'வரும் ஆனா வராது' என்று ரேஞ்சில் இருந்த யாழ்ப்பாண நுலகம் குறித்த ஆவணப் படத்தை அனைவரின் பார்வைக்கும் முன்வைக்கும் நிலை உருவாகியுள்ளது. 2006 இல் ஆரம்பிக்கப் பட்ட வேலை 2 வருடங்களின் பின் திரையிடலுக்காக தாராகியுள்ளது.
இது யாழ் நூலக குறித்து நாம் உருவாக்க நினைத்த முழுமையான ஆவணமாக இல்லை என்கிற போதும் ஏதோ ஒரு நிலையில் வெளியிட்டே ஆகவேண்டும் என்கிற முடிவில் இதனை நிறைவு செய்திருகிறேம்.ஏனெனில் யாழ்ப்பான நூலகம் யாழ்ப்பாண சமூகத்தொடும் இலங்கையின் அரசியலோடும் மட்டும் வரையறுத்துக்கொண்ட ஒன்றல்ல. யாழ் பொதுசன நுலக தனது 75 வருட வரலாற்றில் பல கதைகளைக் கொண்டிருக்கிறது.
இப்போது உருவாக்கியுள்ள படத்தில் முடிந்தளவு நூலகம் சார்ந்த வரலாற்றையும் அதன் எரிப்புக்கு பின்னான இலங்கையின் இனப் போரும் அதற்குள்ளான நூலகத்தின் பயணம் குறித்தும் பதிவு செய்திருக்கிறோம்.இன்னும் இன்னும் நிறைய செய்திகளும் காட்சிகளும் பலரிடம் இருக்கலாம். அவை மேலும் செழுமையான ஒரு வரலாற்று ஆவணத்தை ஒருவாக்க உறுதுனை புரியும்.
நேரம் ,பணம் என்பவை ஒரு வரலாற்று ஆவாணப் படத்தின் உருவாக்கதில் அதிகம் செல்வாக்குப் பெற்றவை.அது போதும் இத்தோடு நிறுத்திக் கொள் என்கிறபோது நாம் நிறுத்தியே ஆக வேண்டும்.
சரி, இனி நீங்கள் படத்தைப் பார்கலாம். பல இடங்களிலும் திரையிடுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருகிறார்கள்.அப்போது நீங்கள் படத்தைப் பார்க்கலாம்.DVD உருவாகியவுடன் அதனை வங்கியும் பர்கலாம். விமர்சிக்கலாம்,நிரகரிகலாம் ,மேலும் பல செய்திகளையும் தகவல்களையும் சேர்க்க உதவலாம்.எங்கு எப்போது யார் திரையிடுகிறார்கள் என்ற விபரம் பின்னர் தருகிறேன்.
இந்த நேரத்தில் என்னோடும் எமது நிகரி திரைப்பட குழுவோடும் இந்த முயற்சிக்கு தோள் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
Saturday, March 01, 2008
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
மகிழ்ச்சி, சோமிதரன்.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
இறுவட்டுக்களை சிவகுமாரிடம் பெற்றுக்கொள்ளலாம் தானே?
வாழ்த்து.
உங்கள் முயற்சியின் அழுத்தம் புரிகிறது.
மகிழ்ச்சியாகயிருக்கிறது சோமிதரன்.
/வாழ்த்து.
உங்கள் முயற்சியின் அழுத்தம் புரிகிறது./
அப்பாடா......ம்
நன்றி மயூரன் இப்போதைக்கு சிவகுமாரிடம் DVD பெற முடியுமா என்று தெரியவில்லை. விரைவில் திரையிடுவார் என்று நம்புகிறேன்.
//இது யாழ் நூலக குறித்து நாம் உருவாக்க நினைத்த முழுமையான ஆவணமாக இல்லை என்கிற போதும் ஏதோ ஒரு நிலையில் வெளியிட்டே ஆகவேண்டும் என்கிற முடிவில் இதனை நிறைவு செய்திருகிறேம்//
புரிந்தது.. புரிகிறது. தொடர்க.. வாழ்த்துக்கள்.
vazthukal somi....
kurainthathu oru thiraiyidalukku melaana erpattodu ungalai santhikkiren
nantrykaL... prince nichyamaaka ungkal periyaar thidalil thiraiyiduvOm.
vazthukkal somee anna
Tharsha
வாழ்த்துகள். :)
உங்கள் நீண்ட கால உழைப்பு வெற்றிபெற்றுவிட்டதையிட்டு மிக்க மகிழ்ச்சி :)
வாழ்த்துகள். :)
இலங்கைப்பத்திரிகையிலும் இதைப்பற்றிய ஆக்கம் வெளிவந்தது (தினக்குரல்)
இலங்கையில் வெளியிடும் எண்ணம் இருக்கிறதா
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
மிக அருமையாகப் பதிவு செய்திருந்தீர்கள் சோமி!
குறும்ப்டம் நிறைவு பெற்ற பின்னும் கூட அரங்கில் நிலவிய நிசப்தம் உங்கள் உழைப்பை உணர்த்தியது!
வாழ்த்துக்கள் சோமி!
எரியும் நினைவுகள்
தோழரே தங்களின் எரியும் நினைவுகள் படத்தை கண்டேன், தமிழரின் கலை அறிவியல் பெட்டகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்டதன் நினைவுகளை மிகவும் அருமையாக பதிவு செய்திருந்தீர்கள்,தமிழ் இன அழிபிற்க்கானவழியாக தான் சிங்களவர்களின் பார்வை இருந்ததை தெளிவாக பதிவு செய்திருந்தீர்கள். காலத்திற்கு தேவையான ஓர் வரலாற்று பதிவு. வாழ்த்துக்கள்...
Cbprasad08@gmail.com
Post a Comment