Wednesday, July 30, 2008

சினிமாக்களுக்கு நடுவில் எனது ஆவணப்படம் குறித்த பதிவு..

கடந்த மாதம் ஒன்றாம் தேதி மாலை ரஷ்யன் கலாச்சார மையத்தில் எரியும் நினைவுகள் என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. ஐம்பது நிமிடங்கள் படம் ஓடி முடிந்தபோது, அரங்கில் இறுக்கமான அமைதி. படம் உருவாக்கிய கொந்தளிப்பு பலரின் விழியோரம் கண்ணீர் துளியாக வெளிப்பட்டிருந்தது. என்னை அழவைத்துவிட்டது என்றார் உணர்ச்சிப் பெருக்கை கட்டுப்படுத்த முடியாத இயக்குனர் பாலுமகேந்திரா.

அனைவரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்த அந்த ஆவணப்படம் 1981 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி சிங்கள பேரினவாத அரசால் முற்றிலும் எரிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பொது நூலகத்தைப் பற்றியது. அதனை எடுத்த சோமிதர‌ன் யாழ்ப்பாண தமிழர். போரை அனுபவித்த தலைமுறை என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் சோமிதர‌னிடம் ஆவணப்படம் குறித்து உரையாடினோம். முதலில் அவரைப் பற்றி...


'வெப்டூனியா' என்ற இணையத் தளத்தில் முற்று முழுதான தமிழ் சினிமா ஆக்கிரமிப்புக்குள் ஒரு ஆவணப் படம் பற்றிப் பதிவு செய்திருப்பது ஆச்சரியமானது. எனது ஆவணப்படம் குறித்த பதிவும் எனது நேர்காணலும் பிரசுரிக்கப் பட்டுள்ளது. சில தவறுகளும் எழுத்துப் பிழைகளும் உள்ளன. முழுமையான பேட்டிக்கு கீழ் இணையத்தளத்தைப் பார்க்கவும்.
http://www.tamil.webdunia.com/entertainment/film/interview/0807/21/1080721033_1.htmhttp://

10 comments:

Unknown said...

"எரியும் நிணைவுகள்" எங்கு, எப்படி கிடைக்கும்...

Unknown said...

எங்க ஊர்''கனவுக் கன்னி"க்கு பிறந்த நாள் வாழ்த்த வாங்க!!

Unknown said...

அருமையான ஓர் முயர்ச்சிக்கு என் வாழ்த்துக்கள். "எரியும் நிணைவுகள்" எங்கு எப்படி கிடைக்கும்...

Nimal said...

வாழ்த்துகள் சோமி...!
இந்த குறும்படம் தற்போது இலங்கையில் உள்ளவர்களுக்கு வந்தடையும் சாத்தியப்பாடுகள் உள்ளதா?

உண்மைத்தமிழன் said...

தம்பி சோமி..

நிகழ்ச்சிக்கு நானும் வந்திருந்தேன். ஞாபகமிருக்கும் என நினைக்கிறேன்..

அப்போதே இது குறித்து பதிவெழுத வேண்டும் என நினைத்தேன். ஆனால் முடியவில்லை. மன்னிக்கவும்.. மன்னிக்கவும்.

உன்னுடைய சீரிய முயற்சியின் பலன்தான் அன்றைக்கு மூத்தோர்களிடமிருந்து கிடைத்த பாராட்டு..

வயதில் சிறியவனாக இருந்தாலும் நீ செய்தது பெரும் கீர்த்தியுடையது.

பிறந்த மண்ணின் பெருமையை அம்மண்ணுக்காரர்களால்தான் சிறப்பாக செய்ய முடியும். அந்த வகையில் அற்புதமான ஒரு வரலாற்று ஆவணத்தை மிக அழகாக செதுக்கியிருந்தாய்..

உங்களுடைய சோகங்கள் அளவிட முடியாதவை.. எழுத்தால் வடிக்க முடியாதவை..

ஒரு இனத்தை, கலாச்சாரத்தை அழிப்பதற்கு அதனுடைய இலக்கியங்களையும், புத்தகங்களையும், ஆதாரங்களையும் அழித்தாலே போதுமென்றுதான் அந்தக் கயவர்கள் இந்தக் கொடுமையை செய்திருக்கிறார்கள்.

செய்தவர்கள் தண்டனையை அனுபவித்துவிட்டாலும், அப்பாவி மக்கள் இன்றுவரையிலும் படுகின்ற துயரங்கள் மனத்தில் வலியை ஏற்படுத்துகிறது.

உங்களுடைய கண்ணீரும் விரைவில் கரைய வேண்டும் என்று என் அப்பன் முருகனே வேண்டிக் கொள்கிறேன்.

உனது கலைப்பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.

Venkatesh said...

இணையத்தில் பார்க்க கிடைத்தால் சுட்டி கொடுக்கவும்.

மிகவும் ஆர்வமாக உள்ளோன்.

வெங்கடேஷ்

சோமி said...

அனைவருக்கும் நன்றி. "எரியும் நினைவுகள்" ஆவணப் படத்தின் சகல தொடர்புகளுக்கும் ,எங்கு படம் கிடைக்கும் என்ற விபரங்களுக்குமென ஒரு இணையத் தளத்தை உருவாக்கி வைத்துள்ளோம். படத்தின் ஒரு சின்னப் பகுதியும் உங்கள் பார்வைக்கு உள்ளது.எப்போது எங்கெங்கே திரையிடப்படுகிறது என்ற விபரங்கள் புகைப்படங்கள் எனபவையும் உள்ளன. பார்த்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள்.

www.burningmemories.org

Anonymous said...

வெப்துனியா கட்டுரை படித்தேன். அழகாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் எழுத்தாளுமை பாராட்டத்தக்கது. தொடர்ந்தும் இவ்வாறான கட்டுரைகள் பேட்டிகளை எழுதவும்

சோமி said...

அண்ணன் முருகேசர் அவர்களே அது நான் எழுதியது அல்ல.... அவர்கள் என்னுடன் நேர்கண்டு எழுதியது. அதில சில தவறுகள் உண்டு. நோர்த் ஈஸ்டன் ஹெரல்ட்க்கு பதில் வெஸ்ட் ஈஸ்டன் ஹெரல்ட் எண்டு போட்டிருகிறார்கள். 1978 என்பது 1988 என்றாகியுள்ளது..

Anonymous said...

அது நான் எழுதியது அல்ல.... அவர்கள் என்னுடன் நேர்கண்டு எழுதியது.//

ஓ அப்படியானால் உங்களைக் கேட்டும் பேட்டிகள் எழுதுகிறார்களா..