Saturday, February 03, 2007

சென்னை மாடுகள்-போராட்டம் வெடிக்குமா?!

நான் வண்டியை வீதிக்கு எடுக்கவும் பக்கத்து வீதி மாடு பாய்ந்து வரவும் சரியாக இருந்தது.நான் வண்டியை ஒரத்தில் நிறுத்தி விட்டு மாட்டை ஒரு முறை முறைத்தேன்.பாவம் மாடு வேர்த்து விறு விறுத்து பத்தட்டமாக இருந்தது.காலையில் இருந்து அது சாப்ப்பிட வில்லை என்பது அதன் முகத்தில் தெரிந்தது.பழக்கமான மாடு என்பதால் என்ன ஏது என்று விசாரித்த போது த்ன் சோகக் கதையச் சொன்னது.

சென்னையில் எங்களது பிரதான உணவு சுவரொடிகள்.எங்களின் பெரும் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்யும் சுவரொட்டிகளுக்கு பக்கத்தில் போகவே மாடுகள் பயப்படுகின்றன.என்னைப் போல துணிகரமான மாடுகள் கூட சுவரை நெருங்க முடியவில்லை காரணம் சென்னை முழுவது ஒட்டப் பட்டுள்ள திகிலூட்டும் போஸ்டர்கள்.கடந்த பத்து வருடமாக சென்னையில் போஸ்டர் தின்று வருகிறேன் ஒரு போதும் நான் இவளவு பயந்ததில்லை என்று சொல்லி நிறுத்தியது மாடு.

அப்படி என்னதான் என்று பார்க்க சென்னையை வலம் வந்த போது சுவருக்கு அருகில் சென்று தலை தெறிக்க ஒடிவரும் பல மாடுகளைப் பார்த்தேன்.



இது குறித்து மாடுகள் சங்கத்தின் துணைத் தலைவர் கோயம்பேடு பெரிய மாடு அவர்களை தொடர்பு கொண்டோம்."சென்னை நகரில் தற்போது ஒட்டப் பட்டுள்ள போஸ்டர்கள் காரணமாக மாடுகள் சுவருkகருகில் போவதற்கு அஞ்சுவதாகவும் இதனால் பல மாடுகள் பட்டினிச் சாவை எதிர் நோக்கும் அபாயம் இருப்பதாகவும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வுகான வேண்டும் இல்லையெனில் மாடுகள் பல்வேறு இடங்களிலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடும்" என்று ஓரே மூச்சில் கூறி முடித்தார் பெரிய மாடு.

மாடுகள் சுவரொட்டிகளை தின்பதை நிறுத்திவிட்டதால் சகல சுவரொட்டிகளையும் அகற்ற வேண்டிய பொறுப்பு மாநகரசபைக்கு வந்துள்ளது.இதனால் சென்னை மாநகராட்சிக்கு பலகோடி ரூபாய் நஸ்டமேற்படுமென பதவி விலகிய கவுன்சிலர் ஒருவர் கூறினார்.இதேவேளை மாடுகள் சுவரொட்டிகளை அகற்றும் போது கட்சிப் பாகுபாடு இன்றி அகற்றுவதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த பிரச்சனகளுக்கு காரணமான போஸ்டர்களைப் பார்த்தேன் அட நம்ம டி.ஆர் இன் வீராசாமி போஸ்டர்கள்.சென்னையில் சகல இடத்திலும் இடைவேளி எங்கெல்லாம் இருகிறதோ அங்கெல்லாம் மும்தாச் ,மேக்னா நாயுடு சகிதம் கையில் வாழுடன் நம்ம வீராச்சாமி.இதைப் பார்த்து குழந்தைகள் வெருண்டதும் நாம பயந்ததும் பழைய கதை இப்ப மாடுகளுக்கு இது பெரும் உணவுப் பிரச்சனக்கு வழி வகுத்து விட்டது

இதேவேளை மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள உணவுசிக்கலுக்கு காரணம் திமுக மைனாரிட்டி அரசுதான் என வைகோவும்.மாடுகளுக்கு ஆதரவாக கழத்தில் இறங்கப் போவதாக புரட்சித்தலைவி அம்மா அவர்களும் அறீவித்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் அதிமுக ஆட்சியில்தான் அதிகம் நடந்துள்ளன மோனிசா என் மொனாலிசா காதல் அழிவதில்லை போன்றவற்றூக்கான சுவரொட்டிகள் அதிமுக ஆட்சியிலேயே ஒட்டப் பட்டதாக கலைஞர் அறிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பு: இன்னா மேட்டருன்னா வீராசாமி பத்திப் கலாச்சிகின்னே வீராசாமிக்கு கூட்டம் போய்கின்னு இருக்கு மாமு.

(ஒவரா போராடிச்சா என்ன பண்ணுறது. இப்ப்டி எழுதாலாமெண்டு புறப்பட்டுடன்....ஹி...ஹி)

16 comments:

theevu said...

உண்மையை சொன்னாலென்ன..சில படங்கள் இணையத்தில் ஓசியில் கிடைத்தாலும் அதன் தகுதி கருதி பார்ப்பதில்லை.ஆனால் வீராச்சாமி பார்க்கவேண்டும் போல் உள்ளது.

Anonymous said...

வீராசாமி (T.R) மேல உனக்கு என்னா அவ்ளோ காண்டு?

வீராசாமி ரசிகர் மன்றம்
அவுஸ்திரேலியா

Anonymous said...

ஸ்மைலி போட மற‌‌ந்துட்டேன் :))))))

நல்ல பதிவு சோமி

Anonymous said...

கரடிகளை ஒருபோதும் மாடுகள் சாப்பிடாது

தமிழ்நதி said...

'ம்ம்ம்மாட்டு'க் கதை சிலசமயம் நம்ம கதையை விட நல்லாருக்கு.

சீனு said...

//அட நம்ம டி.ஆர் இன் வீராசாமி போஸ்டர்கள்.//

அட பாவிகளா! இது டூ மச், ம்ஹூம்...3 மச்...4 மச்...

சோமி said...

/ஆனால் வீராச்சாமி பார்க்கவேண்டும் போல் உள்ளது./
வணக்க்ம் தீவு நானும் போக வேணுமென்று நினத்தேன் தியட்டருக்கு முன்னால் உள்ள போஸ்டர்கள்தன் பயமுறுத்துகின்றன. மனதைத் திடப் படுத்திக் கொண்டு விரைவில் போகலாமெண்டிருக்கிறன்

சோமி said...

அட பாவிகளா! இது டூ மச், ம்ஹூம்...3 மச்...4 மச்...
vaNakkam சீனூ,
வீராசமியில் வரும் டயலக்குகளோடு ஒப்புடுகையில் இதெல்லாம்ம் சும்மா ஜுஜுபி.....

Anonymous said...

இந்த போராட்டத்துக்கு ஆளும் கட்சி மாடுகளின் சதி தான் முக்கிய காரணம்.நாளைக்கு எங்கள் Captain படம் சபரி வந்த பின்பு இதை ஒத்திகையாக வைத்து போராட்டம் நடத்த சதி செய்கின்றன.

Anonymous said...

அம்மா....அப்பா..ம்மாஅ....
ட்ப்ஜ்ட்ச்க்ஜ்fக்க்ப்ச்ஜ்த்ச்ட்க்ச்க்ஜ்ட்ச்
.........சாரி...

இப்ப தன் தமில் எலுத அரம்பம்...
மனிச்கொ.

நல்ல கடுரை.சோமி

நன்ரி
உதயா.

சோமி said...

நல்லது உதயா.
டெல்லியில் இருந்து உங்களது கல்விப் பணிகளுக்கிடையில் இது போன்ற ஆரோக்கியமான(?!) பதிவுக்கு கடினப்பட்டு பின்னூட்டம் போட்டமைக்கு நன்றி.

சின்னத் தம்பி அனானி ஊள்ளிட்டோருக்கும் மாடுகளின் கஸ்டத்துக்காக வருந்தும் கவிஞர் தமிழ்நதிக்கும் ஒரு வேண்டுகோள் தயவு செய்து வீராசாமி யைத் திருட்டு வீசீடீ யில் பார்த்து விடாதீர்கள்.அப்புறம் வீட்டில் தூங்கும் போதெல்லாம் பயமுறுத்தும்.

நாமக்கல் சிபி said...

நல்ல ஆய்வு சோமி அவர்களே!

எத்தனையோ ஜல்லிப் பதிவுகளுக்கிடையில் சிரத்தை மேற்கொண்டு சிறந்ததொரு ஆய்வுப் பதிவிட்டிருக்கிறீர்கள்.

நானும் நம்ம (கும்மியடிக்கும்) ரேஞ்சுக்கு இருக்காது என்று உங்கள் பதிவின் தலைப்பைப் பார்க்கும்போதெல்லாம் நினைத்தேன். ஆனால் சற்று மெனக்கெட்டுப் படித்தபோதுதான் ஆஹா! சூப்பர் கட்டுரை என்று புரிந்தது.

:))))

விமர்சனம் அருமை!
மிக்க நன்றி!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
சயந்தன் said...

சோமி படம் பார்த்தாயிற்றா.. ஒரு விமர்சனம் போடலாமே

சோமி said...

/எத்தனையோ ஜல்லிப் பதிவுகளுக்கிடையில் சிரத்தை மேற்கொண்டு சிறந்ததொரு ஆய்வுப் பதிவிட்டிருக்கிறீர்கள்/

?!!!

நாமக்கல் வருகைக்கு நன்றி.இதுதனா கூப்பிட்டு வச்சு கும்மியடிக்கிறது?

சோமி said...

இல்ல சயந்தன் இன்னும் பார்க்கேல்ல.

உதவிக்கு எந்த நண்பனும் வர மாட்டன் என்கிறான்.தனியப் போகவும் பய்மாக இருகிறது.

கடசியா வந்த டி.ஆர் படங்கள் பார்க்கையில்லையோ அந்த படம் நினைவுக்கு வந்தால் இந்தப் படத்துக்குப் போறதை நினைக்க பயமாக இருக்குன்னு எல்லா நண்பர்களும் பின்னடிகிறார்கள்.

எப்படியும் இண்டைக்கு யாராவது இளிச்சவாய் நண்பனோடு சேர்ந்து வீராசாமி படம் பார்த்து விடுவது என்பதில் உறுதியாகவுள்ளேன்.