கவிஞர் கனிமொழியின் அரசியல் பிரவேசம் அதிசயமானதொன்றல்ல.இந்திய அரசியலில் இது புதுமையும் இல்லை.இதைப் பற்றி ஊடகங்களில் நிகழும் விமர்சனங்கள்தான் புதுமையானது.
அப்பா குறித்த கனிமொழியின் கவிதை ஒன்றை 'அகத்திணை' என்ற அவரின் கவிதைத் தொகுப்பில் இருந்து தருகிறேன் வாசியுங்கள்.
அப்பா
சின்ன வயதில்
செய்த தவறுகளுக்கெல்லாம்
பூச்சாண்டியாய் உன்
பெயரைத்தான் சொன்னாள்
அம்மா
காலையில் கணக்குப் பாடம்
குழம்பியபோது
பத்திரிகையில் புதைந்த
உன் தியானத்தை எப்பிடிக்
கலைப்பது?
விடுமுறை நாள்களில்
சினிமாவுக்குப் போக
அம்மாவைத் தூதுவிடுவதே
ஆபத்தற்றதாய் இருந்தது
வாரம் ஒருமுறை
பின் சீட்டில் வைத்து
தேக்காவுக்கு அழைத்துச் சென்றது
உன் கால் செருப்பு
ஓசையில்
வீடு அமைதியானது
அப்பாவுக்குப் பிடிக்கவில்லை
என்று குட்டை ஸ்கர்ட்டை
அம்மா எதிர்த்தது
இதுதான் நீ என்று
பதிந்துபோய்விட்டது
பெருமாள் கோயிலில்
யாரோ ஒருவன்
கையில் பிடித்துக்கொடுத்தபோது
நடுங்கிய உன் கைகளில்
தெரிந்த நேசத்தை ஏன் ஒளித்துவைத்தாய்
இத்தனை காலமாய்?
-கனிமொழி
மன்னராட்சியில் ஒருவர் மன்னராக முடிசூடிக்கொண்டால் அவரது சந்ததியில் வாரிசு இல்லாத ஒரு நிலை உருவாகும் போது மட்டுமே வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கும்.. இல்லை வாரிசு சிறுவனாக இருந்தால் அந்த வாரிசு வளரும் வரை இன்னுமொருவர் ஆட்சியில் இருந்து நாட்டைப் பாதுகாத்து அந்த வாரிசிடம் ஒப்படைக்க வேணும்.
மேற்கூறிய இந்த மன்னர் முறைமைக்கு சற்றும் குறைவில்லாத அதிகார பரிமாற்றமே இந்திய அரசியலிலும் உள்ளது.இந்த அரசியலில் உருவெடுக்கும் பலவாரிசுகளோடு ஒப்பிடுகையில் கனிமொழி விசயமறிந்த பெண் என்றே தோன்றுகிறது.
Sunday, May 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
தக்கவைக்கும் பின்னூட்டம்.
நன்றி
உங்கள் கருத்துத்தான் எனக்கும். கனிமொழி ஒரு கவிஞராகவும் இருப்பதால் அரசியல் சித்து விளையாட்டுக்களை அவர் ஆடமாட்டார் என நம்பலாம். 'கவிஞர்களெல்லாம் உத்தமர்களோ' என்று யாராவது கேள்வி எழுப்பினால்....? ஐயா! ஆளை விடுங்கள்.
/'கவிஞர்களெல்லாம் உத்தமர்களோ' என்று யாராவது கேள்வி எழுப்பினால்....? ஐயா! ஆளை விடுங்கள்?/
பாவம் விட்டுருங்க.....சும்மா உத்தமர் எண்டு அது இது எண்டு...அதுசரி உத்தமர் எண்டுறது பொதுப்பாலோ.?
யார் யார் எப்படி மாறுவார்களென யாருக்கும் தெரியாது, யாரும் அதை முடிவாகச் சொலல்லவும் ஏலாது.ஏனெனில் மனமொரு குரங்கு. அங்கையும் இங்கையுமென அவாப்பட்டுத் தாவிக் கொண்டேயிருக்கும். சாட்சாத் உங்களைப் போல
தக்கவைக்கும் பின்னூட்டம்
..ம்..கனிமொழி கவிஞராகவே தொடர்ந்தால் நல்லாத்தான் இருக்கும்.
அடிக்கடி தக்கவைக்கும் பின்னூட்டம் போட்டால் இறுதியில் சக்கை வைக்க வேண்டியேற்படும். உண்மைகளை கக்க வைக்க வேண்டாம்.
இவ்வண்ணம்
சொக்க வைக்கும் சுந்தரம்
கவிதைக்கு நன்றி... தக்கவைக்கும் பின்னூட்டங்களுக்கு :(
Post a Comment