Friday, February 16, 2007

தமிழாலயம்.........

தமிழாலயம். இந்த பெயர் கொழும்பு இளவட்டங்களுக்கு நிறையப் பரிட்சயமானது.சாதிய,வர்க்க,கருத்தியல்,காதலியல்,வேதியல்,விளங்காதவியல்,தேசியம்,பண்பாடு,
கலாச்சாரம் உள்ளிட்ட இன்ன பிற விடயங்களில் ஆர்வமுள்ள இளந்தலைமுறையினரை ஒன்றிணைத்த இடம்.உயர்தரப் பரீட்சை எடுத்துப் போட்டு சும்மா இருக்கிற காலத்தில பயனுள்ள வேலையளச் செய்யுறதுக்கு ஆசைப் படுகிற கூட்டத்துக்கான இடம்

நான் கொழும்பு வந்த புதிதில் அடக்கமுடியாத என் ஆர்வத்தில் சேர்ந்து கொண்ட அமைப்பிது.நண்பர் ஏ.ஆர்.திருச்செந்தூரன்(இவர் இப்ப பெரிய வானொலி அறிவிப்பாளர்)எனக்கு தெரிந்த ஒரே கொழும்பு நணபர்.சோமி எங்கள மாதிரி ஆர்வமுள்ள இளஞர்களுக்காக உருவான தமிழாலயம் எண்ட அமைப்பில உங்களைச் சேர்த்து விடுறன் எண்டு அழைத்துப் போனார்.

நான் அவ்வப் போது உயர்தர வகுப்புகளுக்கு செல்லும்(எந்த காலத்தில வகுப்புக்கு ஒழுங்கா போயிருக்கம்) கொழும்பு தமிழ்ச்சங்க கட்டடத்தில் நடந்த தமிழாலயக் கூட்டத்திற்குச் சென்றேன்.ஆக கொழும்பு பெட்டையளோட சேர்ந்து நாடகம் போட ஒரு அரிய வாய்ப்பு எண்ட புழுகம் ஒரு புறம் என்னை உசுப்பேற்றியது.அநியாயத்துக்கு காலுக்குச் சப்பாத்து வேற போட்டு கொண்டு தமிழ்ச்சங்கம் வந்து சேர்ந்தேன்.

5 மணிக்கு கூட்டமென்றார்கள். எப்போதுமில்லாத அதிசயமாக ஆர்வத்தில 5 மணிக்கே நான் கூட்டத்துக்கு போனே 5.40 க்கு ஒரு நாலு பேர் வந்து தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள்.6 மணிக்கு இன்னும் இருவர் வந்து சேர்ந்தனர். என்னை அறிமுகப் படுத்த வேண்டிய திருச்செந்தூரன் 6.10 கு வந்து சேர்ந்தான். ம் 6.15 க்கு வந்து சேர்ந்த மூவரில் ஒருவர்தான் அன்றைய கூட்டத்துக்கு தலமையாம். சரியெனகூட்டம் ஆரம்பமாகியது.

இவர்தான் சோமிதரன், பிறந்தது யாழ்ப்பாணதில. யாழ்ப்பாணத்தில எங்கெயெடா? ஒருவன் கேட்டன். கேட்டவன் பெயர் சேயோன் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் உயர் தரம் படித்தவன். 'பருத்தித்துறை" என்றேன் இவனும் பருத்திதுறைதான் என்றான் சேயோன்.அந்த பருத்தித்துறைப் பையன் பெயர் இ.செந்தூரன்.பிறகு கதைக்கலாம் என்று பேச முற்பட்ட செந்துரனை தடுத்தவன் பெயர் ராகுலன்.

இவர் மட்டக்களப்பில படிச்சவர்.நாடகம் போடுவார் என்னைப்போல என்று திருச்செந்துரன் சொல்ல என்னை உற்றுப் பார்த்தவன் பெயர் சயந்தன்(இதுதான் எனக்கும் சயந்தனுக்குமான முதல் பார்வை ஹி..ஹி...) இவர் சிறுகதையாசிரியர் சயந்தன் என்றார்கள்.சோமிதரனை அகில இலங்கை தமிழ்மொழித்தின விவாத போட்டியில் சந்திதோம். உமாசுதன் ,ரஜீவ் நிர்மலசிங்கம் இவர்கள் இருவரும் நான் ஏற்கனவே விவாதத்தில் சந்தித்தவர்கள். திருச்செந்தூரனின் விவாத சகபாடிகள் இவர்களும் தமிழாலயத்தில் இருந்தார்கள்.

பி.எஸ்.செந்தூரன் ரோயல் கல்லூரி மாணவன். கூட்டம் முழுவதிலும் சயந்தனுக்கு பெரும் சவாலாக இருந்தவன்(தமிழாலயம் அடுத்த பாகத்தில இது பற்றிய பல சுவாரஸ்யங்கள் சொல்லுறன்).இவர்களைத்தவிர பிரவினும் அந்த கூட்டத்தில் இருந்திருக்க வேணும் மற்றவர்கள் யாரென்பது மறந்து விட்டது. தமிழாலயத்தின் முதலும் கடசியுமான சஞ்சிகை உயிர்ப்பு.அதில அன்றைய தமிழாலயம் உறுப்பினர்கள் ஒரு 30 பேருக்கும் மேல பெயர் வெளிடிட்டிருந்தார்கள் அதை விரைவில் வெளியிடுறன்.உயிர்ப்பு பற்றியும் தனி பதிவு போடுறன்.எனது முதலும் முடிவுமான கவிதையை வெளியிட்ட சஞ்சிகை அது.சயந்தன்தான் அதற்கு ஆசிரியர்.

சரியென என் நாடகம் ஒன்று தமிழலயத்தின் தைப் பொங்கல் விழாவில போடுவதாக முடிவானது.25 பேர் கோண்ட நாடகமாக தொடங்கின் கடசியில் ஓரங்க நாடகம் போடும் நிலைக்குக்கு நான் தள்ளப் பட்ட சோகம்.(அதுவும் தனிப் பதிவா போட வேண்டியதுதான்).கிட்டத்தட்ட 2 வருடங்கள் நான் தமிழாலயத்தில் இணந்திருந்தேன். 4 உயிர்ப்பு இதழ்கள் வெளிவந்தன. ஒன்றைத் தவிர மற்றய மூன்று இதழ்களின் ஆசிரியர் பீடங்களும் சயந்தனின் ஆழுகைக்குள் இருந்தது.

பொங்குதமிழ் எழுச்சி நடந்த போது மேத்தா,அப்துல் ரகுமான் ,வைரமுத்து கவிதைகளை வாசித்த படி பொங்கியது தமிழாலயம்மும்.சும்மா சொல்லக் கூடாது பெடியள் எல்லாருக்கும் ஓவரான தமிழ் உணர்ச்சிதான். அடுத்த பொங்கலுக்கு இரட்மலானை இந்துக் கல்லூரியில மாணாவர்களுக்கு பரிசுகளோடு சென்ற தமிழாலயம் படை ஏழைச் சிறுவர்களுக்கு உதவிகளைச் செய்தது.அடுத்து நிதி சேகரிப்புக்காக நடத்தப் பட்ட கலைச்சாரல் விழா அந்த நாளில் வெள்ளவத்தை இளசுகளை அமர்க்களப் படுத்தியவொன்று உயர்தர வகுப்பு வாத்தி மாரைக் கூப்பிட்டு விவாதம் புரிய வச்சதில எக்கச்சக்க கலக்சன்.(தமிழ் நாட்டில செலிபிரேட்டியா சினிமாக்காரர ககூப்பிடுறதைப் போல.உங்களுக்குத் தெரியாது உயர்தர வகுப்புக்காலத்தில வாத்திமார்தான் எங்களுக்கு ஹீரோக்கள்.அவையளப் பற்றிக் கிசுகிசுவும் வரும்) கலைச்சாரலில சேர்த்த காசு இப்பவும் அன்றைய பொருளாளரும் சயந்தனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமான ஒருவரிடம் இன்னும் பாதுகாப்பாக உள்ளது.

இப்பிடியாக 2000ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை எடுத்த மானவர்களிடமிருந்த தமிழாலயம் அதன் பின்னர் அடுத்த உயர்தர வகுப்பு தேர்வெளுதிவிட்டு சும்மா இருப்பவர்களிடம் கொடுக்கப் பட்டது. அதன் பிறகு என்ன ஆனது என்று எனக்கோ ஏன் ஒரூகாலத்தில் தமிழாலயத்தில் கோலோச்சிய சயந்தனுக்கோ தெரியாது.

சரி இவளவு சொன்னன் நான் மினகெட்டு போனதுக்கு அந்த கூட்டத்தில ஒரு பொம்பிளப் பிள்ளையாவது இருந்ததோவெண்டு சொல்லையில்லையே எண்டு நீங்கள் கேட்கிறது விளங்குது.அட அநியாயத்திலும் அநியாயம் பெண்களை உள்ளெ சேர்ப்பதில்லை என்று தமிழாலயத்தில் முடிவே எடுத்திருக்கிறார்களாம்.காரணம் இளஞர்கள் தமிழாலயத்தில நடக்கும் உறுப்பினர் கூட்டத்தை சரியாக கவனிக்க மாட்டார்களாம்.

பின்னர் சில மாதங்களில் சயந்தன், பி.எஸ் செந்தூரன் ஆகியோரின் பெரும் முயற்சி மற்றும் போராட்டத்தின் பயனாய் பெண்களுக்கு தமிழாலயத்தில் இடஒதுக்டு கிடைத்தது.(இதுக்குப் பிறக்கு குட்டங்அகளுக்கு கணிசமானவர்கள் வந்தனர்.இ.செந்தூரன் பெண்கள் வருகையினால் இளஞர்கள் திசை மாறுவார்கள் என்று கூறி வெளிநடப்புச் செய்தார்) அனைவரும் எதிர்பார்த்தது போலவே வந்து சேர்ந்த மூன்று பெண்களில் ஒருவர் நிரந்தரப் பொருளாளர்.இன்னொருவர் ஆசிரியர் பீட உறுப்பினர்.அடுத்தவர் செயலாளரோ இல்லை வேறு ஏதோ ஒரு பெரிய பதவி.(இதுவும் சயந்தன்,பி.எஸ் ஆகியோரின் முயற்சி எண்டு நீங்கள் நினைத்தால் ஆம் என்று சொல்ல முடியாது.என்ன இருந்தாலும் உள் விவகாரங்களை வெளியில் சொல்லி கட்டுப்பாட்டை மீறுவது நாகரிகமல்ல).

இப்பிடியாக இருந்த தமிழாலயத்தில் எனக்கு தெரிந்து கொழும்பு பாடசாலைகளில் பயின்ற பெரும்பாலான விவாதக்காரர்கள் இணைந்திருந்தனர்.தமிழாலயத்துக்கும் ஒரு விவாத அணி இருந்தது. நான் அணியில் ஒருவன். தொடர்ந்து அணியில் இருந்த நான் ஒரு விவாத அரங்கில் பெண்களுக்கு இடம் வழங்க வேண்டும் என்ற நிர்பந்ததில் எனது இடத்தை வழங்க வேண்டியதாகப் போனது.அதன் பின்னர் நான் வேலையில் பிசியாகியதில் மீண்டும் அந்த இடத்தை பிடிக்க முடியாது போனது.பெண்கள் இட உதுக்கீட்டுக்காக ப்ரும் போராட்டம் நடந்ததால் பலர் தாமது இடங்களைத் தியாகம் செய்தனர்.

இப்படிப்பட்ட தமிழாலயத்தை சொன்ன நான் ஒருவர் பெயரை சொல்லாமலேயே வந்து விட்டேன்
அவர்தான் க.க.உதயக்குமார் ஆசிரியர்.எங்கள் தலைவர் அவர்.அவரை ரேடியோவில் அறிவுப்பு செய்யுமாபோல அறிவுப்பு செய்துகொண்டிருந்த ஏ.ஆர்.திருச்செந்தூரன் காகா உதயக்குமார் எண்டு அறிவுப்பு செய்தது முக்கிய வரலாற்று நிகழ்வு.

அடுத்த தமிழாலயம் தொடரில் பல சுவாரஸ்யங்கள் காத்திருக்கின்றன .இதுவரை எழுதியது தமிழாலயம் பற்றிய உற்சாக அறிமுகம் மட்டுமே.

16 comments:

Anonymous said...

//இவர் மட்டக்களப்பில படைச்சவர்.//

என்ன.. சரித்திரமோ

சினேகிதி said...

Sayanthan annava patri niraya visayam velila varum pola iruke :-)

arimugam nalla iruku micham innum suvarsmaya irukum pola.

Umasuthan keda pear pola iruku..nama oorila kadal la kulika poi setha oru annakum pear uma suthan than.

சயந்தன் said...

சுவாரசியமான சம்பவங்கள் என்ற பெயரில் நமது அமைதி வாழ்வைக் குலைக்கும் நாச வேலைகளில் ஈடுபட்டால் உமது கவிதையை இணையத்தில் வெளியிடுவேன் என எச்சரிக்கிறேன். (இந்த எச்சரிக்கையே போதும் என நினைக்கின்றேன்.)

சயந்தன் said...

Sayanthan annava patri niraya visayam velila varum pola iruke :-)

ஓமோம்.. நீங்க இனி விடுப்பு அறிய ரெகுலரா இங்கை வருவியள் தானே..?

Anonymous said...

பின்னர் சில மாதங்களில் சயந்தன், பி.எஸ் செந்தூரன் ஆகியோரின் பெரும் முயற்சி மற்றும் போராட்டத்தின் பயனாய் பெண்களுக்கு தமிழாலயத்தில் இடஒதுக்டு கிடைத்தது.

இதிலொரு தவறு உள்ளது. சரித்திரம் எழுதும் போது நன்றாக ஆராய்ந்து எழுத வேண்டும். நாளைய சந்ததிக்கு தவறான தகவல்கள் (சிநேகிதி போன்றவைக்கு) போய்ச் சேரக்கூடாதென்பதில் உம்மைப் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும்

சோமி said...

வராலாற்றுத்தவறுகளைக் கண்டு பிடிப்பவர்கள் அதனைத் தாராளமாக திருத்தலாம்.நமக்கு தெரிந்ததை மட்டும்தானே எழுதலாம்.மீளவும் நண்பர்களிடம் சரி பார்த்துக் கொள்கிறேன்.

சயந்தன் உமது அமைதி வாழ்கைக்கு பெரும் பங்கம் ஏதும் ஏற்படாது பார்த்துக் கொள்கிறேன்.
ஆனால் வாசகர்களே, சுவரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

டிசே தமிழன் said...

சோமி,இப்படியெல்லாம் உங்களைப்போன்றவர்கள் விரிந்த தளத்தில் இயங்கியிருக்கின்றீர்கள் என்பது மகிழ்ச்சி தருகின்ற விடயம்.
.....
வரலாறுகள் இருட்டில் மறைந்துவிடக்கூடாது. சயந்தனின் அமைதிவாழ்வுகுலைந்தாலும் வரலாறு உண்மை குலையாமல் பதிவு செய்யப்படவேண்டும் :-).

Anonymous said...

Thamilaalayam vasala etti nendu parthvangal ellam Thamilaalayam pattriyum anga nadantha visayangal pattrium eluthirangal......sirippa erukuthu...

Anonymous said...

அட கடவுளே... இந்த பதிவு எப்பிடி என்ட கண்ணில சிக்காம போச்சு..
ம்... வேலை வட்டியில்லாம இருக்கும் போது தான் சிக்கிச்சு..
தமிழாலயத்தின் 2003 -2004 காலப்பகுதி உறுப்பினர் என்னும் வகையில் நானும் ஏதாவது சொல்லித்தான் ஆகவேண்டும் ஆண்ணாமாரை பற்றியெல்லாம்..:-)
"அந்த காலம் நினைவுக்கு வருகிறது"
(ஹி ...ஹி...) வாசிக்கும் போது ஏதோ ஒன்றை தொலைத்து விட்டதை போல ஒரு உணர்வு உள்ளுர வந்து போனது( கொஞ்சம் வலியும் தான்)

தைப்பொங்கல் விழாவுக்கு .. நானும் வாறதுக்கு என்டு இருந்தனான். எனது மிக நெருக்கமான தோழி ஒருத்தி வந்து நாங்க வேற எங்கயோ போனதில வர முடியாம போயிட்டு ..
( வந்திருந்தா உங்கட நாடகத்தையும் திறமையையும் ..பார்த்திருக்கலாம் :-))

ம்... எங்கட காலத்திலயும் நிறைய கூட்டங்கள் நடத்தினனாங்கள் தான். மூன்று நான்கு நிகழ்ச்சிககளும் செய்தனாங்க.
புத்தகம் அடிக்கிறதுக்கு பெரும் ஆர்வமா இருந்த சிலர்ல நானும் ஒன்டு.( உயிர்பின்ட மூச்சை தொடருவம் என்டு)

காகா உதயகுமார் சேர்ட விசாரிச்சு பார்த்ததில .. காசு இல்லை காசு சேர்க்க வேணும் என்டு சொன்னவர்.
( கடைசியில காசு பிரச்சினையால முடியாமலே போயிட்டுது.)

அண்ணா சயந்தன்...

அந்த காசை இப்பயாவது உங்கட நெருக்கமான நபர்ட இருந்து வாங்கி.. தமிழாலயத்துக்கு கொடுத்து விடுவீங்களே... ( வாற கிழமை இலங்கைக்கு போறதா இருக்கிறன் ..போய் என்ன நிலமை என்டு பார்க்கிறதுக்கு .. எங்கட இளசுகள் சாதிக்க வழி செய்து குடுக்க வேணாமே..)
சோமி ..
அது சரி எந்த மடையன் சொன்னவன்
தமிழாலயத்தில பெண்களை சேர்க்க கூடாது என்டு... அவன்ட பேரை ஒரு ஒருக்கா சொன்னீங்களென்டால் இலங்கை பயணம் இன்னும் சுவாரசியமா இருக்கும்.
:-)

ஒரு 5 வருடம் பின்னோக்கி போன மாதிரி சந்தோசமா இருந்திச்சு பதிவுக்கு நன்றி சோமி. அடுத்த பதிவை ஆவலோடு எதிர் பார்க்கிறன்.

- கீர்த்தனா.

சயந்தன் said...

//சயந்தனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமான ஒருவரிடம்//

இது சோமி எழுதியது.

//உங்கட நெருக்கமான நபர்ட இருந்து வாங்கி..//

இது கீது எழுதியது

இவ்வாறு தான் வதந்திகள் உருவாகின்றன.

Anonymous said...

nalla suvarasjama etukku unkada muthal pathivu. eppathan vaasikka chance kidachchuthu. soorian fm senthurana?
krishna

தூயா said...

//"அந்த காலம் நினைவுக்கு வருகிறது"//

சோதனை மேல் சோதனை..போதுமடா சாமி ;)

சோமி said...

ஏ.ஆர்.திருச்செந்தூரன் என்பது சுரியன் எப்.எம் செந்தூரன் தான்.

அடுத்த பதிவைப் போடுறதுக்கு ஆசைதான் நேரம் அதுக்கு இடம் கொடுகுதில்லை.

வந்தவங்களுக்கெல்லாம் நன்றி.

Anonymous said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)

மலைநாடான் said...

சோமி!

சிலபல வேளைகளில், இடமும், காலமும், நபர்களும், மட்டுமே, மாறுபடுகின்றன. காட்சிகள் என்னவோ ஒரேமாதிரியாகவே அமைந்துவிடுகின்றன.

நல்ல நினைவு மீட்பு. இந்த வரலாற்றுக்குறிப்பில் வழுவேதும் வந்துவிடக்கூடாது என்பதை நானும் ஆமோதிக்கின்றேன்.:))

Anonymous said...

In Tamil Diaspora "Thamilalayam" is the name for tamil schools run by LTTE agents and the like.