Tuesday, October 09, 2007

இரசாயனக் கம்பனிகளின் பலிக்களம்-ஒரு ஆவணப்படம்

"கடலூரைக் காப்போம்" என்ற ஆவணப் படமொன்று 'நிகரி' திரைப்பட வட்டத்தினரால் தயாரிக்கப்பட்டது.கொழும்பு மற்றும் சென்னையில் இயங்கும் நிகரி திரைப்படக் குழுவும் ,சென்னையில் உள்ள சமூக மாற்றத்திற்க்கான இளைஞர்களும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படம் மிகக் குறைந்த செலவில் ஒரு மிதிவண்டிப் பேரணியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது.

சரி,ஒரு அவலம் நிறைந்த மக்களின் கதைகளை இனிக் கேளுங்கள்.

(இது முழுமையான படமல்ல சில பகுதிகள் விடுபட்டுள்ளன.)
11 comments:

சோமி said...

nantry pinnooddam iddiruntha mauran mattum Dr.Ilankovan aakiyorukku nantry.

Anonymous said...

எங்கடா பின்னூட்டத்தைக் காணலை. நன்றி சொல்லுற?

மலைநாடான் said...

சோமி!

ஒரு பெரும் மக்கள் துயரினை, நிறைவாக ஆவணப்படுத்தியுள்ளீர்கள். நாளைய பாதத்தின் நம்பிக்கைத்துளிர்களின் குரல்களும், காட்சிப்படுத்தல்களும்,நெகிழ்வைத்தருகின்றன.

உடனிருந்து பிரிந்த நண்பனுக்கு அஞ்சலிகள்.

பதிவுக்கு நன்றி

சோமி said...

ada 2 pEru vanthu pathivu pOddaaka athai publish panninaa reject panninanaa enna ilavendu theriyalla pinnoooddaththa kaanElla. sari pOddavangka thirumpa pOdungkappa.
kElvi kEdkirathukendE sila pEru thiriyuraanungkappa.

சோமி said...

இந்தப் ஆவணப்படத்தை எத்தனை பேர் பாத்திருப்பீர்கள் என்று எனக்கு தெரியவில்லை யாராவது தமிழ் நாட்டு சிங்கங்கள் இது குறித்து பேசுமென்று நினைத்தேன் .....! ம் நம்ம ஏதாவது அசின் நடனமோ சிவாசி பாட்டோ போட்டிருந்தால் எல்லா நாட்டு சிங்கங்களும் இந்தாண்ட வந்து கருத்த கழ்ட்டிவிட்டு போயிருக்கும். அது கிடக்க இந்த படத்தை இதில் நான் போட்டதுக்கு காரணம் இது கடலூரில் மட்டும் உள்ள பிரச்சனையல்ல தமிழகத்தின் ஏன் இந்தியாவின் பல ஊர்களையும் மனிதர்களையும் காவு கொள்ளும் பிரச்சனை. ஒரு பகுதி மனிதர்களின் வாழ்வுரிமையைப் பறித்து ஒரு குறித்த மனிதர்கள் மட்டும் வாழும் நிலை மாற்ற ஆரோக்கியமன கருத்துகளும் மக்கள் செயTபாடுகளும் தேவை. இது எங்கள் சொந்தப் பணத்தைப் போட்டு எடுத்த ஆவணம் இது அனைவரையும் சென்றடையும் போதுதான் இந்த மக்களின் பிரச்சனை புலப்படும்.

ரவிசங்கர் said...

சோமி. இன்னிக்கு தான் இந்தப் படத்தைப் பார்த்தேன்..நீங்கள் சொன்ன மாதிரி இது மாநிலம், நாடு, உலகம் முழுக்க உள்ள பிரச்சினை.

வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் தோல் தொழிற்சாலைகளும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருக்கும் சர்க்கரை ஆலைகளும் இதே பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இந்தப் பட ஆக்கத்தில் உங்கள் பங்களிப்பும் உண்டா? இரண்டாவது படத்தில் குழுந்தைகளுக்குப் பின்னால் இருந்து ஒருவர் சொல்லிக் கொடுக்க கொடுக்க அவர்கள் சொல்வது அப்பட்டமாகப் பதிவாகி இருக்கிறதே? முதல் படத் துண்டில் உள்ளது போல் மக்கள் தானாகச் சொல்வதை மட்டும் பதிவு செய்திருக்கலாமே?

சோமி said...

நன்றி ரவிசங்கர் உங்கள் விமர்சனத்துக்கு. அந்த சின்ன பசங்களுக்கு வெளியில் இருந்து யாரும் சொல்லிக் கொடுக்க வில்லை அவர்களில் இன்னொரு பையனே பின்னால் இருந்து சொல்கிறார். ஒரெஞ் வர்ணத்தில் ஆடை அணிந்த ஒருன் சிறுவன் பின்னல் இருகிறான். அவன் இவன் பின்னால் இருந்து சும்மா சொல்லிக் கொண்டிருக்கிறான்.

அந்த சிறுவர்கள் எல்லோரினதும் கருத்துத்தான் எதிரொல்;இக்குது. வெளியில் இருந்து யாரும் எதுவும் சொல்லவில்லை.

அப்பிடி சொல்லியிருந்தால் அதை மு.தனாமாக வெளிவிடுவமா என்ன :)

இந்தபடதில் எனது பங்கு என்ன என்று கேட்டீர்கள்.நான் தான் இந்த படத்தை இயக்கி ஒளிப்பதிவு செய்தேன்.எமது நிகரி திரைப்பட அமைப்பு தனது சொந்த செலவில் தயாரித்தது.

மாசிலா said...

அருமையான ஆவணப்படம்.
மனதை நோகடிக்கும் காட்சிகள்.
பிஞ்சுக்குழந்தைகளின் சிரித்த முகங்கள் வாடுவதற்குள் அதிகார வட்டங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என நம்புவோம்.

ஏ.சி அரையில் உட்கார்ந்துகொண்டு முடிவுகள் எடுக்கும் பண சம்பாதிக்கும் முதலை கும்பல்களுக்கு இது போன்ற அநியாய காட்சிகள் என்று சென்றடையுமோ?

இப்படித்தான் இந்தியா வல்லரசு ஆகவேண்டும் என்றால், அப்படிப்பட்ட நிலை தேவையில்லை.

தன்மக்களை அழிப்பது தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் தற்கொலைக்கு சமானம்.

விழிப்புணர்வூட்டும் இப்பதிவு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சோமி.

Anonymous said...

விபரணப்படம் நன்றாக இயக்கப்பட்டிருக்கிறது சோமி. இறுதியாக சிறுவர்களிடம் வெளிப்படும் கோபம், எதிர்ப்புணர்வு, துடிப்பு, நம்பிக்கை நாளையை நம்பிக்கையுள்ளதாக்குகிறது. ஆனால், இன்று இந்தச் சிறார்கள் நலமாகவும், வளமாகவும் வாழ ஏற்ற சூழலை யார் ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறார்கள்?

ரவிசங்கர் said...

test

ரவிசங்கர் said...

விளக்கத்துக்கு நன்றி சோமி. நிகரி மற்றும் உங்களது படைப்புகள் அனைத்தையும் ஒரு யூட்யூப் கணக்கில் தொகுத்துத் தந்தால் நன்றாக இருக்கும்.