யாழ்ப் பாணம் பற்றிய எனது கட்டுரை ஒன்று இந்தவார ஆனந்தவிகடனில் வெளிவந்துள்ளது.இன்றைய யாழ்ப்பாணச் சூழல் பற்றிய நேரடிப் பதிவாக அங்குள்ளவர்களோடு பேசி இந்த கட்டுரையை எழுதினேன்.
http://www.vikatan.com
இந்தப் பக்கதில் விகடன் கட்டுரைகளைப் பார்க்க முடியும்.
சில படங்களை மட்டும் உங்களுக்கு தருகிறேன்.

யாழ் நகரப் ப்குதியில் கெடுபிடியான இராணுவப் படையினன்

யாழ் பேருந்து நிலையம் அருகே இருக்கும் இராணுவ உயர் பாதுகாபு வலையம்.இதனைச் சூழவுள்ள 3 பிரதான வீதிகளும் பல வீதிகளும் மூடப் பட்டுள்ளன. யாழ் வைத்திய சாலை இந்த உயர் பாதுகப்பு வலையத்தின் எல்லையிலேயே உள்ளது. இப்போது பேருந்து தரிப்பிடம் இப்பகுதியில் இருந்து மாற்றப் பட்டுள்ளது.

இது கட்ந்த வருடத்தில் என்னால் எடுக்கப் பட்ட படம் அரியாலைப் பகுதியில் உள்ள இராணுவ உயர் பாதுகாப்பு வலையப் பிரதேசம். அரியாலை யாழ் மாநகரசபையின் எல்லைப் பகுதி. 2000 த்தில் விடுதலைப் புலிகளால் கைபற்றப் பட்டு இந்திய அழுத்தத்தினால் இலங்கை இராணுவ வசமானது.
4 comments:
நீங்கள் சொல்லும் முன்பே நான் விகடனில் படித்துவிடேன்... மண்வாசனையுடன் அருமையாக இருந்தது
விகடனுக்கு எப்படி ஆக்கங்களை அனுப்புவது
http://poomalai.blogspot.com/index.html
sempiyan republished my aananda vikadan article.
//நீங்கள் சொல்லும் முன்பே நான் விகடனில் படித்துவிடேன்... மண்வாசனையுடன் அருமையாக இருந்தது...//
எமது மக்களின் அவலம் 'மண்வாசனையுடன் அருமையாக இருந்தது' என்று சொல்ல உங்களால் மட்டும் தான் முடியும்!!!!! உங்களின் மனிதாபிமானம் சொல்லி மாளாத ஒன்று. நன்றி அருண்மொழி!
வாழ்த்துக்கள் சோமி
நம் தாயக நிகழ்வுகள் வெளியுலகிற்கு இப்படிப்பட்ட வகையிலாவது போகவேண்டும்.
Post a Comment