Sunday, March 02, 2008

என்ன நடக்குது தமிழ்மணத்தில.....

தெரியாமத்தான் கேட்கிறன் என்னதான் நடக்குது தமிழ் மணத்தில......யார் யாரை வெளிய போகச் சொல்லுறது...யாருக்கு யார் கழுத்தறுப்பு செய்யுறது.... யாரவது உலகத் தலித் மாநாடு போட்டிச்சினமா? இல்லை தமிழ் தேசிய ஆய்விலும் இலங்கை இனச் சிக்கலுக்கு தீர்வு திட்டம் முன் வைத்தும் பதிவுகள் ஏதும் வந்தனாவா?

இல்லை நம்ம வரவனை முதல் லேட்டஸ் தூயா வரைக்கும் யாரவது புதிசான மொக்கை போட்டார்காளா.? பாலபாரதி பு.பித்தன் பற்றியோ, செ.மோகன் பற்றியோ ஏதேனும் அறிவியல் மன்னிக்கவும் அறிவுபூர்வ கட்டுரை எழுதினாரோ?

வசந்தன் முதல் தமிழரங்ககாரர் வரை ஏதும் சூடாக விவாதம் நடத்தினவையோ( இஞ்ச சயந்தன், வடை சுட்டு இன்ரனெற்றில சுடச் சுட அனுப்பினவை எண்டு நக்கல் விட்டாதையும்) தவிர இன்னும் பிற நம் தோழர்கள் என்னென்ன செய்தவை எண்டு யாரவது எனக்குச் சொல்லுங்கப்பா.....அட கானபிரபாவை கேட்கயில்லை அதுசரி அவர் வேற என்ன செய்திருப்பார் நல்ல சினிமா பாடல்களை வாரி வழங்கியிருப்பார். மலைநாடன் பாற்றியும் கேட்கையில்லைத்தான் அவரின் பாதுகாப்பு காரணங்களுக்காக கேட்காமல் விட்டுடன்.

இத்தால் இப்பிடி நான் கேட்பதின் ஊடாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வலைப்பூ பக்கம் வந்திருப்பதை உங்களுக்கு தெரியப் படுதுகிறேன். டமில் ஸுழலில் இதுகள் முக்கியம்.

முந்தநாள் தமிழச்சி மீண்டு ஆத்திரப்பட்டு பதிவு போட்டிருகிறா வழமை போலவே நிறைய வாழிகள். இப்ப தமிழ் மணத்தில் பதிவெழுதும் பல்லாயிரக் கணக்கானவர்களில் சில ஆயிரம் பேர் மொக்கைப் பதிவுக்கு தாவியிருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.ஈழத்து பதிவர்கள் எழுதுவதை நிறுத்திக் கொண்டது ஏனென்று தெரியல்ல... சிலர் தமிழீழம் கிடைச்சாத்தான் எழுதுவம் எண்டு சொன்னதாகவும் கேள்வி...நல்ல முடிவு.

சரி இதுக்குமேல் இனி மொக்கையாக எதுவும் போடுவதிலை இனிமேல் கிடைகிற நேரத்தில் கடலை போடும் எண்ணமிருப்பதால் வலையர்கள் தப்பித்தீர்கள். கா+ம் என காதலிக்கும் அவள் காதலனுக்கும் கலியாணம்.:)

8 comments:

Anonymous said...

அடங்கப்பு! கண்ணாடி போட்டுக்குனு வா அப்பூ உனக்கு இருப்பு ஆப்பு தமிழச்சி கோவப்பட்டாவா? கோணிபடம் போட்டாவா எண்டு விளங்கும்.

PRINCENRSAMA said...

//கா+ம் என காதலிக்கும் அவள் காதலனுக்கும் கலியாணம்.:)// ithu eppa????

:)

Anonymous said...

//ஈழத்து பதிவர்கள் எழுதுவதை நிறுத்திக் கொண்டது ஏனென்று தெரியல்ல..//

அப்ப கானா பிரபாவை ஆர் எண்டுறீர் - -

கட்டைதுரை said...

அப்பு,
//கா+ம் என காதலிக்கும் அவள் காதலனுக்கும் கலியாணம்.:)//
எந்த காதலிக்கும் அவாவின் எந்தக் காதலனுக்கும் கலியாணம் அப்பு?

தம்பி சோமு,
தமிழீழம் கிடைச்சா தான் யட்டி போடுவன் எண்டு 5 வருசமா ஒரு முடிவோட இருக்கிற உங்களுக்கு தமிழீழம் கிடைச்சா தான் பதிவு போடுவன் எண்டவனைப் பாக்க நக்கலா இருக்கு போல..!!!

கைப்புள்ளைக்கு கொழும்பிலிருந்து கட்டைதுரை எழுதியது..

எம்.ரிஷான் ஷெரீப் said...

அண்ணை,
உந்தத் தமிழமணத்துல என்ன நடக்குதுன்னு நீராவது சொல்லுவியளெண்டு பார்த்தா ஏற்கெனவே குழம்பிக் கிடக்கிற என்ர மண்டைய இன்னும் குழப்பிவிட்டுட்டியள்.
சரி சரி...
டமில் ஸூலலுல இதெல்லாம் சகஜம் தானே... :)

ILA(a)இளா said...

//இப்ப தமிழ் மணத்தில் பதிவெழுதும் பல்லாயிரக் கணக்கானவர்களில் சில ஆயிரம் பேர் மொக்கைப் பதிவுக்கு தாவியிருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது//
சோமி, சைக்கிள் கேப்புல ஒரு பெரிய உண்மைய போட்டு உடைச்சிட்டீங்களே.. :)

சோமி said...

//சோமி, சைக்கிள் கேப்புல ஒரு பெரிய உண்மைய போட்டு உடைச்சிட்டீங்களே//

;)...

Anonymous said...

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்