்கமல் பரவாயில்லையெண்டு நாங்கள் அனுப்பினம்.படிச்சால் சரிதானே சாதியில என்ன கிடக்கு.

ஆனால், அவங்கள் ஒரு நடைமுறை கொண்டந்தாங்கள் பெற்றார் ஆசிரியர் சந்திப்பெண்டு.அது நல்ல விசயம் மெண்டு போனால், சந்திப்பு முடிஞ்சதும் சாப்பாடு எல்லாருக்கும். அவங்கள் சமைச்சதை அவங்கட ஆசிரியர்மாரும் எல்லாப் பிள்ளையளும் பெற்றாரும் ஒண்டாயிருந்து சாப்பிட வேணுமாம்" அவர் கூறி முடித்தார்.

அப்ப நீங்களும் சாப்பிட்டனியளோ? மற்றவரின் கேள்வியில் நக்கல் இருந்தது. "பின்ன சாப்பிடாமல் வரமுடியுமே.பிள்ளையள் படிக்குது.அடுத்தடுத்த மாதாங்களில போகாமல் விடுவம் எண்டால் கட்டாயம் பெற்றார் வரொணுமாம்.அடுத்தமுறைக்கு நான் போகாமல் மனிசியை அனுப்பிவிட்டன்!"


குறிப்பு;

*ஈழத்தில் சாதியென்பதே இல்லை.இல்லாததைப் பற்றிப் பேசக்கூடாது.

*கலியாணத்தில் மட்டும் சாதி பாக்கிறார்கள் மற்றம்படி சாதி இல்லை.

*வன்னியில் சாதி என்பதே இல்லை.

*புலம்பெயர்ந்த நாடுகளில் சாதியை வளர்கிறார்கள்.

*யாழ்ப்பாணத்தில் சில இடங்கலில் மட்டும் சாதி உள்ளது.

* இந்தியாவைப் போல் ஈழத்தில் சாதிய அடக்கு முறைகள் இல்லை.

*இந்தியாவில் சொல்வதைப் போன்ற 'தலித்' என்றபதம் தேவையற்றது 'பஞ்சமர்' என்பதே போதுமானது

மேற் கூறபட்ட சொற்றொடர்கள் என் கண்ணுக்கு கவர்ச்சியாகப் பட்டவை.அதனை சும்மா 'உஷா''துணை' குறிப்பாக தந்துள்ளேன்.

முக்கிய குறிப்பு:
இப்ப இயக்கத்தின் முக்கிய அரசியல் பொறுபுகளில இந்த ஊர் பெடியள்தான் இருகினமாம்.இன்னொன்று, முன்னர் சில பெரிய அடிபாட்டு காரரும் இந்த ஊர்க்காரத்தான்

57 comments:

Anonymous said...

//*இந்தியாவில் சொல்வதைப் போன்ற 'தலித்' என்றபதம் தேவையற்றது 'பஞ்சமர்' என்பதே போதுமானது//

தலைவா சும்மா பின்னீட்டீங்க...

Anonymous said...

////*இந்தியாவில் சொல்வதைப் போன்ற 'தலித்' என்றபதம் தேவையற்றது 'பஞ்சமர்' என்பதே போதுமானது//

தலைவா சும்மா பின்னீட்டீங்க...//

அனானி1, தான் சொல்வதென்னவென்று விளங்கிச் சொல்வதாக நான் நம்பவில்லை.

இப்பதிவு சொல்லும் முடிவைத் தேடினால் எங்காவது எதையாவது பிடித்துக் கொண்டு ஆட வேண்டி வரும்தான்.

சோமி, மிக இயல்பான நடையில் சிலகாலத்தின் முன்னரான ஈழத்தின் சாதீய நிலையை புட்டுப் புட்டு வைத்துள்ளீர்கள். ஆனால் வாசிப்போர் அனானி1 ஐப் போல முடிவுகளைத் தேடப் போகின்றார்கள் என்பது முரண்நகை.

Anonymous said...

Somi: this is a good eye opening for the people who say that castism is dead in Eelam...it is not dead..it is hybernating for the fear of Gun....Castism is alive and kicking well in Eelam more than India

சினேகிதி said...

சோமியண்ணா நீங்கள் சொல்றது எல்லா ஊரிலயும் நடந்திருக்கு நடக்குது. எங்கட ரியூசனில சாதிப்பிரச்சினை பெருசா இல்ல.ஆனால் சில வருடங்களுக்கு முன்பு எங்கட ஊரிலயும் சண்டை வந்து இப்ப சாதி குறைவு என்று சொல்லப்பட்டவையும் ரியுசன் தொடங்கிட்டனம்.காணி விக்கிற பிரச்சனை கோயிலுக்குள்ள வர விடுற பிரச்சினை இப்பிடி நிறைய. எனக்குத் தெரிஞ்சு சாதிபார்க்காத இடம் என்றால் வைத்தியர்மார் மட்டும்தான்.

அண்மையில ஒரு கல்யாண வீடியோ பார்த்தம் வீட்டில அதில கல்யாணப்பெண்ணுக்கு மேக்கப் போட்டுவிட்ட அன்ரியை முந்தி வீட்டுக்குள்ள அண்டமாட்டினம் ஆனால் இப்ப அதுகள் மாறியிருக்கு.

இன்னொரு முக்கியமான விசயம் போராட்டத்தில் சேர்ந்தால தகுதி அதிகாரம் வந்திட்டு என்று அதைத் தங்களை ஒரு காலத்தில அவமானப்படுத்தியவர்களைப் பழிவாங்கப் பயன்படுத்திய கதைகளும் இருக்கு.

மு.மயூரன் said...

அருமையான பதிவு சோமி.


இந்தக் காலப்பகுதியில் தமிழ்மணத்துக்கு மிகவும் தேவையான பதிவு.

பாராட்டுக்கள்.

Anonymous said...

எல்லாம் பிரியதண்ணா இது 'உஷா''துணை' பிரியலயே?

அறிந்தவள் said...

//வெற்றியாகச் சொல்லவேண்டுமானால் //

இப்பிடி என்டா என்னங்கோ...

//எங்களூர் தென்மராட்ச்சியில் இருகிறது//
எப்பிடி? நீங்க பருத்தித்துறை தானே.. அப்பாவின் இடமோ பருத்தி..

hiyoo.. hiyoo.. ithellam enakum therium.. naanum parthirukan... but Saathi prob illa enru yaaru sonnathu.. "When we compare with India its ignorable.."
athai tahn niriaya per solranga...

மற்றும்படி நிறையப் பேருக்கு இரத்தித்தில ஊறிப் போயிருக்கு..
சிலபேர் சந்தர்ப்ப சூழ்நிலைகளால அடக்கி வாசிக்கிறாங்க..
சிலபேர் பார்க்காமலும் விட்டிருக்கினம்...

என்னைப் பொறுத்தவரை இரண்டு முடிவுகள்
1. இந்தியாவுடன் ஒப்பிடும் போது நம்ம சாதிப் பிரச்சினை புறக்கணிக்கலாம்
2. முன்பை விட (நீங்க குறிப்பிட்டட காலத்தை விட) இப்போது சாதி பார்ப்பது குறைந்திருக்கிறது..
ஏன் எதனால் என்பது வேற.. குறைஞ்சிருக்குது..


ஒரு சாதியை இதில காணேலையே.. அவங்க வெள்ளாளர் என்பதங்குள் அடங்கிட்டாங்களோ...

Anonymous said...

சிறிரங்கன் தன்னை வெளிப்படையவே வெள்ளாளன் எண்டு சொன்னார். நீங்கள்? இப்பிடி நாகரீகமா சொல்லுறியள்......

ஆனா மேல சொன்ன விசயங்களிலை உண்மை இல்லாமல் இல்லை. பழசுகள் இப்பவும் மாறம தான் இருக்கு.... புது சந்ததியை மாறும் சாத்தியம் இருக்கா இல்லையா அத சொல்லுங்க.....

Anonymous said...

சினேகிதி!!!!!

"அண்மையில ஒரு கல்யாண வீடியோ பார்த்தம் வீட்டில அதில கல்யாணப்பெண்ணுக்கு மேக்கப் போட்டுவிட்ட அன்ரியை முந்தி வீட்டுக்குள்ள அண்டமாட்டினம் ஆனால் இப்ப அதுகள் மாறியிருக்கு"


அதுகள் என்றால் உட்பொருள் என்ன? எங்கிருந்து, யாருக்காக, யாரால் பயன்படுத்தப்படும் சொற்பிரயோகம்?


கருத்து சொல்ல வருவதற்கு முன்பு பண்பாட்டையும் சேர்த்துக் கற்றிருக்க வேண்டும்.


சோமி!!!!!

தலித் என்றால் என்ன? தமிழில் இந்தச் சொல்லைச் சேர்த்துக் கொள்ளவேண்டிய அவசியம் அல்லது தேவை என்ன? ஏன் இதற்கு நிகரான தமிழ் சொல்லே இல்லையா? தமிழில் சொல்லும் வார்த்தைக்கும் தலித் என்ற மராட்டிய வழிச் சொல்லுக்கும் இடையில் கௌரவ வேறுபாடு உண்டா?


நல்லதம்பி

அறிந்தவள் said...

அதுகள் என்று சினேகிதி சொன்னது அந்த அன்ரியையோ அவர் சார்ந்தவர்களையோ இல்லை என்று நினைக்கிறேன்..


அந்த நடைமுறை மாறியிருக்கு என்பதாகத்தான் இருக்க வேண்டும்.. என் பார்வைக்கு அப்படித்தான் பட்டது..

வித்யா said...

சோமிதரன் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். பள்ளர் பறையர் படித்து நல்ல நிலைக்கு வரக்கூடாதா? எனக்குத் தெரிந்து எத்தனையோ பஞ்சமர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் இலங்கையின் அரசாங்கத்தின் முக்கிய பதவிகள் வகித்தவர்கள் அவர்கள். உதாரணமாக இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் பனை அபிவிருத்திச் சபை என பட்டியல் இடலாம். அதும‌ட்டும‌ல்ல‌ புலிக‌ளின் ப‌டைய‌ணிக‌ள் ப‌ல‌வ‌ற்றிலும் இவ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள்.

இன்ன‌மும் யாழ்ப்பாண‌ ம‌க்க‌ளின் சில‌ ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளை மார்றுவ‌து க‌டின‌ம். எப்ப‌டி சிங்க‌ள‌வ‌ர்க‌ளை ம‌காவம்ச‌ சிந்த‌னையில் இருன்து மாற்றுவ‌து க‌டின‌மோ அதேபோல் தான் யாழ்ப்பாண‌ம‌க்க‌ளை சாதீய‌ச் சின்த‌னையில் இருன்தும் மாற்றுவ‌து க‌டின‌ம். ஆனால் புலிக‌ள் அத‌னைச் செய்துவ‌ருகிறார்க‌ள்.

வ‌ட‌ம‌ராட்சி ம‌க்க‌ள் 87 ஆம் ஆண்டு இட‌ம் பெயர்ன்த‌போது ஊரினைக்கேட்டு அவ‌ர்க‌ள் ப‌ஞ்ச‌ம‌ர் என்றால் த‌ண்ணீர் கூட‌ கொடுக்காத‌ யாழ் ந‌க‌ர‌ம‌க்களை க‌ண்டிருக்கின்றோம் .பின்ன‌ர் அவ‌ர்க‌ளே யாழ்ப்பாண‌ இட‌ம் பெய‌ர்வின் போது ப‌ஞ்ச‌ம‌ர்க‌ளின் வீடுக‌ளில் த‌ங்கியிருன்த‌ன‌ர்.

சோமி said...

/சோமிதரன் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்./

ஒண்டும் சொல்லவரவில்லை...

என்முன்னால் நடந்த கதைகளை மட்டும் சொன்னேன்.

மற்றது நான் தந்த குறிப்புகளை யாரோ முடிவெண்டு குழம்பியிருக்கிறார்கள் போல..:)

புலிகளிடமும் சட்டமிருக்கு இந்திய அரசிடமும் சட்டமிருக்கு.

சினேகிதி said...

நல்லதம்பி,
அதுகள் = அந்த நிலமை ,அந்த பழக்கம் ,அந்தக் குணம்
மாறியிருக்கு என்று சொன்னான். பண்பாடு பற்றி மிகவும் பண்பாகச் சொன்னதுக்கு உங்களுக்கு நன்றி.

சயந்தன் said...

உசா துணையோ ?
சொல்லவேயில்லை :)

எல்லாருக்குள்ளும் உயர் சாதி மனப்பான்மை இருக்குமெண்டுதான் நம்புறன். உதாரணம் சொல்லவோ :)

தமிழ்பித்தன் said...

நீங்கள் சொல்வது உண்மை நான் தமிழ்மணத்துக்கு வரும் வரை தலித்தென்றோ பார்ப்பனியம் என்பதற்கோ அர்த்தங்கள் விளங்கியிருக்க வில்லை
எங்கள் ஊரில் பள்ளன் பறையன் நளவன் என்ற வார்த்தை பிரயோகம் பாவிப்பதை கேள்வியுற்றிருக்கிறேன் ஆனால் நேரடியாக அதை ஒரு வரை நோக்கி பிரயோகித்தால் தற்காலத்தில் சுமார் (10 வருடகாலமாக) அதன் விளைவு பயங்கரமாக இருக்கும் பல காதல் திருமணங்கள் கலப்பு திருமணங்கலாக நடங்திருக்கின்றன கரையானோடு ஒடிய பெட்டைக்கு தகப்பன் முறைப்படி திருமணம் செய்து வைத்ததை நேரில் கண்டிருக்கிறேன் கோவிய வெள்ளார்களுக்கு இடையே பேச்சு திருமணங்கள் கூட நடக்கின்றன என்னை பொறுத்த மட்டில் பேச்சு திருமணம் தவிர்ந்த வேறு எதிலும் ஜாதியில்லை அதுவும் விரைவில் மாறும்

Anonymous said...

lot of people are saying that Castism is milder in TE compared to India..but if anyof you said that your marriages(except LOVE marriages) are fixed without considering CAST i will accept it is lesser in TE....otherwise it is there ..may be we don't kill who fetch water from common well...because we all have well in our own backyard...otherwise i still remember cocnut shell, tin-milk tin, jam bottle as serving cup for tea...
in all Jaffna houses dogs had better serving plates than a wood chopper or who came to clean yards and etc...

சோமி said...

/ கோவிய வெள்ளார்களுக்கு இடையே பேச்சு திருமணங்கள் கூட நடக்கின்றன என்னை பொறுத்த மட்டில் பேச்சு திருமணம் தவிர்ந்த வேறு எதிலும் ஜாதியில்லை அதுவும் விரைவில் மாறும்/
?!
தைப்பொங்கலுக்கு ஒவொருத்தரும் மற்றவையளுக்கு பொங்கல் குடுகிறது வழக்கம்.
இந்த ஒவொருத்தரில் மறந்தும் வெள்ளாளர் மற்றசாதியருக்கு கொடார்.காரணம் அவர்களும் திருப்பி கொடுத்தால் என்ன செய்வதென்ற பயம்..அப்பு பித்தா இட்தில் இருகிறதும் சாதிதான்.

உமக்கு 'கோவியவெள்ளார்' கதை தெரியுமோ? பிறகு விரிவாச் சொல்லுறன்.

கொழுவி said...
This comment has been removed by a blog administrator.
சோமி said...

மட்டக்களபிலும் யாழ்ப்பாணத்திலும் சாதியதின் பல்பரிமாணங்களை பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் நான் பாத்திருகிறேன். மட்டகளப்பில் மண்டூரில் உள்ள வெள்ளாருக்கும் சித்தாண்டி வெள்ளாளருக்கும் யாழ்ப்பண வெள்ளாளருக்கும் இருந்த உறவு முதல் சதியத்தின் ஒரு படியாகவே மட்டு -யாழ் பிரதேச வாதம் தலையெடுத்ததையும் பலர் சொல்லக் கேட்டிருகிறன்.

இதைப் போல ஈழத்தில் நடந்த பலகதைகளைத் தொடர்ந்து சொல்லலாம்.ஆனால் நாங்களும் எதையாவது சொல்லி போராட வேணும் என்பதற்காகவல்ல.

மு.மயூரன் said...

வே.பிரபாகரன் என்ன சாதி சோமி?

கரையார் எண்டு கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையா?

அவரது சாதி யாழ்ப்பாண சாதிப்படி நிலையில் எங்கே இருக்கிறது?

யாருக்கு மேல, யாருக்கு கீழ?

Anonymous said...

பிரபாகரனின் சாதி என்னவென்று தலித் மாநாடு நடத்தும் எல்லோருக்கும் தெரியும். கடந்த தலைமுறைகள், பழசுகள் எல்லாத்துக்கும் பிரபாகரன் சாதி தெரியும் என்பதற்காக ஒரு உதாரணத்துக்குச் சொன்னன்.

ஆனா நம்ம மயூரனுக்குத் தெரியேல்ல. அவர் ஈழத்திலை வசிக்கிறவர். ஏனென்றால் யாரும் யாரையும் சாதி என்னவென விசாரித்துக் கொண்டிருப்பதில்லை இந்தக் காலத்தில்.

நேற்று வீரச்சாவடைந்த 21 கரும்புலிகளதும் சாதிகளைப் புலிகள் வெளியிடாமைக்குக் தலித் மாநாட்டில் கண்டனம் தெரிவித்தவையோ என ஆராவது போனவர்கள் சொல்லுங்கள்.

சோமி said...

நல்ல கேள்வி மயூரன். யாழ்ப்பாண சாதிகள் பற்றி கலாநிதி ரகுபதி அவர்களிடம் பேசிய போது நிறையத் தகவல்கள் சொனார்கள்.

ஆங்கில வராலற்றாளர்களும் இது தொடர்பில் சில ஆய்வுகட்டுரைகளை எழுதியிருப்பதைக் காண முடிந்தது.ஆனாலும் இதுவரையில் யாழ் சமூக அமைப்பு பற்றிய விரிவான ஆய்வு நூலை நான் படிக்கவில்லை.

சரி, என்ன கேட்டிங்க மயூரன்.

வி.பு தலைவர் வே.பிரபாகரன் ,கரையார்தான்.வடமராச்சியில் வெள்ளாளரும் கரையாரும் ஒருகாலதில் ஆதிக்க வகுப்பாகவே இருந்திருகிறார்கள்.இதற்க்கு வெள்ளாள உடையார்களுக்கு சொந்தமான பெரிய வீடுகலைப் போன்ற வீடுகளை வல்வெட்டித்துறையில் பார்க்கலாம்.

ஆனால் இப்போது இதுபோன்ற கேள்விகளைக் கேட்டும் இதுபற்றி அதிக சத்தம் போட்டும் சாதிய தீயில் குளிர்காய்வதும்.அதனைத் தங்களின் இருப்புக்காக பயன் படுத்துவதும் மிக கேவலமான சுய அரசியல்.

Anonymous said...

கரையார் கரையோர எல்லைக் காவற்படையினரின் அழித்தோன்றல்கள். அதனால் வெள்ளாளரின் "வீரங்கள்" அவர்களிடம் எடுபடவில்லை. கரையார் அதிகம் வாழும் பிரதேசங்களில் அவர்கள் ஆதிக்கம் உள்ளது.

ஆனால் யாழ்ப்பாணச் சாதிப் படிநிலையில் கரையாரின் இடம் மிகக் கீழேயே உள்ளது. கரையாரும் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படாதவர்கள். அந்த வகையில் பள்ளர், பறையர் ஆகிய சாதிகளின் நிலையே கரையாருடையதும்.

ஒரு கரையானைத் தான் தமிழினம் தம் தலைவனாக ஏற்றுக் கொண்டுள்ளது. இதை விட வேறு என்னத்தைச் சொல்ல?

மு.மயூரன் said...

நான் கேட்டதற்குக்காரணம் விடுதலைப்புலித்தலைமை - சாதி - அதை யாழ்ப்பாண மக்கள் ஏற்றுக்கொண்ட விதம் போன்ற அடிப்படைகளை அறியவும் அதன்மூலம் ஏதாவதொரு சமுக்கவியல் புள்ளியை எமது தேசியப்போராட்டம் குறித்து அறியலமா என்ற தேடலும் தான்.

உண்மையிலேயே தெரியாமல் தான் கேட்கிறேன். நான் வளர்ந்த திருக்கோணமலை சூழல் அப்படி. அங்கு சாதியம் வேறான ஒரு இயல்பினைக் கொண்டிருக்கிறது.

நளாயினி said...

எங்கேயும் பாருங்கள் கரையார் தான் தாங்கள் இன்ன சாதி என நெஞ்சுயர்த்தி சொல்வார்கள்.அது அவர்களைப்பொறுத்தவரை பெரிய கௌரவ சாதியாக அவர்கள் நினைப்பது தான். வல்வெட்டித்துறையுக்கை ஆரும் வெளியூர் கிராமத்து பெடியள் போகவே ஏலாது.கள்ளக்கடத்தல் ஏரியா எண்டு ஒரு பயம். அடுத்தது வடிவான பொம்பிளைப்பிள்ளையள் அங்கை நிறைய எண்டபடியா பெடியள் போனா அடி உதை தான். வல்வெட்டித்துறை ஒரு கோட்டை மாதிரி. இப்படி நான் கேள்விப்பட்டது வடமராச்சி பெடியங்கள் சொல்லி தெரியும்.

கொண்டோடி said...

கரையார் நெஞ்சுயர்த்திச் சொல்வதற்கு பிரபாகரன் கரையார் வகுப்பில் பிறந்ததும் ஒரு காரணம். (வல்வெட்டித்துறையார் தங்கட ஊரைப் பற்றிப் பெருமிதப்படுவதற்கும் முதன்மைக்காரணமாக பிரபாகரன் இருக்கிறார் என்பதே இன்றுள்ள நிலைமை.)
நளாயினி சொல்வது போல் வல்வெட்டித்துறையில் கரையாரின் கை ஓங்கியே இருந்தது. அங்கு அவர்களின் சனச்செறிவு மற்றும் பொருளாதார பலம் என்பன அதற்குக் காரணம். கரையூர், பாசையூரிலும் இதேநிலைமை.
ஆனால் யாழ்ப்பாணத்தின் எல்லா இடத்திலும் இந்நிலையில்லை. சிலவிடங்களில் கரையார் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிட்டவாக வருவார்கள். சிலவிடங்களில் நடுத்தரமாக வருவார்கள். (கரையாரும் தாழ்த்தப்பட்டவர்களே என டோளர் சுகன் சொன்னதாக எங்கோ அறிந்தேன்; உண்மையா?)

யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்துக்குப் பொருளாதாரத் தடையிருந்தபோது தமிழகத்திலிருந்து பொருட்கள் கடத்திவரும் வல்லமை வாய்க்கப்பெற்ற காரணத்தால் கரையாரின் நிலை சிலவிடங்களில் சடுதியாக உயர்ந்தது. ஆனால் மறுவளத்தில் கரையோரக் கிராமங்கள் இராணுவத்திடம் பிடிபட்டபோது, இடப்பெயர்வுகளால் அதிகம் நொடித்துப்போனவர்களும் கரையார்தான்.

மற்றும்படி ஈழத்துக்கான போராட்ட அமைப்புக்களில் வெள்ளாத் தலைமைநீக்கம் செய்யப்பட்ட இயக்கம் புலிகள்தான் எனலாம். இன்றும்கூட புலிகளின் முக்கிய துறைப்பொறுப்பாளர்கள், களமுனைத் தளபதிகள் என எடுத்துப்பார்த்தால் இடைநிலை மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரே அதிகம்.

பிரபாகரனையும் புலிகளையும் யாழ்ப்பாண உயர் வகுப்பு எந்தச் சங்கடமுமின்றி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே உண்மை. தவிர்க்க முடியாமல் அது நடந்துள்ளது.

நிற்க,
மயூரன்,
நீங்கள் சுத்த மோசம்.
வெளிநாட்டு 'டோளர்கள்' புலிகளின் தலைமையிலிருந்து முதுநிலை, இடைநிலை, கடைநிலைத் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் அனைவரினதும் சாதிகளை விரல் நுனியில் வைத்திருக்கும்போது நீங்கள் பிரபாகரனின் சாதி என்னவென்று தெரியாமல் இருப்பது படு முட்டாள்தனம். "எங்களுக்கே" உவங்கள் சொல்லித்தான் தமிழ்ச்செல்வன் என்ன சாதி எண்டு தெரியும். இன்னும் வன்னியில ஏராளம் பேருக்கு தமிழ்ச்செல்வனின்ர சாதி தெரியாது எண்டது வேற விசயம்.

தமிழ்ச்செல்வன் ஆர், சூசை என்ன சாதி, பொட்டு என்ன சாதி, பால்ராஜ், சொர்ணம், கருணா என்ன சாதி எண்டு பொதுவுடைமை, சமவுடைமை, சமதர்மப் போராளி டோளர்களிடம் கேட்டால் விலாவாரியாக விளக்குவார்கள். திலீபனைப் பற்றிக்கூட சாதியிழுக்காமல் அவர்களால் கதைக்க முடியாது.

கொண்டோடி said...

மயூரன்,
யாழ்ப்பாண உயர்வர்க்கம் எப்படி விடுதலைப்போராட்டத் தலைமையை உள்வாங்கிக்கொண்டது, இன்னும் அதை ஜீரணிக்க முடியாமலுள்ளது என்பது தொடர்பாக 'முன்னாள் கல்லூரி அதிபர் ஒருவரின்' புத்தகத்தை விமர்சித்து உங்கள் 'டோளர்' ரயாகரன் எழுதிய இடுகையைப் படிக்கவும்.
அந்தக் கட்டுரையில் டோளரோடு உடன்பட ஒரு விசயமுண்டு. நாளை புலிகளின் தலைமையும் தோற்கடிக்கப்பட்டால் "யாழப்பாண உயர்வர்க்க மனோநிலையிலுள்ளவர்கள்" குத்துக்கரணமடித்து தமது மனநிலையை வெளிப்படுத்துவார்கள் என்பதே அது.

mathi said...

ottrumaiyai kulaikka sathi

Anonymous said...

இந்த இடுக்கையிட்டவனும் இதில் பங்கு பற்றிய அனைத்து பிரமுகர்களும் தங்கள் சாதிகளை வெளிப்படுத்துவார்களா?

மற்றவர்களது சாதிகளைக் கேட்பதும் அதற்கு பதில்கூறுவதும் அயோக்கியப் பிறப்புகளின் குணாதிசயம்.

நல்லதம்பி

Anonymous said...

இந்த இடுக்கையிட்டவனும் இதில் பங்கு பற்றிய அனைத்து பிரமுகர்களும் தங்கள் சாதிகளை வெளிப்படுத்துவார்களா?

மற்றவர்களது சாதிகளைக் கேட்பதும் அதற்கு பதில்கூறுவதும் அயோக்கியப் பிறப்புகளின் குணாதிசயம்.

நல்லதம்பி

மு.மயூரன் said...

//ஆனால் இப்போது இதுபோன்ற கேள்விகளைக் கேட்டும் இதுபற்றி அதிக சத்தம் போட்டும் சாதிய தீயில் குளிர்காய்வதும்.அதனைத் தங்களின் இருப்புக்காக பயன் படுத்துவதும் மிக கேவலமான சுய அரசியல்.//

இந்தக்கேள்வியைக் கேட்டது தவறென்கிறீர்களா சோமி?

Anonymous said...

//இந்த இடுக்கையிட்டவனும் இதில் பங்கு பற்றிய அனைத்து பிரமுகர்களும் தங்கள் சாதிகளை வெளிப்படுத்துவார்களா?

மற்றவர்களது சாதிகளைக் கேட்பதும் அதற்கு பதில்கூறுவதும் அயோக்கியப் பிறப்புகளின் குணாதிசயம்.

நல்லதம்பி//

வந்துட்டாங்கையா வந்துட்டாங்க.

இந்த முட்டாள்களுக்கு ஈழத்தில் சாதி கேட்பது கீழ்த்தரமானதென்பது விளங்குவதில்லை. யாரும் யாரையும் இங்கே சாதி கேட்பதில்லை கெட்டதம்பி.

அது கீழ்த்தரமானது. உயர்/தாழ் எனப்படும் எவரும் எவரைச் சாதி கேட்ட்டாலும் அது கேவலம். உவர் சாதி பார்க்கிறவர் என்று ஒதுக்கப்படுவதும் உண்டு.

Anonymous said...

test

ஈழநாதன்(Eelanathan) said...

ஈழத்தின் சாதி அடுக்கு இடத்துக்கு இடம் தெளிவான வேறுபாடுகளைக் கொண்டிருக்கிறது.வெள்ளாளர்களிலும் பண்ணையார்களுக்கு ஈடாக நிலபுலன் வைத்திருந்த உடையார் எனப்படுவோர் வெள்ளாளர்களிலும் தாங்கள் உயர்வு என்று சொல்லி வந்திருக்கிறார்கள்.வெள்ளாளர்களுக்கு அடுத்து இடைநிலைச் சாதிகளான கோவியர்,குசவர்,தச்சர்,தட்டார் போன்றோர் இருந்திருக்கிறார்கள் திருமண உறவுகளை வைத்துப் பார்த்தால் இவர்களுக்கு அடுத்ததாகத் தான் கரையார் எனப்படும் மீனவர்கள் வருகிறார்கள்.அதற்கும் கீழே குடிமக்கள் எனப்படும் பள்ளர்,நளவர்,வண்ணார்,அம்பட்டர்,பறையர் ஆகியோர் வருகிறார்கள் இந்த ஐந்து பிரிவுகளை மட்டுமே டானியல் அவர்கள் பஞ்சமர் என்ற வகைக்குள் அடக்குகிறார்.மற்றைய இடைநிலைச் சாதிகள் வெள்ளாளரைச் சார்ந்து தொழில் செய்தாலும் முற்றிலும் வெள்ளாளர்களில் தங்கியிருக்க நேரவில்லை.ஆனால் பஞ்சமர்கள் மிக அண்மைக் காலம் வரை வெள்ளாளர்களுக்கு குடிமைத் தொழில் செய்து அவர்களையும் மற்ற இடைநிலைச் சாதிகளையும் சார்ந்து வாழவேண்டியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

இதை ஒரு தகவலுக்காக மட்டுமே இங்கே சொல்கிறேன் மற்றும்படி சோமியின் பதிவு பற்றியோ பின்னூட்டங்கள் பற்றியோ எதுவும் விவாதிக்க விரும்பவில்லை.பேய் இருக்கிறதா இல்லையா என்ற விவாதத்திற்கு ஒருவன் உடன்படும் போதே தன்னையும் அறியாமல் பேயை நம்ப ஆரம்பிகிறான் என்பது எனது கருத்து

Anonymous said...

வழக்கில் முக்கியர்கள் எனப்படுகின்ற ஒரு சாதி
முக்குவர்கள் எனவும் சொல்வதுண்டு. மட்டக்களப்பில் அதிகமாக உள்ளார்கள். யாழ்ப்பாணத்திலும் கணிசமான அளவில் உண்டு. ஆயினும் அவர்கள் குறித்து சாதிய உரையாடல்களில் அதிகம் பேசப்படுவதில்லை.

எனக்கென்னவோ ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்கு கீழானவர்கள் என நம்பும் சாதியைச் சேர்ந்தவர்களை கீழ் நிலையில் வைத்தே அணுகினார்கள்.

அற்புதன் said...

எனக்கு இதில சில கேள்வியள் கிடக்கு பேருங்கோ எனக்கு உந்தச் சாதிகள் பற்றிய போதிய அறிவு இல்லை.

இப்ப பத்மானாப அய்யர் அய்யர் சரி, வேலுப்பிள்ளை பிரபாகரன் கரையாரா , இல்லை பிள்ளையா? எனேண்டா கரையார் தலித்துக்கும் கீழ எண்டுறியள் ஆனா பிரபாகரன் பெயரில பிள்ளை இருக்கு.ஆனா தமிழ் நாட்டில பிள்ளைமார் எண்டு ஒரு ஆதிக்கச்சாதி இருப்பதாக டோழர் சுகுணாவும் வளராத மதியும் பி ன்னவினத்துவமா பேசி இருந்தார்கள் இல்ல இல்ல ஒரு கலகம் செய்திருந்தார்கள்.

உப்ப பிரபாகரன் ஒரு பாஸிஸ்ட் எண்டு டோழர் இராயாவும் தீவு வேளாளர் சிறிரங்கனும் சொல்லுகினம்.பாஸிட் எண்டா அவர் சொல்லுற பேச்சுக்கு வேறு பேச்சு ஒருத்தரும் சொல்ல ஏலாது.அப்ப பாருங்கோ ஒரு தலித்திண்ட கொன்ரோலுக்க தான் தமிழ் மக்களும் இயக்கமும் இருக்கினம்.அப்ப பாருங்கோ ஏன் உந்த பாரிசில தலித்து மனாடு கூடின டொலர்கள் தோழர் பிரபாகருனுக்கும் புலிகளுக்கும் அழைப்பு விடேல்ல? இல்ல எங்க தலித்தெண்டு போட்டிருந்தாலும் டோழர் தமிழச்சி முதல் பின் நவீனதுவத் தோழர்கள் வரை ஆதாரவு குடிக்கினம்.அப்ப ஒரு தலித்து தலமை தாங்கிற ஒரு பாசிச சர்வாதிகார இயக்கதுக்கு ஏன் உவை எதிரா இருக்கினம்? ஒண்டுமா விளங்கேல்ல?

வேளாளரால் தொட முடியாத உயரத்தில பிரபாகரன் இருகிறார்.ஈழத்து வேளாளரை எப்படிக் கையாள்வது என்பதையும் சாதியத்தை எப்படிக் கையாள்வது என்பது பற்றியும் நடைமுறை ரீதியா தெரின்ச்ச ஒரே தலைவர் பிரபாகரன் எண்டு தாரகி ஒரு முறை சொன்னதாக நாபகம்.

அதோட இன்னொரு பகிடி டோழர் ரயா தலித்து மானடுக்குப் போய்ட்டு வந்து சொல்லுறார் அங்க உவங்கள் சாதியத்தை ஒழிக்க முசிலிமா மாறட்டாம் எண்டு சொல்லுறாங்கள் எண்டு இசுலாமியரில் சாதி இருக்கு எண்டு ஒரு கட்டுரை போடுறார்.அட அப்ப டோழர் இரயா உந்த சுகனும் சோபாசக்தியும் சத்தியக்கடதாசியையும் படிக்காமல தலித்து மானட்டுக்குப் போனவர்.அட உதுக்கு தமிழச்சியே பறுவாயில்லை. டோழர் சுகனின் கருதுப்படி தலிதுக்கள் எல்லாம் பவுதர்களாகவோ இசுலாமியர்களாகவோ மாறினால் சாதியப்பிரச்சினையும் ஒழிந்தது இனப்பிரச்சினையும் ஒழிந்தது.அனாப் பாருங்கோ சிங்கள பவுதருக்க அப்ப ஏன் சாதி இருக்குது.உட ரட்ட பகத்த ரட்ட கொவிகம எண்டு தமிழருக்க இருக்கிற சாதி முழுக்கக் கிடக்கு.

மதம் மாறினா சாதி ஒழியுமா? பெரியார் மதங்களையே ஒழிக்கச் சொன்னவர் அவர் பெயரைப் போட்டு மதம் மாறினா உள்ள இனப்போராட்டம் சாதியப் போராட்டம் வர்க்கப்போராட்டம் எல்லாம் ஒழியுமாம்.

உவங்களும் உவங்கட கதையளும், எங்க போய் தலையை முட்டுறது.

கானா பிரபா said...

//Anonymous said...
எனக்கென்னவோ ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்கு கீழானவர்கள் என நம்பும் சாதியைச் சேர்ந்தவர்களை கீழ் நிலையில் வைத்தே அணுகினார்கள்.//

good point

Eelavan said...

//நிற்க,
மயூரன்,
நீங்கள் சுத்த மோசம்.
வெளிநாட்டு 'டோளர்கள்' புலிகளின் தலைமையிலிருந்து முதுநிலை, இடைநிலை, கடைநிலைத் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் அனைவரினதும் சாதிகளை விரல் நுனியில் வைத்திருக்கும்போது நீங்கள் பிரபாகரனின் சாதி என்னவென்று தெரியாமல் இருப்பது படு முட்டாள்தனம். "எங்களுக்கே" உவங்கள் சொல்லித்தான் தமிழ்ச்செல்வன் என்ன சாதி எண்டு தெரியும். இன்னும் வன்னியில ஏராளம் பேருக்கு தமிழ்ச்செல்வனின்ர சாதி தெரியாது எண்டது வேற விசயம்.

தமிழ்ச்செல்வன் ஆர், சூசை என்ன சாதி, பொட்டு என்ன சாதி, பால்ராஜ், சொர்ணம், கருணா என்ன சாதி எண்டு பொதுவுடைமை, சமவுடைமை, சமதர்மப் போராளி டோளர்களிடம் கேட்டால் விலாவாரியாக விளக்குவார்கள். திலீபனைப் பற்றிக்கூட சாதியிழுக்காமல் அவர்களால் கதைக்க முடியாது.//

100% unmai.

Nallathampi neer sariyana kedda thampi polum

சோமி said...

'சாதிபற்றி ஏதுமே அறியாத' திருகோணமலை சூழலில் வளர்ந்த மயூரனுக்கும் தெள்ளத்தெளிவாக விளக்கம் தந்த ஈழநாதனுக்கும் நன்றி.

மயூரன்,ஈழத்தில் எல்லா ஊர்களிலும் சாதி இருந்திருகிறது. அது உங்களுக்கு தெரியும்.அன்புவெளியில் இருந்து அனுராதபுரம் சந்தி வரை இருப்பவர்கள் மெயின் வீதியின் முடிவில் மிக நெருக்கமாக வாழக்கூடிய மக்களை எப்படிப் பாத்தார்கள் என்பது குறித்து ஒரு பதிவு போடுங்கள்.உங்களுக்கு திருகோணமலை பற்றி தெரிந்திருக்கும்.அங்குள்ள கரையார் பற்றியும் தெரியும் . உங்களுக்கு தெரியாதது பிரபாகரன் என்ன சாதியென்பதும் (உங்கள் நண்பர் பேரா.கா.சிவத்தம்பி கூடவா சொல்லவில்லை)யாழ்ப்பாண சாதிய படி நிலைகளும்தான். எனக்கு கூட மட்டக்களப்பில் இருக்கும் வரை யாழ் சாதிகளும் அவற்றின் படிநிலைகளும் முழுமையாக தெரியாதுதான். உங்கள் கேள்வியில் தப்பில்லை கேள்விகேட்கலாம். தெரியாததை தெரிவதுததனே நல்லது. ஆனால் இது பற்றி சுமார் மூன்றரை வருடங்களுக்கு முன்னால் நாங்கள் பேசியிருந்தோம்.அது இப்போது உங்களுக்கு மறந்துவிட்டிருக்காலாம்.மீண்டும் நிறய விடையங்களை பரஸ்பரம் பரிமாறலாம். தோழர்கள் பலரும் பேசும் பல் வேறு கருத்தியல் மொழியாடல்கள் எனக்கு புரிவதில்லையாதலால் என்ன்னிடமும் அது என்ன இது என்ன என நிறைய கேள்விகள் இருக்கு.

/பேய் இருக்கிறதா இல்லையா என்ற விவாதத்திற்கு ஒருவன் உடன்படும் போதே தன்னையும் அறியாமல் பேயை நம்ப ஆரம்பிகிறான் என்பது எனது கருத்து/
பேயே இல்லை என்று பூச்சாண்டி காட்டும் போது பேய் இருக்கிறதா இல்லையா என்ற விவாதம் அவசியம்.பேயை கூசாவுக்குள் எத்தனைகாலம்தான் அடைத்து வைக்க முடியும்.யாரவது திறந்துவிட்டால் அது புதிய வீரியத்தோடு வரும்.அதை இப்போதே விரட்டுவதுதானே நல்லது.

அந்த பேயை வைத்து புழைப்பு நடத்துபவர்களுக்கு நாம் சந்தர்ப்பம் வழங்கக் கூடது என்றால் நாமே அந்த பேயை விரட்ட வேண்டும்.

மலைநாடான் said...

சோமி!

பல விடயங்களைச் தொட்டுச் சென்றிருக்கின்றீர்கள். ஆனாலும் ஈழத்தில் சாதீயம் பற்றித் தெரியாத ஒருவர் முழுமையாகத் தெரிந்து கொள்ள இத்தகவல் போதுமானவையாக இல்லை. அதனால் அவரவர் புரிதலுக்கு ஏற்ப கருத்துக் கொள்ளும் நிலையும் உண்டு. பதிவுக்கு நன்றி.

Anonymous said...

//நான் கேட்டதற்குக்காரணம் விடுதலைப்புலித்தலைமை - சாதி - அதை யாழ்ப்பாண மக்கள் ஏற்றுக்கொண்ட விதம் போன்ற அடிப்படைகளை அறியவும் அதன்மூலம் ஏதாவதொரு சமுக்கவியல் புள்ளியை எமது தேசியப்போராட்டம் குறித்து அறியலமா என்ற தேடலும் தான்.//

என அதிமேதாவித்தனமாகக் கேட்ட மயூரனுக்கான

//உங்களுக்கு தெரியாதது பிரபாகரன் என்ன சாதியென்பதும் (உங்கள் நண்பர் பேரா.கா.சிவத்தம்பி கூடவா சொல்லவில்லை)//
//அது இப்போது உங்களுக்கு மறந்துவிட்டிருக்காலாம்.//

என்ற சோமியின் பதிகளை ரசிக்கிறேன்.

"யாழ்ப்பாண மக்கள் ஏற்றமை" என்றும் "தேடல்" எனச் சொல்லிப் புல்லரிக்க வைப்பதும் என்ன மனநிலையின் வெளிப்படுபாடுகள்?

Anonymous said...

ஈழநாதனிடம் ஒரு கேள்வி,
பேய் இருக்கிறதா? இல்லையா?
(நீங்கள் சாதி பற்றி ஒண்டும் கூற வேண்டாம்..)

Anonymous said...

என்னடா தமிழ் இது, ஒரு இழவும் புரியவில்லை. இதில் இவர்கள் தமிழ்தான் சிறந்த தமிழ் என்று கதைக்கிறார்கள் (இந்த ஒரு வார்த்தையைத்தான் நாம் பயன்படுத்தும் சொல்கிறார்கள், கூறுகிறார்கள், செப்புகிறார்கள், இயம்புகிறார்கள், மொழிந்தார்கள் என்ற பல சொற்களுக்கு பயன்படுத்துகிறார்கள்). சென்ற வாரம் நானும் என் மனைவியும் ஒரு இலங்கைத்தமிழர் நடத்தும் கடைக்கு சென்றபோது வெத்தலையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது வெத்தலை அதிகமாக விளைவதால் தான் வெத்தலக்குண்டு என்ற பெயர்வந்தது என்றும், இல்லை அது வத்தலக்குண்டு என்று விவாதித்துக்கொண்டிருந்தபோது சுமார் 50 வயது மதிக்கத்தக்க இரு இலங்கைத்தமிழ்ப் பெண் எங்களுக்கு இடையே வந்து "நீங்கள் இந்தியாவில் இருந்து வந்துள்ளீர்கள், நான் இலங்கைப்பெண் , ஆனால் வத்தலக்குண்டு இன்னொரு பெயர் உண்டு, உங்களுக்கு தெரியுமா? " என்று வினவினார். நானும் என் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தோம், பிறகு சரி நீங்களே சொல்லுங்கள் என்று கேட்டோம். அதற்கு அவர் சொன்னார் "ஊட்டி" என்று!. அதற்கு நாங்கள் "ஊட்டி"-க்கு இன்னொரு பெயர் உதகமண்டலம் அல்லது உதகை, வத்தலக்குண்டுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று சொல்ல அந்த அம்மாவின் முகம் எதோபோல ஆனது. இது ஒரு உதாரணம் தான் இது போல தனக்குதான் எல்லாமே தெரியும், தமிழனெறால் அது இலங்கைத்தமிழ்ன் தான் என்கிற ரீதியில் இவர்களின் நடவெடிக்கைகள், சில சம்யங்களில் சகித்துக்கொள்ள முடியவில்லை.

-குமரன்

மு.மயூரன் said...

//Anonymous said...

ஈழநாதனிடம் ஒரு கேள்வி,
பேய் இருக்கிறதா? இல்லையா?
(நீங்கள் சாதி பற்றி ஒண்டும் கூற வேண்டாம்..)
//

அப்பிடி போடு!


சோமிதரன், உங்கள் கேள்விகளுக்கும், அதைக்கேட்ட உங்களுக்கும் தெளிவான "பதில்" தருகிறேன்.

Anonymous said...

//என்ற சோமியின் பதிகளை ரசிக்கிறேன்.//

பதில்களை மட்டும் ரசிக்கவும்.

தலைவி
சோமி ரசிகைகள் மன்றம்
நியு டெல்லி

Anonymous said...

மு.மயூரன்
//..சோமிதரன், உங்கள் கேள்விகளுக்கும், அதைக்கேட்ட உங்களுக்கும் தெளிவான "பதில்" தருகிறேன்...///
மயூரனின் தெளிவான பதில் எங்கே?
'தெளிய' போய்விட்டாரா மயூரன்?

//...//Anonymous said...

ஈழநாதனிடம் ஒரு கேள்வி,
பேய் இருக்கிறதா? இல்லையா?
(நீங்கள் சாதி பற்றி ஒண்டும் கூற வேண்டாம்..)
//

அப்பிடி போடு!..///
ஈழநாதனும் ஓடி ஒளிந்துவிட்டாரா?
இவர்கள் ஏன் இப்பிடி என்று யாராவது சொல்லுங்கப்பா..

Anonymous said...

அவர்கள் அப்படித்தான்!
ஆனால் தங்கள் கருத்துக்களுக்கு உரிமை கூறும் வகையில் சொந்தப் பெயரில் வருபவர்கள் - கேணைத்தனமான கருத்துக்களைக் கூறினாலுங் கூட....

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

நன்றாக இருக்கிறது நண்பரே

Anonymous said...

அடப் பாவிகளா இன்னும் இது பற்றிக் கதைக்கிறியளே? உங்கட தலையில இடி விழ!

Anonymous said...

http://thesamnet.co.uk/?p=13853
Arulpragasam on September 9, 2010 2:07 am
நமது சமுகத்திலிருக்கும் முதலாவது பிழையான கொள்கை வெள்ளாளா; என்றால் வெள்ளாண்மை செய்வோர் கரையார் என்றால் மீன்பிடிப்போர்.வெள்ளாளா; என அடையாளப்படுத்துவோர் எல்லாரும் விவசாயிகளல்ல கரையாரென அடையாளப்படுத்தப்படுவோர் எல்லாரும் மீன்பிடிப்போரல்ல.பள்ளா;தான் வெள்ளாளா; என ஆய்வு மூலம் அறியமுடிகின்றது. ஆனால் கரையாரென அடையாளப்படுத்துவோருள் குருகுலத்தவா;கள் மீன்பிடிப்போரல்ல. தமிழா;களின் பிரதான உணவான நெற்பயிற்ச்செய்கையை கண்டுபிடித்து முதலில் நாகாpகமடைந்தவா;கள் தமிழா;கள் அவா;களே.

இன்னும் பல விளக்கங்களைத் தர தயாராகவுள்ளேன்

selva2611 said...

யாழ்பாணச் சாதியம் பற்றிய உண்மைகள்.
கீழ் Uncategorized பதிபவர் unnmaikal கருத்துத் தெரிவிக்கவும்
கள்ளர் பறையர் கனத்த அகம்படியார் மெள்ள மெள்ள இங்கு வந்து வெள்ளாளர் ஆகினர்.
இன்றைய யாழ்ப்பாண வெள்ளாளர் 100 வருடஙகளுக்குமுன் சாதி மாறியவர்கள். இது வரலாற்றின் அடிப்பைடயில் மிகவும் உண்மையானது. இவர்கள் ஒரு கலப்புச் சாதியினர். மடப்பள்ளி, வடுகர், இடயர், நயினார், வெள்ளாளர், கள்ளர், மறவர், அகம்படியர், செங்குந்தர், சேணியர், தனக்காரர், சாலியர்( நெசவுப்பறையர்), தவஷிகள்ஆகியோரின் கலப்புத்தான் இந்த யாழ்ப்பாணத்து வெள்ளாளர். இது வரலாற்றினடிப்படையிலும் நடைமுறைச்செய்ற்பாடுகளினடிப்படையிலும் மிக மிகத் தெளிவான உண்மையாகும். இச் சாதி மாற்றங்கள் அன்று கண்டுகொள்ளாமல் அல்லது வெளிக்கொணரப்படாமலிருந்தமைக்கு, வெள்ளாளர் எனும் பெயரின் கீழ் அல்லது அதன் மூலம் ஒருமித்த சாதியப்பெரும்பான்மை தேவையாயிருந்தமையே காரணமாகும். இக்கலப்புப் பெரும்பான்மை பிற்காலங்களில் யாழ்மாவட்டத்தில் ஏனைய சமூகப்பிரிவினர்ககு எதிரானதாக இருந்துவந்துள்ளது. இவைபற்றிய உண்மைகளை பின்வரும் வரலாற்றுத்தரவுகள் மெய்ப்பிக்கின்றன்.அன்று யாழ்மாவட்டத்திலிருந்த சாதிக்குழுக்களின் தரவுகள்( census report of 1830 based on castes of Jaffna), அப்போதைய இலங்கை அரசவர்த்தமானியில் பிரசுரிப்பதற்கென சீமோன்காசிச்செடியினால்1830 ம் ஆண்டு திரட்டப்பட்டது. அவை ௬றுபவை என்ன?
அன்றிருந்த, அதாவது நூறுவ௫டங்களுக்குமுன்பு இ௫ந்த சாதிகள்:
http://melaikkattu.wordpress.com/

jeya said...

கள்ளர் பறையர் கனத்த அகம்படியார் மெள்ள மெள்ள இங்கு வந்து வெள்ளாளர் ஆகினர்.

இன்றைய யாழ்ப்பாண வெள்ளாளர் 100 வருடஙகளுக்குமுன் சாதி மாறியவர்கள். இது வரலாற்றின் அடிப்பைடயில் மிகவும் உண்மையானது. இவர்கள் ஒரு கலப்புச் சாதியினர். மடப்பள்ளி, வடுகர், இடயர், நயினார், வெள்ளாளர், கள்ளர், மறவர், அகம்படியர், செங்குந்தர், சேணியர், தனக்காரர், சாலியர்( நெசவுப்பறையர்), தவஷிகள்ஆகியோரின் கலப்புத்தான் இந்த யாழ்ப்பாணத்து வெள்ளாளர். இது வரலாற்றினடிப்படையிலும் நடைமுறைச்செய்ற்பாடுகளினடிப்படையிலும் மிக மிகத் தெளிவான உண்மையாகும். இச் சாதி மாற்றங்கள் அன்று கண்டுகொள்ளாமல் அல்லது வெளிக்கொணரப்படாமலிருந்தமைக்கு, வெள்ளாளர் எனும் பெயரின் கீழ் அல்லது அதன் மூலம் ஒருமித்த சாதியப்பெரும்பான்மை தேவையாயிருந்தமையே காரணமாகும். இக்கலப்புப் பெரும்பான்மை பிற்காலங்களில் யாழ்மாவட்டத்தில் ஏனைய சமூகப்பிரிவினர்ககு எதிரானதாக இருந்துவந்துள்ளது. இவைபற்றிய உண்மைகளை பின்வரும் வரலாற்றுத்தரவுகள் மெய்ப்பிக்கின்றன்.அன்று யாழ்மாவட்டத்திலிருந்த சாதிக்குழுக்களின் தரவுகள்( census report of 1830 based on castes of Jaffna), அப்போதைய இலங்கை அரசவர்த்தமானியில் பிரசுரிப்பதற்கென சீமோன்காசிச்செடியினால்1830 ம் ஆண்டு திரட்டப்பட்டது. அவை ௬றுபவை என்ன?

அன்றிருந்த, அதாவது நூறுவ௫டங்களுக்குமுன்பு இ௫ந்த சாதிகள்:
Burgher -------477
Bramman -------1935
Chetty --------- 1807
Madappally ---12995
Moors ---2166
Paradesy --- 1830
Mallagam --- 1501
--
Cariar ---- 7562
Brassfounder --- 105
Masons ---- 47
Tuners -- 76
Welper ---50
Cycolas --- 1043
Chandar ---- 2173
Dyers ---902
Chevia --- 1593
Pandaram---- 41
Parawa --- 35
Tannecaras --- 1371
Silversmith --- 899
Blacksmith --- 904
Carpenters --- 1371
Barbers --- 1024
slave of Burgher -- 18
Washermen --- 2152
Moquah ---2532
Malayalam ---210
Covias --- 6401
Company Nalum --- 739
Pallas ---6313
Parayars --- 1621
Torampas --- 197
Weavers -- 272
Cawere chetty ---18
Tawesy --- 437
Nattowen --- 22
Oil monger --- 4
Tunmilah --- 1291
Pallevely ---376
Simpadawer --- 40
cadia ---970
Nallua --- 7559
Potters --- 329
Ship carpenter -- 33
Marava --- 54
Choyaroot-Digger ---408
Paramber --- 362
-
Free slaves --- 348
இந்த வரலாற்றின்படி தங்களை அவரவர் சாதிகளின் பெயரால் அழைத்துக்கொள்ளாது, வெள்ளாளர் என அழைத்துக்கொள்கிறார்கள்.இது மிகவும் சிரிப்புக்குரயது.வெள்ளளாளர் என்றால்,வெள்ளத்தை அடக்கிஆள்பவெரன்றும்,மண்ணை உழுது பயிர்த்தொழிலில் ஈடுபடுபவர் என்றே பொ௫ள்படும்.வெள்ளாளர் என்று தங்களை அழைப்பவர்கள் தங்கள் சாதிப்பெயர்களுக்குக்கொஞ்சமேனும் தொடர்பில்லாத தொழில்களையே இன்றுவரை செய்துவ்௫கின்ற்னர்.ஏனென்றால் அவரகளில்பலர் வெள்ளாளர்களே அல்ல என்பதுதான்.இந்த வரலாற்றாதாரங்கள் அதனைமெய்ப்பிக்கும்.இந்த இலட்சணத்தில் இவர்கள்

srithar said...

Somee:- ஈழத்தில் சாதியென்பதே இல்லை, கலியாணத்தில் மட்டும் சாதி பாக்கிறார்கள் மற்றம்படி சாதி இல்லை.

*வன்னியில் சாதி என்பதே இல்லை.புலம்பெயர்ந்த நாடுகளில் சாதியை வளர்கிறார்கள்.............

srithar said...

somee :-
ஈழத்தில் சாதியென்பதே இல்லை,கலியாணத்தில் மட்டும் சாதி பாக்கிறார்கள்......

வன்னியில் சாதி என்பதே இல்லை.
புலம்பெயர்ந்த நாடுகளில் சாதியை வளர்கிறார்கள்........unmai...Eelathil saadhi Irukkirathu...Aanal thuppakkikku payanthu...Saathiyil Irunthu viduthalai Thevai...Eelam pirakkum pothu saadhi irukka kodathu...appadipada thamileelam pirakka vendum.annaivarum thunai nirpom..

jeya said...

மற்றவர்கள் ஒருநாளும் சிந்திக்கின்ற தன்மையை பெறமாட்டார்கள் என்பது தான் சாத்திய கற்பனையாளர்களின் எண்ணம்.சாதியம் என்பதற்கு பைத்தியம் என்றொரு அர்த்தமும் உண்டு.இன்றுள்ள யாழ்ப்பாண வெள்ளாளர்கள் நூறு வருடங்களுக்கு முன்பு வெவ்வேறு சாதிகளில் இருந்து சாதி மாறிய ஒரு கலப்பு சாதிகள்.அன்று யாழ்ப்பாணத்தில் இருந்த நூற்றுக்கணக்கான சாதிகள் சாதிப் பெயர்கள் இன்று இல்லை.இது சிந்திப்பவர்களுக்கு மாத்திரமே விளங்கும் உண்மை.அவர்கள் எல்லோருமே வெள்ளாளர் என்ற சாதிப் பெயரால் அழைக்கப் படுகிறார்கள்.சேர்.பொன்னம்பலம் இராமநாதன் வெள்ளாளர் தான் அனால் அவர் தேவதாசி வம்சத்தை சேர்ந்தவர் என்பது எதனை பேருக்கு தெரியும்? தேவதாசி வம்சத்தவர் மினுக்கும் கொழுப்பும் நிறைந்தவர்கள் என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.சேர்.பொன்னம்பலம் இராமநாதன் வெள்ளாளரும் அல்ல.அவர் (தேவதாசி வம்சத்தை சேர்ந்தவர் )வெள்ளாள முதலியார்.வெள்ளாளர் என்றால் அது உயர்சாதி என்று அர்த்தமும் அல்ல.வெள்ளாளர் என்றால் சூத்திரன்.சூத்திரன் என்றால் நாலாம் சாதி அதாவது தாசி மக்கள்.அவர்கள் பிராமணனுக்கு அடிமை ஊழியம் செய்ய இந்துக்கடவுளான பிரம்மாவில் காலினால் பிறப்பிக்கப் பட்டவர்.இதைவிடக் கேவலமானது என்ன இருக்கிறது? வேளாள மாயைக்கு அடித்தளமிட்டவர்களுள் மறைமலை அடிகள் முக்கியமானவராவார். தொல்காப்பியர் வேளாளரை நான்காம் வருணத்தவராகவும், கீழோராகவும் சித்திரித்துள்ளதை மறைத்து, தொல்காப்பியச் சூத்திரம் ஒன்றிற்கு மறைமலை அடிகள் பொருள் கூறும் பாங்கு வேளாள மாயையின் தன்மையைப் புரிந்துகொள்ள உதவும்.

"மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே" (தொல், பொருள், கற்பியல் 142)

மேற்கண்ட சூத்திரத்திற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் கீழோர் என்பதற்கு வேளாளர் என்றே பொருள் குறிப்பிடுகின்றனர். வேளாளரைக் கீழோராக ஏற்க மனம் ஒப்பாத மறைமலையடிகள் இச்சூத்திரத்திற்குப் புதிய வகை விளக்கம் அளித்துள்ளார்.

kallar velan said...


கோவியர் யார்? இவர்கள் தமிழர்களா?
மே 14, 2014
http://yaalppaanam.wordpress.com/