Tuesday, May 22, 2007

எரிக்கப் பட்ட -யாழ்ப்பாண நூலகம் பற்றிய வீடியோ ஆவணப்படம்

மே 31 நள்ளிரவில் நூலகத்தில் வைக்கப்பட்ட தீ 26 வருடங்கள் தண்டி இன்றுவரையும் எரிந்துகொண்டே இருகிறது.நான் பிறந்து 18 நாட்களில்
எரியூட்டப்பட்ட அந்த நூலகம் குறித்த ஆவணப் படத்தினை எடுக்க வேண்டும் என்ற எனது கனவுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக செயல் வடிவம் கொடுத்து வருகிறேன்.

2005 இல் நூலகம் தொடர்பான ஆவணப் படம் ஒன்றினை எடுக்க வேண்டுமென பலரிடம் சொன்னேன்.2006 இல் நூலகம் எரிகப்பட்டு 25 ஆண்டுகள். 97,000 புத்தகங்களும் அரிய ஓலைச் சுவடிகளும் சிங்கள இனவாதத் தீயில் எரிந்து சாம்பலாகின.இது தமிழர் கலச்சாரத்தின் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலை.

இந்த படுகொலையின் வரலாற்றை பதிவு செய்வது அவசியமாகிறது.நூலகம் ஒன்றின் அவசியம் யாழ்பாணச் சூழலில் உணரப்பட்டு 1930களில் அது உருவாக்கம் பெறறது முதல் இன்றுவரையான நூலகத்தின் வராலறும் தமிழரின் வழ்வியலும் அரசியலும் இந்த ஆவணப்படத்தில் உள்ளடக்கப்படுகிறது.

இது ஒரு தனிமனித முயற்சியாக தொடங்கினாலும் இதற்கான அனைவரின் பங்களிப்பும் இருந்தால் மட்டுமே இந்த ஆவணப் படத்தை முழுமையானதாக உருவாக்க முடியும்.யாருடைய உதவியுமற்று தொடங்கிய இந்த முயற்சிக்கு சரிநிகர் சிவகுமார் என்னுடன் இணைந்திருந்தார்.இன்னும் இணைந்திருக்கிறார்.பத்மநாப அய்யர்,துவாரகன் ஈழநாதன்.கனேடிய நண்பர்கள் சிலர் என்னை ஊக்கப்படுத்தினர்.

நூலகம் பற்றிய பல சேதிகளும் தகவல்களும் படங்களும் இன்னும் பலரிடம் இருக்கலாம்.அது உங்களிடமும் இருக்கலாம்.அவையெல்லாம் இணைத்ததாகவே இந்த ஆவணப் படம் இருக்க வேண்டும் அதற்க்கு அனைவரினதும் ஒத்துழைப்புத் தேவை. கடந்த வருடத்தில் மீண்டும் சண்டை சூழ்ந்த சூழலில் மிகுந்த சிரமம் எடுத்து இந்த படத்தை எடுத்தேன்.பண நெருக்கடியும் தகவல்களைத் தேடுவதில் உள்ள நெருக்கடியும் இருக்கும் சூழலில் இந்த முயற்சியை மேற்கொள்ளுகிறேன் இதற்க்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.

இன்னும் 20 தினங்களில் இந்த ஆவணப்படத்தினை உங்கல் பார்வைக்கு வழங்க முடியும் என் எண்ணுகிறேன்.உங்களிடம் தகவல்கள் படங்கல் இருப்பின் என்னுடன் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்.

"எரியும் நினைவுகள்" ( 55 நிமிட வீடியோ ஆவணப் படம்)

யாழ் நூலக ஆவணப் படத்தினை முப் பரிமாணத்தில் நாம் எமது படத்தில் பார்க்கின்றோம்.மூன்று முக்கிய மையப் பொருட்களுக்கு அமைவாகவே 55 நிமிட நேரப் படம் நகர்ந்து செல்கிறது.பண்பாடு ,அரசியல்,சமூகவியல் ஆகிய மூன்று பிரதான அம்சங்களின் பின்னணியில் நூலகம் பார்க்கப் படவுள்ளது.

யாழ்ப்பாணத்தின் வரலாறும் நூலகத்தின் கலாச்சார முக்கியத்துவமும்.:
யாழ்ப்பாண நூலகம் தமிழரின் தேசிய காலாச்சார மையமாக மாறியமை,யாழ் நூலகத்தின் உருவாக்கம். திரவிட தனித்துவம் இருக்கவேண்டும் என்பதும் நூலகம் ஒரு அடையாளத்துகுரியதாக இருக்க வேண்டும் மென்ற ஆசையும் நூலக உருவாக்கமும். நூலகம் ஒரு பண்பாட்டு வடிவமாகவும் சமய கலச்சார மையமாகவும் யாழ்ப்பாணத்தாரிடம் உருவெடுத்தமை உதாரணமாக சரஸ்வதி பூசை ஒரு கலச்சார விழாவாக நூலகத்தில் கொண்டாடப் பட்டமை தங்கள் பிள்ளைகள் பரிட்சையில் சித்தியானால் நூலகத்தினுள் பொங்கல் வைத்தல் போன்றவற்ரை கொள்ள முடியும்.இன்றுவரையும் யாழ்பாண நூலகம் ஒரு காலாச்சார அடையாளமாக பார்க்கபடுகின்ற நிலை.யாழ்ப்பாண கலாச்சாரத்தினையும் நூலகத்தினையும் இணைத்து எமது படத்தில் பார்க்க இருக்கின்றோம் .

அரசியலில் நூலகம் :
நூலகம் மூன்று அரசியல் நிலைகளில் இருந்துள்ளது. முதலாவதாக 1960 தில் நூலகத் திறப்பு அல்பிரட் துரையப்பா அவர்கள் யாழ் மாநகர சபைத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்தது(1959 இல் நூலகம் திறக்கப் பட்டது 61 இல் அல்பிரட் துரையப்பா யாழ் மேயராகின்றார்)
இதன் பின்னர் த்மிழரின் தேசியச் சின்னமாகௌருவெடுத்த நூலகம் 1981 இல் சிறீலங்கா அரச ஆதரவோடு எரிக்கப் படுகிறது .இதன் பின்னர் இலங்கையின் தேசிய அரசியல் அரங்கிலும் இனமுரண்பாட்டிலும் அது பிரதான பாத்திரமாக மாறுகிறது. இப்போது வரையும் தேசிய அரசியலில் அது பிரதான பங்கு வகிப்பதாகவே உள்ளது
இரண்டு பிரதான தேசியக்கட்சிகளின் அரசியலிலும் அதேநேரம் போராட்ட அரசியலிலும் நூலகம் முக்கிய பாத்திரமாகிறது.
மூன்றாவதாக அது சர்வதேச அரசியல் அந்தஸ்து பெற்ற ஒன்றாகவும் உள்ளது.இன்று சர்வதேச சமூகத்தின் பார்வைகுட்பட்டதாக அது உள்ளது.

சமூகவியல் நோக்கில் நூலகம் :
யாழ்ப்பாணச் சமூகத்தின் கல்வி முக்கியத்துவம் காரணமாக கல்வியோடு தொடர்புடைய நூலகம் மக்கள் மத்தியில் முகியத்துவம் மிகுந்ததாகவுள்ளது.யாழ்ப்பாணச்சமூகக் கட்டமைபில் சிறப்பியல்புகளில் ஒன்று சனசமூக நிலயங்கள்.ஒவோரு ஊரிலும் இருகின்ற சனசமூக நிலயங்களுக்கெல்லம் மையப் புள்ளியாக யாழ்நூலகம் உருமாறுகிறது.சனசமூக நிலயங்களுக்கும் மக்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பிருந்தது.மக்கள் ஒன்றுகூடி கருத்துக்களை பரிமாறுவதற்கான தளமாக அது இருந்தது.பின்னாளில் போராளிகளுக்கான தொடர்பு மையமகவும் மாறியது இந்தப் பின்னணியில் நேரடியாக யாழ் நூலகத்தோடு தொடர்பு பட்டிருக்காத பலரும் சமூகப் பாரம்பரியத்தின் ஊடாக தொடர்பு பெற்றிருந்தனர்.

ஆக,
அழகான கட்டடமாகவும் மிக நெருக்கமான தொடர்பு பட்டதாகவும் துருத்திகொண்டு தெரியும் யாழ் நூலகம் தமிழரை பழி தீர்பதற்கு சரியா தெரிவாக இருந்திருகிறது.இதனப் போலவே எவ்வாறு தமிழரைப் பழிதீர்பதற்கு இந்த நூலகம் பயன் படுத்தப்பட்டதோ அதே போல் தமிழரை தன்வசப் படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டது. இதனை மையப் படுத்திய தமிழரின் உளவியல் சமூகவியல் யதர்த்தமும் அதேபோல் அரச உளவியலும் இந்த படத்தில் ஆரயப் படுகிறன.

கடந்த 25 வருடகால இனப்படுகொலைப் போரியலில் நூலகம் பங்களித்து நிற்கிறது.போராளிகளின் வாசிப்புக்கும் பின்னர் கோட்டைக்கெதிரான சண்டையில் போராளிகளின் அரணாகவும் நூலகம் பயன்பெற்றிருக்கிறது.

தொடர்புக்கு: someeth13@gmail.com

25 comments:

மாசிலா said...

நல்ல முயற்சி அன்பரே. உங்கள் திட்டம் வெற்றிபெற மனதாற வாழ்த்துகிறேன். வரும் சந்ததியினருக்கு இதன் வாயிலாவது மண்ணின் கலாச்சாரத்தின் முன்னோர்களின் பெருமையை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புவோம்.

சீரிய சேவை.

தமிழ்பித்தன் said...

நல்ல முயற்சி சோமி வாழ்த்துக்கள்
எங்களது நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் வலைப்பூவினோடு சரி. அதையும் தாண்டி நீங்கள் செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்

மலைநாடான் said...

சோமி!

மனதுக்கு நிறைவாகவும், நெகிழ்வாகவும் இருக்குமித் தருணத்தில் எழுதும் வரிகள்.

யாழ். நூலகம் எரிவதற்கு முன்னதாக அதனுடனான என் உறவுக்காலம் மிகக்குறைவானதுதான். ஆனாலும் நிறைவான நாட்களவை. அந்த நூலகத்தின் சூழலில் நடந்து திரிந்த எந்தவொரு மனிதனாலும், அதை ஒரு கட்டிடமாக மட்டும் பார்க்க முடியாது. நீங்கள் குறிப்பிட்ட அனைத்துக் காரணங்களினாலும், அது எங்கள் வாழ்தலின் உறவானது. அதற்கு ஒவ்வொருவரும் அவரவர் திறனளவில் உயிரூட்டி உறவாடியுள்ளோம். எரிந்தபின்னும் கூட, இடிந்து சிதிலமான பின்னும் கூட, நோயுற்றுக்கிடக்குமொரு நோயாளியை தொட்டுத்தடவி நேசிப்பதுபோல்தான் உணர்ந்திருக்கின்றோம். அதனால்தான் எரிந்ததென்று அறிந்ததுமே அறிஞர் தனிநாயகம் அடிகளாரின் உயிர்பிரிந்தது. அது நடந்து ஐந்தாறு வருடங்களின் பின்னும், அந்த இடத்தை எட்ட நின்று பார்த்து கண்ணீர் வடித்துச் சென்றவர்களைக் கண்டிருக்கின்றேன்....இதற்குமேல் இப்போது ஒன்றும் எழுத இயலவில்லை. மன்னிக்கவும்..

அது எரிக்கப்பட்ட நாட்களில் பிறந்த ஒருவன், இதைஆவனப்படுத்த விழைகின்றான் எனும்போது ஆறுதலாக, நம்பிக்கையாக, இருக்கிறது.

முடிந்தவரை முயற்சிப்போம்.

மு. மயூரன் said...

மிகச்சிறந்த உழைப்பு சோமி.

படத்தைப் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்.

இந்த உழைப்புக்காக என்னுடைய இதயபூர்வமான பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

theevu said...

யாழ் பல்கலைக்கழக முன்னாள் நூலகர் செல்வராஜா, பற்பல ஆவணங்களிலிருந்து பெறப்பட் டதகவல்களைக்கொண்டு யாழ் நூலகம் பற்றிய ஒரு முழுமையான நூலை வெளியிட்டிருந்தார்.

அது உங்களிடம் இருக்கிறதா?

பல சுவையான தகவல்கள் அதில் இருக்கிறது.

மலைநாடான் said...

சோமி!

முதலில் எழுதிய பின்னூட்டம் கலங்கிய நிலையில் எழுதியதால், தாவீது அடிகளை, தனிநாயகம் அடிகள் என்று குறிப்பிட்டுவிட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.

இளங்கோ-டிசே said...

வாழ்த்து சோமி.
......
இதே உற்சாகத்துடன் இன்னும் பல விடயங்களை ஆவணப்படுத்துங்கள். ஆவணப்படுத்தல்களின் தொடர்ச்சியின்மையால் பலவற்றை முன்வைத்து உரையாடமுடியாது, நாம் இழந்துகொண்டிருப்பது அதிகம்.

Anonymous said...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சோமி...முழு நேரப்படமாகவே ஆக்க அதில் செய்திகள் உண்டென கேள்விப்பட்டேன்...

தமிழரின் கடமையான இந்த பணியை சிறப்பாக செய்து முடிக்க வாழ்த்துக்கள்...

சோமி said...

உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.

இந்த பதிவைப் பார்த்த பிறகு என்னோடு நீங்கள் தனிபட்ட முறையில் பேசியபோது உங்கள் கலக்கமும் வலியும் துன்பமும் எனக்குள் ஒரு வேகத்தை உணர்ச்சியை ஏற்படுத்தியது மலை நாடான். இது உங்களை போன்ற ஆயிரம் ஆயிரம் ஈழத்தமிழர்களின் உணர்ச்சி மலைநாடன்.நான் இந்த ஆவணத்துக்காக நேர்கண்ட பலரும் அழுதார்கள். அந்த வலிகளுக்கு முன்னால் பணம் உள்ளிட்ட சிக்கல்கள் சின்னதுதான்.

டி.சே நீங்கள் சொன்னதுபோல் என்ங்களிடம் எந்த ஆவணமும் இல்லை........தாத்தாவிடம் யானை இருந்தது என்ற பழைய பெருமையை இன்னும் எத்தனை காலத்துக்குப் பேசப் போகிறோம் என்று புரியவில்லை.

சயந்தன் said...

சோமி உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சொல்லி விட்டுப் போவது மட்டுமே எனக்கான எமக்கான கடமையாகாது என நான் தனிப்பட நம்புகிறேன். தவிர தற்போது தனியே பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மட்டுமே உங்களுக்கான தேவையாயிருக்காது என்பதனையும் உணர்ந்து கொள்கிறேன்.

எல்லோராலும் என எதிர்பார்க்க முடியாவிட்டாலும் ஏதோ ஒரு சிலரால் உங்கள் முயற்சிகளில் ஏதோ ஒரு விதத்தில் கை கோர்க்க முடியுமென நம்புகிறேன். அவர்களில் நானும் ஒருவனாயிருப்பேன்.

நாம் விரும்புகின்ற ஒரு விடயத்தில் நமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறில்லைத் தானே..

-/சுடலை மாடன்/- said...

உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நூலக எரிப்பு ஈழத்தமிழர் மட்டுமல்லாமல் தமிழ் நாட்டுத்தமிழர்களிடமும் பாதிப்பு ஏற்படுத்திய நிகழ்ச்சி. சுஜாதா கூட இதைப் பற்றி ஒரு அருமையான சிறுகதை எழுதி நான் படித்த ஞாபகம். சரியாக நினைவிலில்லை - "வேலி" என்ற பெயருடைய சிறுகதையாக இருக்கும் என நினைக்கிறேன்.

நன்றி - சொ.சங்கரபாண்டி

Anonymous said...

நல்ல முயற்சி, உங்கள் முயற்சி வெற்றியடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

theevu said...

//"வேலி" என்ற பெயருடைய சிறுகதையாக இருக்கும் என நினைக்கிறேன்.//

ஒரு இலட்சம் அல்லது 99 ஆயிரம் புத்தகங்கள் என்று தலைப்பு இருந்திருக்கவெண்டும்

சின்னக்குட்டி said...

வாழ்த்துக்கள்.. உங்கள் முயற்சிக்கு எங்களால் இயன்றவரை.. கை கொடுப்போம்...

Anonymous said...

How do you know the library was burn down because of arson. Do you have any evidences to claim the Sinhales as the culprits? What do Sinhalese gain from burning a library? Think before writing..I it badly needed renovation. That's why some decided to finish it up and may have planned to build new one and war may have pervented from doing so.

வி. ஜெ. சந்திரன் said...

சோமி நல்ல முயற்சி. தேவையான முயற்சியும் கூட. என்னால் முடிந்த உதவியை செய்ய முடியும் என நம்புகிறேன்.

மலைநாடான் said...

சோமி!

//சின்னக்குட்டி said...
வாழ்த்துக்கள்.. உங்கள் முயற்சிக்கு எங்களால் இயன்றவரை.. கை கொடுப்போம்...//

உங்களோடு கதைத்தபோது, இம்முயற்சியைத் தொடர்வதில் உங்களுக்குரிய பொருளாதாரச் சிக்கல் தெளிவாகவே புரிந்தது. இது குறித்து நண்பர்கள் சிலருடன் கதைத்த போது, மேலே சின்னக்குட்டி, சயந்தன், ஆகியோர் சொன்னது போல், மேலும் சில நண்பர்கள் உதவுவதாகச் சொல்லியுள்ளார்கள். ஆதலால் மனந்தளராது, தொடங்கிய பணியைத் தொடர்ந்து செல்லுங்கள்.

சோமி said...

நன்றி மலைநாடான்.இதுவரை எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை.கடந்தகால அனுபங்களால் நம்பிக்கை வைப்பது கடினமானது. ஆனால் உங்களின் மிக வேகமான ஒத்துழைப்புக்கும் ஏனைய நண்பர்களின் ஒத்துழைப்புக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி.


ஒருமுறை பிரேமதாசா பாராளுமன்றில் நூலக எரிப்புக்கு சில அமைச்சர்கள் பின்னணியில் இருந்ததை ஒத்துக்கொண்டிருக்கிறார்(அத்துலத் முதலியுடனும் ,காமினி யுடனும் முரண்பட்டபோது)
ஆனால் அதற்கான ஊடக ஆதாரம் எதுவும் என்னிடம் இல்லை.சில இணையத்தளங்களில் குறிபிடப் பட்டுள்ல ஆதாரங்கள் மட்டுமே உள்ளது.
கொழும்பு சுவடிகள் கூடத்தில் தமிழர்களால் எந்த ஆதாரத்தையும் திரட்ட முடியாது. குறிப்பாக நூலக எரிப்பு தமிழ் பத்திரிகைகளின் பழைய சில பதிவுகளை திரட்டுவது கடினமாக வுள்ளது.நான் முயற்சித்து பின்னர் பாதுக்கப்பு காரணமாக அங்கு செல்ல முடியவில்லை

ஆனால், இவை எங்காவது இணையத்தளங்களுள் அல்ல யாரிடமாவது ஒளிந்திருக்கலாம். நூலகத்துடன் தொடர்புபட்ட இத்தகைய ஆதாரங்களை தேடிக் கண்டு பிடித்து தருவது எனக்கு பெரும் உதவியாக இருக்கும். என்னிடம் தகவல்கள் உள்ளன ஆனால் அதற்கான ஆதாரங்கள் திரட்டுவதில் சிரமம் இருகிறது.

பல நண்பர்கள் எனக்கு தனி மடலிட்டு என்ன உதவி வேண்டும் என்று கேட்டர்கள். இந்தவகையில் ஆதரங்களை பலர் வைத்திருகலாம் அவற்றை கண்டு பிடித்து தருவது நீங்கள் செய்யும் பேருதவிஆக இருக்கும். இது ஒரு முழுமையான ஆதாரமாக இருக்க வேண்டும். அதன் இது கூட்டு முயற்சியாய் இருக்க வேண்டும்.

இன்று இலங்கையிருக்கும் சூழலில் அங்கு நான் சென்றிருந்த போதும் ஆதாரம் திரட்டுவதில் சிரமம் இருந்தது. இப்போது சரிநிகர் சிவகுமாரிடம் ஆதாரங்கலை வைத்திருக்கும் சிலரைச் சொல்லியிருக்கிறேன்.

தமிழகத்திலும் சில நண்பர்களுக்கு ஏதும் புதிய சேதிகள் இருக்காலம்.

Kanags said...

சோமி, நல்ல அவசியமான முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

க.சி. குலரத்தினம் அவர்கள் எழுதிய "யாழ்ப்பாண நூல் நிலையம் - ஓர் ஆவணம்" என்ற நூல் "மித்ர" பதிப்பகத்தினரால் 1997 இல் வெளியிடப்பட்டது. இதில் பல தரவுகள் உள்ளன. சென்னையில் கிடைக்கலாம். என்னிடம் ஒரு பிரதி உள்ளது. மின்னஞ்சல் இடுங்கள். முடிந்த உதவிகள் செய்கிறேன்:
kstharan at gmail dot com நன்றி.

Anonymous said...

தங்களின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்.ஒரு இனத்தின் அடையளாங்களின் தொகுப்பான நூல்களை எரித்தது மிகவும் கொடுரமான ஒன்றாகும்.அது பற்றிய ஆவணப்படம் வரும் தலைமுறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும். படத்தை பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன்.

மாயா said...

இன்றையநாட்களின் நூலகம் பற்றி அறிவேன் ஆதலால் அன்றைய நாட்களை அறிய ஆவலாய் உள்ளேன்.

மிக்க நன்றி தோழரே . . .

Anonymous said...

nalla mujatsi anna, neenkal pirantha 18 naalila nadantha koduta sampavaththa patti aatajira unkada naaddup pattu, molip pattai ninaikka petumaja etukku...
unkal thiddam vetti pera vaalththum...
krishna

சோமி said...

தக்கவைக்கும் பின்னூட்டம்

மு. மயூரன் said...

சோமி,

இந்த பதிவு தொடர்ச்சியான கவனத்தைப் பெற வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடே.

மிக முக்கியமனா பணி.

முன்னர் தமிழ்மணம் நிர்வாகத்திடம் அனுமதிபெற்று தொடர்ச்சியாக முகப்பில் தெரியும் வண்ணம் அவசியமான பதிவுகளைக் காண்பிக்கும் வழக்கம் ஒன்று இருந்ததாக நினைவு.


நீங்களும் அந்த வழியில் முயன்று பார்க்கலாம்.

எனது வலைபப்திவில் இந்த பதிவை கவனப்படுத்தியுள்ளேன்.

இதனை இந்தப்பணியை முக்கியமாகக்கருதும் நண்பர்கள் உங்கள் பதிவுகளிலும் செய்யலாம்.

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

அன்புத் தோழர் சோமிக்கு, வணக்கம்.

தங்கள் முயற்சி பாராட்டிற்குரியது. என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.

குறும்படம் எடுப்பதோடு நில்லாமல் அதை மக்களிடம் கொண்டு செல்ல உரிய முயற்சி செய்யுங்கள். இதற்கு என் போன்றோரின் ஒத்துழைப்பு உண்டு.

எரிக்கப்பட்டது யாழ் நூலகம் மட்டுமல்ல. ஈழத் தமிழர்களின் உயிர்.

நன்றி!