Saturday, May 19, 2007

நகுலன்...காலமானார்.

17.05.2007 அன்று மிக அமைதியான வாழ்வியலின் ஒரு நாடகக்காரனாக வாழ்ந்த நகுலன் என்கிற எழுத்து ஆழுமை நிரந்தர அமைதிக்குப் போய்விட்டது. இன்று(19.05.2007) அவரின் இறுதி நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன.
இருபதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல் போகிறோம்.

-நகுலன்.


நவீன தமிழ் இலக்கியத்தின் அற்புதமான படைப்பளி.அவர் எப்போதும் எந்த குழுக்களுக்குள்ளும் சிக்கிகொள்ளாத ஒரு நீடித்த தனிமையில் இருந்தார்.இறக்கும் போது அந்த தனிமை அவரை யாரும் நெருங்க முடியாத துரத்திற்க்கு கொண்டு போனது.

நகுலன் என்கிற டி.கே.துரைசாமி பிரந்தது தமிழ் நாட்டில் உள்ள கும்பகோணத்தில் ஆனாலும் வளர்ந்தது இறுதிவரை வாழ்ந்தது எல்லாமே கேரளத்தின் திருவானந்தபுரத்தில்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் முதுகலையும் ஆராச்சிப் பட்டமும் பெற்றவர்.திருவானந்த புரம் இவானியர் கல்லூரியில் ஆங்கிலப் பேரசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

நாவலாசிரியர் ,சிறுகதை எழுத்தாளர்.கவிஞர்,விமர்சகர்,ஆராச்சியாளர் என்கிற பல பரிணாமங்களைக் கொண்டாலும் எந்த இத்தியாதிக் இலக்கியக் குழுகளிலும் சிக்காதவர் நகுலன்.

காமம், மரபு,பிரம்மச்சர்யம்,காமம்,தனிமை,தர்க்கம் என் நீளும் நகுலனின் எழுதுலகம் அலாதியானது. ஏழ்மையும் ,தனிமையும் அவருடன் எப்போதும் கூட இருந்தன.

நகுலன் கவிதைகளை மீண்டுமொருமுறை படித படியே அவர் எழுதாலேயே அவரை அஞ்சலிப்போம்.தன் மரணம் குறித்து அவர் நீறையவே எழுதியிருகிறார்.அதை நோக்கி அவர் காத்திருந்தார்.
" ராத்திரியில்
ஒவ்வொரு நட்சத்திரமும்
என்னை பிரசவிக்கிறது"

-நகுலன்"one said:
The cat has its claws
The rat has its teeth
Even the bird has its beak
What have you?
The other said:
Flash wedded to the mind
Subject to the school of suffering and
survival"

-Nakulan

( நண்பர் காஞ்சனை சீனிவாசன் அவர்களின் நகுலன் குறித்த புகைப் பட ஆவணத்தில் இருந்து எடுக்கப் பட்ட படங்கள் இவை. நகுலனின் மறைவுக்கு சில மாதங்கள் முன்னர் இந்தப் வண்ணப்படங்கள் எடுக்கப் பட்டன.கறுப்பு வெள்ளைப் படம் சில வருடங்கள் முன்னர் எடுக்கப் பட்டது)

6 comments:

மஞ்சூர் ராசா said...

கவிஞர் நகுலனுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் நல்லதொரு கட்டுரையை இட்டிருக்கிறீர்கள்.

நன்றி.

இதை மீள்பதிவாக முத்தமிழ் குழுமத்திலும் பொடுகிறேன். நன்றி.
http://groups.google.com/group/muththamiz

Kanags said...

நகுலன் அவர்களின் மறைவு குறித்து அறியத் தந்தமைக்கு நன்றிகள். அன்னாருக்கு எனது அஞ்சலிகள்.

அவரை பற்றிய சில விபரங்கள் விக்கிபீடியாவில் உள்ளன.

சோமி said...

மஞ்சுர் ராசா,
தாராளமாக இதனை மீள்பதிவிடுங்கள்.

அமைதியாக வாழ்ந்து மறைந்த அந்த எழுத்தாளனின் எழுத்தை அறிமுகம் செய்வதே அவருக்குச் செய்யும் சரியானா அஞ்சலியாக இருக்கும்.

வரவனையான் said...

நகுலனுக்கு என் இறுதி வணக்கங்கள்

மலைநாடான் said...

சோமி!

புலம்பெயர்ந்ததன் பின்னான எனது வாசிப்பு விசாலம் மிகக்குறுகியது. அதனால். நகுலன் பற்றிப் பெரிதாக அறிந்திருக்கவில்லை. இப்பதிவின் மூலமே அறிய முடிந்தது. முடியுமாயின் மேலும் விரிவாக அறியத்தாருங்களேன்.

Socrates said...

//அவர் எப்போதும் எந்த குழுக்களுக்குள்ளும் சிக்கிகொள்ளாத

எந்த இத்தியாதிக் இலக்கியக் குழுகளிலும் சிக்காதவர் நகுலன்.//

உலகம் இரு வேறு உலகமாய் தெளிவாய் பிரிந்து கிடக்கிறது.

இதில், நகுலன் எந்த குழுக்களிலும் சிக்காதவர் என பெருமையாய் சொன்னால், அவரை பற்றி என்ன முடிவுக்கு வ்ருவது?

உங்களை எப்படி புரிந்துகொள்வது?