“அன்ரியோட இவ்வளவு நேரமாக கதைத்தீர்” என்ற அவர்கள் கேள்விக்கு,"அன்ரி நல்லவா போல இருக்கு" என்று பதில் சொன்னேன்.
"புதுத் தும்புத்தடி நல்லா கூட்டும்" சட்டென பதில் அவர்களிடமிருந்து வந்தது. அந்த பதிலைச் சொன்னது அமுதன்.பொறியியல் மாணவன் பகுதி நேரத் தொழிலாகப் படிப்பதாகவும் ஊர்சுற்றுவது முழு நேர தொழிலெனவும் சொன்னார்.அடுத்து வந்த நாட்களில் அதனை உறுதியும் செய்தார்.இன்னொருவர் சுரேஷ் இவர்தான் அந்த அறைக்குத் தலைவர் யாழ்ப்பாண சைவ வேளாள கட்டுமானத்தின் பிரதிபலிப்பு.
சுரேஷ் கட்டிலுக்கும் மேல் சாமிப் படமிருக்கும் காலை மாலை இருவேளை பூசை செய்வார்.வெளிநாடுக்கு போவதே குறிக்கோள்.வெளிநாட்டில குடியுரிமை இருக்கும் பொம்பிளையள் கிடைத்தால் கலியாணம் செய்து கொண்டு போகலாம் எண்டதும் இவரிண்ட எண்ணம்.முப்பதைத் தாண்டிய வயதில் பிடித்த பெண் வரும் வரை போட்டோக்களையும் குறிப்புகளையும் பார்த்தபடி ஒவ்வொரு நாளையும் ஓட்டிக் கொண்டிருந்தார்.
அடுத்தது ரஞ்சித் உசார் பேர்வழி வெளிநாட்டுக்குப் போவதே இவரதும் ஒரே இலக்கு, அதுவரை சிங்களமே தெரியாமல் இலங்கையின் சகல பாகங்களுக்கும் வண்டி ஓட்டிச் செல்லும் ஓட்டுனர்.ஒவ்வொரு நாளும் தன்ர புளுகல்களை சொல்வது இரவில் இவரது வேலை. "ரஞ்சித் பறக்கவிட்டு சுடாத சும்மவே சுடு" இது அமுதன் ரஞ்சித்துக்கு கொடுக்கும் பதில்.(புளுகுறதைத்தான் பறக்கவிட்டுச் சுடுதல் என்பார்கள்)
நானும் அமுதனும் ரஞ்சிதோடு அடிபிடி சண்டையில் இறங்கும் நண்பர்கள்.அமுதனின் ஆதரவிருந்ததால் என் உடம்பை ஒத்த ரஞ்சித்தோடு சண்டைக்கு போவதில் எனக்கு பயம் இருக்கவில்லை.
இன்னொருவர் மலையகத்தைச் சேர்ந்தவர். இவரும் பறக்கவிட்டு சுடுவார். ஆனால் நல்ல ஆங்கில மற்றும் சிங்களப் புலமையும் சுறுசுறுப்பான ஆர்வம் கொண்ட இளைஞர். வீட்டுகார அன்ரியோடு நல்ல ஒட்டு.அதனால் தினம் தினம் எங்கள் அனைவரின் கிண்டலுக்கும் உள்ளானார். ஆனால் அவர் அன்ரியோடு ஒட்டாய் இருப்பதற்க்கு காரணம் எங்கள் அறையில் இருந்த யாழ்ப்பாண மேலதிக்கம். தோட்டாக்காட்டன் இங்கிலிஷ் கதைகிறதப்பார் என்கிற கிண்டல்கள் முதல் தோட்டக்காட்டன் வடக்கத்தையான் போன்ற பல கிண்டல்கள் அவனுக்கு கேட்க்கும் படியே சொல்லப்படும்.
அறையில் யாழ்ப்பாண நண்பர்களுக்கு ஆங்கில அறிவு குறைவு. ஏதும் ஆங்கிலத்தில் தெரிய வேண்டுமெண்டால் மேல் வீட்டில் இருக்கும் யாழ்ப்பாணத்து அங்கிளிடம் கேட்பார்களே தவிர தோட்டக்காட்டானிடம் கேட்பது சங்கை குறைவு என்பார்கள்.அவனுக்கும் எனக்கும் ஒரு உறவு இருந்தது. காரணம் நானும் அந்த அறையில் மைன்னாரிட்டிதான் என்னை மட்டக்களப்பான் என்பார்கள்.யாழ்ப்பாணதில் பிறந்திருந்தாலும் அந்த அறைக்குள் நான் மட்டக்களப்பானாகவே நுழைந்தேன்.
இரவு நெடு நேரம் வரை மட்டக்களப்பானும் தோட்டக்காட்டானும் அன்ரியோட என்ன கதைகிறார்கள் எண்டு அறைக்குள் ஒரு குசுகுசுப்பு வரும். நான் அப்ப உயர்தரம் படித்துக் கொண்டிருந்ததால் நெடு நேரம் விழித்திருப்பன். அவனும் விழித்திருந்து படிப்பான். அவன் அப்பாவும் அம்மாவும் இன்னும் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். எப்பிடியாவது அதிக சம்பளம் வாங்கும் வேலைக்கு சேர்ந்து அவர்களை வீட்டில் உட்கார வைத்து சோறு போட வேண்டும் என்பதே அவன் கனவாக இருந்தது.
பின்னாளில் சிங்களத்தில் பல வேலைகளைச் செய்வதற்க்கும் ஆங்கிலத்தில் எழுதுவதற்க்கும் ஆங்கிலத்தில் பேசிப்பழகுவதற்க்கும் எங்கள் அறை நண்பர்களுக்கு தோட்டக்காட்டன் துணை புரிந்தான்.(எங்களுக்கு இங்கிலிசுல கிரமர்தான் தெரியும் பேசுறது கஷ்டம் எண்டதாலதான் உன்னட்ட கேட்க்கிரம் என்பது அமுதம் சொல்லும் தன்னிலை விளக்கம்.) இருப்பினும் அவனுள் அரம்பம் முதலே உருவான அல்லது உருவாக்கப் பட்ட தாழ்வுமனப்பான்மை எங்களில் இருந்து சற்று தள்ளியிருந்து பேசும் நிலையினை அவனுக்குள் உருவாக்கி விட்டிருந்தது.
இப்படியான பின்னணியோடு அந்தஅறை இருப்பினும் பொலிசுக்காரன் சோதனைக்காக வருகிறபோதும். வீட்டு அன்ரிக்கெதிராய் அணிதிரளும்போதும். ஏன் கட்டுநாயக்கா தாக்குதல் செய்தி கேட்டு துள்ளிக் குதித்த போதும் நாங்கள் அனைவரும் தமிழராக உணர்ந்தோம் என்பதை மறுப்பதற்கில்லை. பொது இடத்தில் என்னையோ அவனையோ மற்ற நால்வரும் தனியாக விட்டதில்லை. சிக்கலெதிலும் மாட்டி விட்டதுமில்லை சிக்கல் வந்தால் காப்பாற்றவும் தவறியதில்லை.
எமது அறையின் ஆறமவர் அமுதனின் நண்பர்(அவர் பெயரும் மறந்து விட்டது) அருமையயன காதல் கதை அவருடையது. கண்களால் மட்டும் பேசும் பல்கலைக்கழகக் காதலை வியந்து பேசுவார்.அவரும் அவரின் காதலியும் வெவ்வேறு சாதிக்காரர்.இருந்தாலும் காதலிக்கும்வரை காதலிப்போம் எண்டு காதலித்தார். அமைதியானவர் பின்னர் இவர் எமது அறையில் இருது வேறு அறைகுச் சென்று விட்டார்.
பின்னர் ஒருநாள் வெள்ளவத்தையில் அவரைச் சந்தித்தேன் திருமனம் முடித்துவிட்டதாகச் சொன்னார். யார் அந்த அக்காவா நான் ஆர்வமாகக் கேட்டேன். அவரிடம் ஒரு சிரிப்பு பதிலாக வந்தது அதன் பின்னர் நானும் கேட்கவில்லை அவரும் சொல்லவில்லை.
அறைக்கு பின்னர் ஒருவர் வந்தர். லண்டனுக்கு போகப் போய் 6 மாதம் வெளிநாடெல்லம் சுற்றி 3 மாதம் பெல்ஜியம் சிறையில் இருந்தவர். பின்னர் இவரின் கோரிக்கை மனு அங்கிகரிக்கப்படாததால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் பட்டார். வந்து 1 வாரம் அவரின் அனுபவக்குவியல்களை அவிட்டுவிட்டர். 9 லட்சம் இழந்தும் சிரித்துக்கொண்டே தனது அனுபவக்கதையின் இறுதியில் ஒரு வசனம் சொன்னார் "நான் கிட்டத்தட்ட 20 விமானநிலையங்களைப் பார்த்திருப்பன், இப்ப சொல்லுறன் இன்னும் ஆறுமாதத்தில நான் லண்டனுக்கு எப்பிடியும் போவன்" இதைக் கேட்டதும் கடுப்பான அமுதன் இன்னும் உனக்கு புத்தி வரவில்லையா என்று கேட்டார்."எனக்கு எந்த நாட்டில எப்பிடி பேசோணும் எப்பிடி அசேலத்துக்கு கடிதம் கொடுக்கோணும் எண்டு தெரியும் நான் போய் காட்டுறன் பாருங்கோ'வெண்டார். அவர் சொன்ன மாதிரியே இப்போது அவர் லண்டனில இருகிறார்.
இப்படியான என் முதல் அறை எனக்கு குட்டித் தமிழீழம் போன்றதுவே
25 comments:
ஒரு றூமில 6 பேரா?????
\\இவரும் பறக்கவிட்டு சுடுவார்.\\
அப்பிடியெண்டால் என்ன?? நண்பர்களை மட்டும் அறிமுகப்படுத்தினா சரியா?? நீங்கள் குழப்படி ஒன்றும் செய்யுறேல்லயோ?? சரியான நல்ல பிள்ளைகளோ?
//காதல் கதை அவருடையது. கண்களால் மட்டும் பேசும் பல்கலைக்கழகக் காதலை வியந்து பேசுவார்.
யார் அந்த அக்காவா நான் ஆர்வமாகக் கேட்டேன். அவரிடம் ஒரு சிரிப்பு பதிலாக வந்தது //
அவள் அப்படித்தான் படத்தின் கடைசி காட்சி மாதிரி இருக்கு. நல்ல பதிவு .நல்ல நடையுடன் சொல்லி இருக்கிறியள்
இரண்டாவது அறை நண்பர்கள் குறித்து எழுதினால் வெளியிட முதல் ஒரு காப்பி அனுப்பவும். :(
so அடுத்ததாக சசீவன் மயூரண்ட கதையளும் வருமோ?
சோமி!
என்ன? உங்களையும் தள்ளி வைத்தாங்களா??
நல்லாச் சொல்லியுள்ளீர்கள்!! நமக்கும் மலையகத்தில் வேலை செய்த காலத்தில் இந்த அனுபவம் உண்டு.
மிகத் தரக்குறைவான சொற்கள் உள்ளடங்கிய கட்டுரை. தோட்டக்காட்டான், மட்டக்களப்பான் என்ற சொற்கள் மனதைப் புண்படுத்தக்கூடியது. தோட்டக்காட்டான் என்று ஒருவரை அழைத்தது மிகவும் தரக்குறைவான பண்பாடுடைய ஒருவரது செயலாகும். அதை மீளவும் எழுதுவது கண்டிக்கத்தக்கது. வெறுக்கக்கூடியது.
அனானி நண்பரே,
நீங்கள் குரிப்பிட்ட இரண்டு சொல்லாடல்களும் உங்களதும் ஏனையவர்களினதும் மனதைப் புண்படுத்துவதாக இருந்தால் அதனைக் குறிப்பிட்டதற்க்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
ஆனால் இன்னமும் வழக்கில் உள்ள இந்த இரண்டு சொல்லாடல்களையும் தவிர்த்து வலியான இந்த தகவலைச் சொல்லுவதற்கு எனக்கு வார்த்தைகள் இல்லை.ஏனெனில் நான் மட்டக்களப்பில் யாழ்ப்பாணியாகவும் யாழ்ப்பாணத்தில் மட்டக்களப்பானாகவும் அழைக்கப் பட்டதன் வலியை உணர்ந்தவன்
சோமி
இது வெறும் கதை மட்டுமல்ல.ஆழ்ந்த அர்த்தமுள்ள கதை.
நகைச் சுவையோடு சொன்னவிதம் நன்றாக இருக்கிறது.
தோட்டக்காட்டன் வடக்கத்தையான் போன்ற பல கிண்டல்கள் அவனுக்கு கேட்க்கும் படியே சொல்லப்படும்" . இப்படியெல்லாம் இந்தியர்களை வசை பாடிவிட்டு வெட்கமில்லாமல் தமிழகத்தில் வயிறு கழுவுகின்றீர்களா?
இந்தப் பாவத்தை தொலைக்க கூவத்தில் குளிக்கவும்.
இது ஒரு வலிமையான கதையா? குப்பை!!
//இது ஒரு வலிமையான கதையா? குப்பை!!//
குட் பை..
முருகேசர் இங்கயும் வந்திட்டாரா :-)))
தோட்டக்காட்டான் என்றும் மட்டக்களப்பான் என்றும் மட்டுமில்லை மற்ற மற்ற பிரதேசங்களிலிருந்து வந்தாக்களையும் இப்பிடிப் பெயர் சொல்லிக்கூப்பிட்டவைதானே முந்தி...உதாரணமா எங்கட அப்பப்பான்ர ஊர் தும்பளை ஆனால் அவை வளர்ந்தது தண்ணீரூற்றில அதால அவரை வன்னியர்(??) என்று சொல்லி அப்பம்மாவை கட்டிக்குடுக்க மாட்டம் என்று சொன்னவையாம் அவான்ர ஊரான நவக்கிரியில.
இந்தியாவில இருந்து வந்து மாத்தளை போன்ற பிரதேசங்களில் குடியேறியவர்கள் கூட தங்களிலும் பணத்தாலும் கல்வியாலும் பின்தங்கியிருந்த மலைவாழ் மக்களை வேலைக்காரர்களாகத்தானே நடத்தினார்கள்.
அதானால சும்மா உப்பிடி கூவத்தில குளியுங்கோ என்றெல்லாம் சொல்லிப்பிரயோசனமில்லை.
இங்க கூட எங்களையும் சிலர் பாக்கி வருது என்று சொல்லி ஏதோ சாதிச்சிட்டது போல எகத்தாளமாச் சிரிப்பார்கள்.2001.11 தாக்குதலுக்குப்பிறகு நான் படித்த பாடசாலையில் ஒரு இஸ்லாமிய மாணவி ஹோல்வேயால் நடந்துபோகும்போது சில மாணவர்கள் சொன்ன வசனம் இது "தள்ளிங்போங்கடா எப்ப இவள் explode ஆவாள் என்று சொல்லமுடியாதெண்டு".
சில வாரங்களுக்கு முன்னர் தங்கையின் பாடசாலையிலிருந்து ஒரு போன் வந்தது.14 வயசு நிரம்பாத என் தங்கையைப் பார்த்து ஒரு சகமாணவன் கேட்டிருக்கிறான் நீ இந்தியன்தானே ..உங்க நாட்டில நிறையப்பேருக்கு எய்ட்ஸ் ஆமே..அப்ப உங்க அம்மா உனக்கும் எய்ட்ஸ் ஆ " எவ்வளவு கஸ்டமாக இருந்திருக்கு அதைக்கேட்க.வகுப்பாசிரியர் கேட்க நேர்ந்ததால் அந்தப்பையனை 2 நாட்கள் சஸ்பென்ட் பண்ணியது பாடசாலை நிர்வாகம்.மனவுளைச்சல் ஏற்படக்கூடாதென்பதற்காக இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக எங்களுக்குப்போன் பண்ணிச்சொன்னார்கள்.
//இப்படியான என் முதல் அறை எனக்கு குட்டித் தமிழீழம் போன்றதுவே//
முத்தாய்பாக, சொல்ல வந்ததை சொல்லி முடித்திருக்கிறீர்கள்.
நன்றி.
சினேகிதி
இங்கே எங்களையும் "இந்தியன்" என்றுதான் இந்த நாட்டுக்காரன் முதலில நினைக்கிறான்.
என்ர மகனுக்கு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில you ,black Indian!" என்று ஒரு இந்தநாட்டுக்காரப் பெரிய போடி சொல்லி, மகனின் வயித்தில குத்திப்போட்டான்.
பிறகு தலமை ஆசிரியருக்குச் சொல்லி, அவர் அசெம்பிளில எல்லாப் பிள்ளகளுக்கும் எச்சரித்துவிட்டார்.
இந்தக் கவலையை எங்கபோய்க் கொட்டிக்கிறதாம்? எந்தக் கூவத்தில குளிக்கிறதாம்?
Dear friends,
don't get angry for small funny things. yesterday also one 'anony' and our 'Nalaini' made such bad comments on 'Suguna Diwaker' post.
be put some sense and Humorous
நான் என்றால் உங்கள் அறையில் இருந்த சிலரை அடித்தே கொன்றிருப்பேன்...உவாக் பீப்பிள்..discrimination.
எனக்கு அந்த ஆங்கிலம் தெரிந்தவர் மேல் தான் மதிப்பு இருக்கு..
எனக்கு இப்படியான அனுபவம் இல்லவேயில்லை..பொதுவாக ஆண்களுக்கு தானே இப்படியான அனுபவங்கள்கிட்டுவது..
நானும் விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் காலங்களில் கொழும்பில் நின்றிருக்கேன்...கொழும்பு என்றும் சொல்ல முடியாது.. கல்கிசை பக்கம் தான்..என் அண்ணன்களுடன் கல்கிசையில் அதிக நேரம் சுற்றியிருக்கின்றேன்..
எங்கள் வீட்டிலும் அண்ணன் ஒருவர் இந்தியாவில் இப்படி அறையில் இருந்திருக்கின்றார்..ஆனால் ஒரே நகைச்சுவை..சின்னனில நான் போன் எடுத்தால் எண்ட அண்ணாக்கு முதல் அவர்கள் தான் கதைப்பார்கள்..
இந்த தோட்டக்காட்டான்..மட்டக்களப்பான் எல்லாம் என் வாழ்வில் கேட்காத சொற்கள்... நாங்கள் இருந்த இடத்தில் தமிழர்களை காண்பதே அரிது.. இதில் எங்கு இந்த பாகுபாடுகள்.. மொத்தமாகவே 10 குடும்பங்கள் தான்..:)
நல்ல ஒரு பதிவு சோமிஸ்..என் பெரியண்ணாவிடமும் வாசிக்க சொன்னேன்..காரணம் எங்களுக்கும் ஒரு அண்ணா இப்படி இந்தியாவில் இருந்தவர் தானே....
இது போன்றே பல வட்டார வழக்குகள் பேசக்கூடிய நண்பர்களுடன் தங்கிய அனுபவங்கள் எனக்கும் இருக்கிறது, ஆனால் அவை தமிழ் உச்சரிப்பு குறித்த கிண்டலாகவும் பிரதேச குணநலன்கள் பற்றிய பகிடிகளாகவே மட்டுமே இருக்கும். எந்த சூழலிலும் அது ஒரு ஏற்றதாழ்வு குறித்தும் ஆதிக்க நோக்கிலான வாதங்களாக இட்டுச்சென்றதில்லை. ஈழத்தவர்கள் எப்போதும் தமிழன் என்கிற நிலையினைத்தாண்டி "அதீத தமிழனாக" இருப்பதே இதற்கு காரணியாக இருக்க வாய்ப்புண்டு. ஏற்கனவே சாதியால் பிளவுற்றிருக்கும் ஒரு சமூகம் இது போன்ற பிரதேச வாதங்களால் மேலும் பிளவுறுவதும் வருந்த்ததக்கதே.
உள்குத்து உள்குத்து என்று சொல்லுவார்களே அது இப்பதிவில் உங்களால் நன்றாகவே கையாளப்பட்டிருக்கிறது
அனைவருக்கும் நன்றி...வாறவைக்கெல்லாம் நன்றி சொல்ல இது கலியாண வீடில்லையெண்டாதால நான் வாறவைகெல்லாம் நன்றி சொல்லையில்லையெண்டதால நீங்கள் ஆரும் வாசிக்கமல் போகமாட்டீர்கள் எண்டதால நீங்கள் பின்னூட்டமும் போடாம போக மாட்டீர்கள்.
ஆகவே பின்னூட்டம் என்பது நன்றி சொல்லும் களமாக இல்லாமல் அது விவாதத்துக்கும் விமர்சனத்துக்குமான களமாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன்.
இது தவிர சிலர் தொடர்ச்சியாக எனக்கும் இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கும் தமது சின்னப் புள்ளைத்தனமான அரைவேக்காட்டு பின்னூட்டங்களை அனுப்பிவருகிறனர். என்னைப் பற்றி எனது ஒவ்வொரு பதிவுக்கும் இப்படி எழுதுபவர் ஒருவரே என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த ஒருவருக்கு உணர்விருந்தால் இனியும் இத்தகைய பின்னூட்டங்களை இடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
உங்கட கதை மாதிரி ஒண்டு எழுத இருந்தேன், நீங்கள் முந்தீட்டியள், அடுத்த முறை நாங்கள் ஒரு கூட்டம் கூடி என்ன எழுத வேணும் எண்டு முடிவு செய்யவேணும் , என்ன நினைக்கிறீர்?
உங்கள் மூன்றாவதோ... அல்லது எத்தனையாவதோ தெரியாது, அந்த மெசெங்சர் வீதி வீட்டைப்பற்றி ஏதாவது எழுதுவதாக இருந்தால் ஒருமுறை முன்னதாகவே அனுப்பி வைக்கவும். எல்லாம் ஒரு பயம்தான் ;-)
நீங்கள் பிரதேசவாதத்தை தூண்டும் விதத்திலும் சாதியத்தைத் தூண்டும் விதத்திலும் பதிவுகளைப் இட்டு தமிழர்களை பிரித்தாளும் எதிரியின் ராசதந்திரத்துக்கு துணைபோகிறீர்கள்.
ஈழத்தில இப்பிடியெல்லாம் யாரும் கதைக்கிறதில்லை.
தமிழ் உணர்வுதான் இருக்குதே தவிர வேறு உணர்வுகள் இல்லை.
//
தமிழ் உணர்வுதான் இருக்குதே தவிர வேறு உணர்வுகள் இல்லை.//
அப்படி நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பீர்களானால், உங்களை உணர்வுள்ளவன் என்று சொல்வது கடினம்.
சுயநலத்தோடு மக்களின் பிரச்சினைகளைப் பார்க்காதீர்கள்.
பிரதேசவாதம், சாதியம், தந்தைமை ஆதிக்கம் என்பவற்றை விட்டுவிட்டு ஈழத்தமிழ் சனத்தை பார்க்க முடியாது.
தமிழ் உணர்வெல்லாம் அதற்குப்பின்னர்தான்.
பிரதேசவாதம் என்பது தனது முழுமையான பயங்கரவடிவத்தில் அப்படியே இருக்கிறது.
அதனை பல தளங்களிலும் நேரடியாக அனுபவித்தவன் நான்.
என்னால் யாழ் பிரதேச மேலாதிக்க உணர்வை தெளிவாகவே இனம்பிரித்து அறிய முடியும்.
நான் வலைப்பூ வைத்திராததால் அடையாளமற்றவனாகவே எழுத வேண்டியுள்ளது. மன்னிக்க.
இக்கட்டுரை சோமி பிரதேசவாதங்கள் எப்படி உள்ளன என்று பிரதிபலித்தாலும், அங்கே அவரது கட்டுரை மீண்டும் அப்பிரதேச வாதத்தைத் தூண்டுகின்ற சிந்தனை கொண்டதாகத் தானே காணப்படுகின்றது.
குறைந்தபட்சம், புள்ளி இட்டவாது அதை நிரப்பியிருக்கலாம். ஆனால் இவரது அறைநண்பர்களுக்கு இருந்ததாக அவர் சொல்கின்ற இனவெறி, இவருக்கும் உள்ளது தானே.
its verry nice article...
kannan
USA
நல்ல பதிவு. அந்நாள் நினைவுகளை மீட்டவும் வைக்கிறது
Post a Comment