பிரியத்துகுரிய என் செல்பேசியே,
இப்போது நீ யாரோ ஒருவரின் வாய்க்கும் காதுக்கும் இடையில் சிக்குப் பட்டிருக்கலாம்.
எவனோ ஒருவன் சொல்லும் ஆபாச ஜோக்கை இன்னொருவனுக்கு கடத்திகொண்டிருகலாம்.
ஒரு இனிய காதலர்களின் மொழி உன்னூடே பகிரப் பட்டுக்கொண்டிருக்கலாம்.
கலைஞர்,திராவிடம் ,செயலலிதா பற்றிய அரசியல் பேச்சுக்கள் நடக்கலாம்.
யாரவது ஆன்மிக அருளுரை நிகழ்த்திக் கொண்டிருக்காலாம் ஒரு பக்த்தன் உன் வழியே அதைக் கேட்டுக் கொண்டிருக்கலாம்.
ஒருவனை கொல்லும் சதித் திட்டம் உன் ஊடே நிகழ்த்தப் படலாம்.
இப்படி இப்படி இன்னும்...
சாரு நிவேதிதா கற்பனை செய்தது போல் நானும் கற்பனை செய்து பார்த்தேன்...வேண்டாம்....
இதற்கு மேல் என்னால் கற்பனை செய்வது இலகுவானதாயில்லை.இன்னும் வலிக்கிறது
உனக்கு சாருவையும் தெரியும் போனவாரம் தனது கவிதைப் புத்தகம் தந்து விட்டுப் போன சேகரையும் தெரியும்.கடந்த மூன்று வருடத்தில் எனக்கு தெரிந்த அத்தனை பேரையும்தெரிந்தவள் நீ.
உனக்கு தெரியாமல் நான் சல்லாபித்ததுகூட இல்லை.நான் உறங்கும் போதும் என் கூடவே அருகில் விழித்திருந்து அதிகாலையில் நேரம் சொல்லி எழுப்பியவள் நீ.நடு இரவிலும் என்னை உலகத்தோடு இணைத்தவள். நான் ஒரு பத்திரிகைக்காரன் என்பதை நள்ளிரவில் தட்டியெழுப்பி சேதி சொல்லிப் புரிய வைத்தவள்.உனக்கும் எனக்கும் மட்டும் தெரிந்த அரசியல் இரகசியங்கள் எத்தனை(என் காதல் அரசியல் வரைக்கும்).எத்தனை முக்கியத்துவம் மிக்க தொலைபேசி இலக்கங்களை உன்னுள் தேக்கி வைத்திருந்தாய்.
என் தோழிகளுக்கும் எனக்குமான ஊடாட்டத்தை முற்றிலும் அறிந்தவள் நீ.அன்று அவள் பேசிய வார்த்தைகளில் நொந்து போயிருந்த எனக்கு நீடித்த தனிமையில் இருந்த ஒரே ஆறுதல் நீதானே.என் தோழியின் பல குறுஞ்சேதிகளைத் தேக்கிவைத்து நினைவுகளில் என்னை தினம் தினம் மகிழ்ச்சிப் படுத்தியவன் நீ. இன்றைக்கு எல்லாவற்றையும் உன்னுள் வைத்து கொண்டு என்னைப் பிரிந்து போனாயோ.
என் தோழி என்னைப் பிரிந்த பொழுதுகளிலான அதே வேதனையே இப்போதும் என்னுள்.
விடிய விடிய உன்னில் பேசியிருகிறேன்.அந்த பொழுதுகளில் என் தோழியின் துக்கத்தையும் வேதனையையும் நீ தூங்காது விழித்திருந்து உள்வாங்கினாய்
என் துயரம் சந்தோசம்.அழுகை,வன்முறை,அறிவு ,உணர்வு எல்லாமும் தெரிந்த ஒருத்தி நீ மட்டும்தான்.
நீ பிரிந்து போன போதுதான் எனக்கு தெரிந்தது எனக்கும் உனக்கும் இத்தனை உறவிருந்ததென்று. ஒரு நாள் முழுவதும் சாப்பிடவே பிடிக்கவில்லை அழுகை அழுகையாக வந்தது.ஒரு செல்போன் போனதுக்கு ஏன் இவ்வளோ அதுவும் பழைய போன், வித்தாலும் 1000 ரூபா தேறாது என்று என் நண்பன் சொன்னான் அவனுக்கு தெரியாது உனக்கும் எனக்குமான உறவு
புதிய போன் வாங்க வேண்டிய தருணங்களிலெல்லாம் உன்னை என்னில் இருந்து பிரிக்கமுடியாமல் உன் கூடவே இருந்தேனே உனக்கு மட்டும் எப்படி மனசு வந்தது என்னைப் பிரிந்து செல்ல.
அந்த திங்கள் பின் காலைப் பொழுது வரை தூங்கி கண் விழித்த போது என்னில் நீ பிரிந்திருந்தாய்.நான் உன்னைப் பிரிந்து தூங்கியதில்லையே.என் நண்பன் உன்னைப் பிரித்து மேசையில் தனித்து வைத்த கோபத்தில் என்னை விட்டுப் போனாயோ இல்லை அப்படிச் செய்வதற்க்கு நீ சாதாரண மனுசி இல்லையே. இல்லை உன்னை யரோ பலாத்காரமாக திருடிச் சென்றிருக்கிறார்கள்.அவர்களோடு நீ முரண்டு பிடித்திருப்பாய்.அவர்கள் யாரிடமாவது இப்போது உன்னை விற்றிருக்க கூடும்.
உன்னை போலவே என் கூட இருந்த ஒரு டிஜிற்றல் கமரா என்னை விட்டுப் போனதன் பின் வந்தவள் நீ.உனக்கு அது பற்றிய நிறையக் கதைகள் சொல்லியிருகிறேன்.நண்பன் செந்தூரன் விருபிய கமெரா அது.அவன் அகாலமாக இறந்து சில நாட்களில் அதுவும் அகாலமாக என்னை விட்டுப்போனது. எனக்கு தொடர்ந்து வலியைத் தந்த அந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் பிறகு உன்னில் ஒன்றித்தேன்.மனிதர்களைவிடவும் உன்னை நான் நேசித்தேன்.நான் விரும்பியும் இருக்கமுடியாமல் தவிக்கிற நானாக இருத்தலில் நீ நீயாக இருந்தாய்.நானும் உன்னில் மட்டும்தான் அதிகம் நானாக இருந்தேன்.என் கோபத்தில் எத்தனை தடவை நீ அடிபட்டிருப்பாய்? உன்னை நான் தூக்கியெறிந்த பொழுதுகள் எத்தனை. உன்னை இந்தனை கொடுமைப் படுத்திய போதும் எனக்காக எப்படி உன்னல் இயங்க முடிந்தது என்று நானே ஆச்சரியப் பட்டேன்.
இதற்கு மேல் எழுத முடியவில்லை. இபோது தவிர்க்கமுடியாமல் புதியவள் ஒருத்தி வந்திருக்கிறாள்.அவள் உன்னை விட பெறுமதியானவளாம்.அழகானவளாம்.என்னைப் படமெடுகிறள்.பாட்டுப்பாடுகிறாள்,நியும் பாடக் கூடியவள்தான் ஆனால் நான் உன்னில் பாட்டை ரசித்ததில்லை.என் குரலைப் பதிவு செய்கிறாள்.இன்னும் நிறைய சாகாசங்கள் செய்கிறாள். ஆனால்,என்னால் இன்னும் அவளோடு இணைய முடியவில்லை. நீ கூட இருந்த போது இருந்த உணர்வு இல்லை.
அடுத்த முறை சிலவேளை உனக்கு நான் மடல் எழுதலாம் அப்போது அவள் என்னில் நெருங்கியிருக்கலாம்.இதுதானே மனித இயல்பு.உன்னைப் பற்றிய வலி நிறைந்த உணர்வுகளை சுமந்த படியே இன்னொருத்தியை ஏற்றுக் கொள்ளுவது எனக்கு அவசியமாகிறது.கால ஓட்டத்தில் நீயும் கூட என்னை மறந்து விடுவாய்.என்னுடன் புதியவள் அப்போது மிக நெருகமானவளாக இருக்கலாம். நினைவுகள் மட்டுமே அப்போது நம்மிடம் மீதமாக இருக்கும்.
என் பிரிய செல்போனே நான் உன்னில் இருந்து விடை பெற்றுக் கொள்ளுகிறேன்.
பிரியமுடன்
உன் தோழன்
சோமி.
குறிப்பு: அன்பு நண்பர்களே என் செல்போன் எனது வீட்டில் வைத்தே திருட்டுப் போன காரணத்தால் உங்கள் அனைவரினதும் தொலைபேசி, செல்லிடபேசி இலக்கங்கள் தொலைந்துவிட்டன தயவு செய்து போன் பண்ணூகள் இல்லையெனில் மிஸ்டுகால் கொடுங்கள் நான் போன் செய்து உறுதிப் படுத்திக் கொள்ளுகிறேன்.இல்லையெனில் குறுஞ்செய்தி அனுப்புங்கள்.எனது பழைய இலக்கமே தொடர்ந்தும் பாவனையில் உள்ளது.(0091 9940 390 479)
Friday, February 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
ahhh...kavalaya iruku nallathan miss panreengal unga phone i .
veedukuleya thiruda? maari engayum vachidengelo?
Cell phone kooda ivlu nesika mudiuma ..en phone la ethina keeralgal kaayangal.
அட...!கைத்தொலைபேசியில் இத்தனை காதலா...? ஒரு உயிருள்ள பொருளைப் (இதிலோரு சொற்பிழை) போல கற்பனை செய்து நீங்கள் எழுதியிருந்ததை வாசிக்கும்போது இடைநடுவில் அதுவொரு தொலைபேசியென்று மறந்துபோயிருந்தது. தொலைந்தாலென்ன தனது ஞாபகமாய் ஒரு பதிவைத் தந்திருக்கிறது அல்லவா... போனைத் தொலைத்தாலும் ஒரு பதிவு(ஆனை செத்தாலும் ஆயிரம் பொன்)என்ற தொனியில் வாசிக்கவும். என் போன்றவர்களது போன் தொலையமாட்டாதா என்றிருக்கிறது. தெரிந்தே தொலைக்கவும் மனதில்லை.
//இதுதானே மனித இயல்பு.உன்னைப் பற்றிய வலி நிறைந்த உணர்வுகளை சுமந்த படியே இன்னொருத்தியை ஏற்றுக் கொள்ளுவது எனக்கு அவசியமாகிறது. //
இவை வரியல்ல; தத்துவம். :-)
வந்து என் பதிவைப் பார்த்தவர்களுக்கு நன்றி.
வீட்டினுள் மறந்து வைத்து விட்டேன் என்று 2 நாடகள் சல்லடை போட்டுத் தேடினேன். ம்....கிடைகவேயில்லை.
கானணாமல் போனதாக கருதப் படும் நேரத்துக்கு பிறகு நண்பர் ஒருவர் அழைப்பு எடுத்த போது யாரோ எடுத்திருகிறார்கள்.
ம் .....நம்ம கூட நெருங்குறவக்க யாரும் நம்ம கூட அதிக நாட்கள் இருகிறதில்லா....
/Cell phone kooda ivlu nesika mudiuma ..en phone la ethina keeralgal kaayangal. /
என் அறையின் சுவர்களுக்கும் எனக்கும் உள்ள உறவு இதைவிட அற்புதமானது. நான் நானாக ஒரு நாளில் ஒரு தடவையாவது இருக்க நினைக்கிறேன். அது என் அறைச்சுவருடனும்,தலையணயுடனும் போனுடனும் கமராவுடனும் மட்டுமே முடிகிறது.
இப்போதெல்லம் எனக்கு நெருங்கிய நணபன் என் தலையணைதான் அவனிடம்தான் நான் எல்லாவற்றையும் கொட்டித்தீர்ப்பேன்.
ஒரு முறை என் கைத்தொலைபேசியைத் தொலைத்து விட்டு (அப்போது நான் உம்முடைய வீட்டில் இருந்தேன் எனச் சொல்வது வேறெந்த சந்தேக நோக்கத்திற்காகவும் இல்லையப்பா..) நான் பதைபதைத்து கதிகலங்கி நின்ற போது சிரித்து ஏளனம் செய்தவரே..
இப்போது புரிகிறதா வலி..? ஒரு இனிய காலத்தின் நிழல்ப் பதிவுகள் அத்தொலைபேசியோடு போனது பெரிய சோகம் தான்.
போனைத் தொலைத்தாலும் ஒரு பதிவு(ஆனை செத்தாலும் ஆயிரம் பொன்)என்ற தொனியில் வாசிக்கவும்.
ம்...... தமிழ்நதி நான் ஈழத்து பத்திரிகைக்காரன்தான்.வெளிநாட்டு ஊடகங்களுக்கு சாவுச்செய்திகளை சொல்லிக் கொண்டிருந்தவந்தான். ஆனால் வலிகளைச் சொல்லுகிற போது இதுபோல இன்னொரு வாய்ப்பு வரக்கூடாது என்று மனசு சொல்லும்
இன்னுமொன், நானும் என் தோழியும் திருமணம் செய்து கொள்ள்வோம் என்ற்றிருந்த நாட்களில் ஒரு நாள் சட்டென்று நினைத்தேன்..எனக்கு பிரிவின் வலி தெரியாமலே போய்விடப் போகிறதே. ... அதன் பிறகு 2,3 அனுபவங்களாகிவிட்டது...
சயந்தன்,
அந்த தொலைபேசிய நீ சங்கிலியெல்லாம் போட்டு கட்டிவைத்திருந்தாய்.அது தொலைந்தது ஆட்டோவில். அதெல்லாம் வாலிப வயசில்ல அப்பிடித்தான் இப்ப வயது போனதுக்கு பிறகுதானே அனுபவம் வரும்(!). நீ யும் என்னை எவ்வளவு நக்கல் பண்ணினாய்.இப்ப கலியாணம் குடும்பம் எண்டு செற்றிலாகினதுக்குப் பிறகு எவ்வளவு பொறுப்பாய் இருகிறாய்(?!).
சயந்தன் உனக்கு நினைவிருக்கா செந்தூரனின் ஞாபகமாக வைத்திருந்த அவனின் சிம் காட்டும் உன் போனோடு தொலைந்து போனதே..
பிரிவின் வலியையும் அனுபவிக்க வேண்டும். நீண்ட பிரிவின் பின் இணையும் அக்கண மகிழ்வையும் அனுபவிக்க வேண்டும்.
நான் காதலிக்க வேண்டும்.
நான் காதலிக்கப்பட வேண்டும்.
நானும் காதலிக்கப்பட வேண்டும்.
காதல் மறுக்கப்பட வேண்டும்
காதல் ஏற்கப்பட வேண்டும்
சோமி.. பதிவு மிக நன்றாய் இருந்தது.
ஓரிரண்டு கண்ணீர் துளிகளையும் வரவைத்தது.
சில வேளை தொலைபேசி தொலைந்தது கூட நல்லதுதான். :-)
கடந்த காலத்தின் கசப்புக்களை மறக்கலாம் இல்லையா?
அன்புடன்
தோழி
என்னாது போனைத் தொலைச்சிட்டீரா.. இனியாவது பொம்பிளைப் பிள்ளயள் உமது அறுவைத் தொல்லையில்லாமல் ஆறுதலாக இருக்கட்டும்
என் தோழியே,
எனது இந்தப் பதிவு உன்னை வேதனைப் படுத்தியிருந்தால் என்னை மன்னித்துக் கொள். இது உன்னை தொந்தரவு செய்வதகாக எழுதப் பட்ட பதிவல்ல. உனது கண்ணீரும், இன்றைய நமது யதார்த்தங்களும், காலமும், சேர்தலும் பிரிதலும் அற்ற நெடும் பயணமும் ..............
மௌனமாக மெல்ல மெல்ல நடப்போம் வலிகளைச் சுமந்தபடியே.
சில அனானிகளின் பின்னுட்டங்களை முதல் தடவையாக வெளியிடமுடியாமல் போனது.இதுவரையில் என்னல் வெளியிட முடியாமல் போகுமளவுக்கு எந்த பின்னூடமும் வந்ததில்லை எத்தகைய விமரிசனமாக இருந்தாலும் வெளியிடுவேன்.நான் வெளியிட்டிருக்கும் ஒரு அனானி பின்னுட்டமே இதற்கு உதாரணம்.
ஒருவன் வலிகளை எழுதியிருகிறான் என்பதை ............. மாற்றுவதில் சிலருக்குள்ள ஆர்வத்தை அனுமதிக்க முடியவில்லை.ஆக பெயர் தெரியாத அனானிகள் சிலரை மட்டிறுத்தித் தடை செய்தேன்.
பெடிச்சி, //இதுதானே மனித இயல்பு.உன்னைப் பற்றிய வலி நிறைந்த உணர்வுகளை சுமந்த படியே இன்னொருத்தியை ஏற்றுக் கொள்ளுவது எனக்கு அவசியமாகிறது. //
இவை வரியல்ல; தத்துவம். :-)
தத்துவம் என்கிறீர்கள் அதுதானே யதார்த்தம்.
இதுதானே மனித இயல்பு.உன்னைப் பற்றிய வலி நிறைந்த உணர்வுகளை சுமந்த படியே இன்னொருத்தியை ஏற்றுக் கொள்ளுவது எனக்கு அவசியமாகிறது.//
வணக்கம் சோமி... உந்த தத்துவம் யதார்த்த வரிகள் தான் எனக்கும் பிடித்திருக்கிறது ...நல்ல ஒரு பதிவு
வணக்கம் சோமி..
அருமையான பதிவு, மிக மிக அழகான வரிகள்...
உங்கள் கடிதத்தை படித்தவுடன் என்னவள் மீது என் காதல் கூடுகிறது
நினைத்துப் பார்த்தால் நமக்கும் உங்கள் உணர்வுகள்தான் ஏற்படுகிறது.எனக்கு ஒரு சின்ன டவுட் நீங்கள் செல்போன நினைச்சு எழுதினிங்களா இல்ல உங்கள் தோழியை நினைத்து எழுதினிங்களா?
தோழன்
/உங்கள் கடிதத்தை படித்தவுடன் என்னவள் மீது என் காதல் கூடுகிறது/
இந்தப் பதிவின் உச்சப் பெறுமானமாக உங்கள் பின்னூட்டம் இருக்கும் போல.....கடற்கரையில் தனிமையில் இருந்து காற்றோடு பேசுகையில் இருகிறது சுதந்திரம் அலாதியானது. அந்தக் கடற்கரையில் இருந்து கிளம்பும் போது ஏதோவொன்றை விட்டுச் சென்றதாக எனக்கு சில வேளைகளில் தோன்றும்
தோழன்,சின்னக்குட்டி,கோபிநாத் ஆகியோர் பின்னூட்டமிட்டமைக்கு நன்றி
தொலைந்தது தொலைபேசி இல்லை. தொலைந்தது உன் தொல்லை.
புள்ளிராஜா
மேற்குறித்தது போன்ற பின்னூட்டங்களை ஒருவர் தொடர்ந்து அனுப்பி வந்தார்.சரி அவரின் ஆசையை ஏன் கெடுப்பான் என்று அனுமதித்து விட்டேன்.
ஆனால்,தனிப்பட்ட எனது வாழ்க்கையைத் தாக்கும் விதத்திலும் குறித்தும் சிலர் எழுதும் மிகக் கேவலமான விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் விடுவதைத் தவிர வேறு வழியில்லை.
நண்பர்களே உங்கள் ஐ.பி முகவரிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனலும் இந்த மனிதர்களை என்ன செய்வது.
//ஆனால்,தனிப்பட்ட எனது வாழ்க்கையைத் தாக்கும் விதத்திலும் குறித்தும் சிலர் எழுதும் மிகக் கேவலமான விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் விடுவதைத் தவிர வேறு வழியில்லை.//
சோமி, இந்த பதிவை ஒருமுறை பாருங்கள்
உண்மையில் சோமி, முதலில் நன்றி. இவ்வளவு நாட்கள் படிக்காமல் விட்ட காரணம் போர்சூழலில் எழுதபெற்ற ஒரு கடிதமாய் இருக்கும் என்று நினைத்தேன். வெரித்தாஸ் வானோலியில் ஒலிபரப்பட்ட கண்ணீர்கடிதங்களை சுபவி படிக்கும் போது கேவி அழுதுவிடுவேன், எரிமலையில் வந்த வில்லுகுளத்து பறவை தொடர் படித்து கலங்கிப்போனவன் நான். உங்களின் நிர்வான ராணுவம் பதிவும் பாதித்தது. படித்து மனம் கனத்தால் குறைந்தது இரண்டு நாளாகும் மீள.
உங்கள் பதிவு பாசம் என்பது எதின் மீதும் செலுத்தலாம் என்று சொல்லாமல் சொல்லுகிறது.
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
ம்....மயூரன் வாசித்தேன். திட்டமிட்டு இருவருகுள் பிரச்சனையை உருவாக்குவதற்கும் பின்னூட்டத்தைப் பயன்படுத்தலாம் என்பதற்கு உங்களுக்கு வந்த பின்னூட்டம் உ+ம்.
வரவனையான்,வரவுக்கும் வாசித்துவிட்டு போனில் பேசியதற்கும் நன்றி.
Post a Comment