(அசுரன்,வரவையான் உள்ளிட்டவர்களின் மாமாப் பதிவுகளுக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை)
தமிழ்மணத்தில் இப்ப ஆளாளுக்கு தங்களுக்கு பிடிகாதவர்களை மாமா என்று அன்பின்பால் அழைக்கும் நிலையில் நானும் மாமா ஆகியிருகிறன்.உண்மையில் மாம என்ற அந்த இரண்டு எழுத்துக்களுக்குதான் எத்தினை மதிப்பு.
எங்கட வீட்டில நிறைய மாமாக்கள்.அவர்களில் மூத்த மாம எண்டு ஒருத்தர் இருப்பார்.அவரில் எல்லருக்கும் நல்ல மதிபிருக்குமுங்க.ஆனாலும் என்ர தாத்தாவுக்குதான் பெரிய மதிப்பு தாடிவைத்து கையில் தடியோடு சாய்வு நாற்காலியில் இருக்கும் தாத்தா தனது பிள்ளைகளில் கண்டிப்பானவர்.பிள்ளைகளைக் கட்டுப்பாடக வளர்த்தார்.ஆனால் அவர் நல்ல மாமாவாக இருந்தார் எண்டு அம்மா சொன்னா.தாத்தாவின் இரண்டு தங்கைளின் பத்துப் பிள்ளைகளுக்கும் அவர்தான் மாமா.
மாமாவான தாத்தா தனது தங்கைகளின் பிள்ளைகளுக்கு தனது வீட்டில் இருந்தே தேவையானவற்றையெல்லாம் கொடுத்தார்.தாத்தாவின் பிள்ளைகளைவிட தாத்தவின் மருமக்கள் அதிக அதிகாரம் செலுத்துபவர்களாக இருந்தனர்.
என்ர மூத்த மாமா பற்றி சொன்னன்.அவர் செரியான கண்டிப்பு.எங்களிலயும் கண்டிப்பாக இருப்பார்.ஆனால் அவரின் பிள்ளைகளுக்கு நல்ல செலவு செய்வார்.அவர் ஒரு பழைய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். இப்ப தன்ர மூத்த பிள்ளையை லண்டனிலும் ரெண்டாவதை அமெரிக்காவிலும் செட்டில் பண்ணிவிட்டு பிரான்ஸில் இருகிறார்.அங்கதான் 20 வருசம் இருகிறார்.கமியூனிசம் கலியாணம் முடிக்கும் வரைதான் அதுக்குபிறகு பொறுப்புக்கள் வரும்போது அது சரிவராது என்பார்.நான் அமெரிக்காவை எதிர்க்கோணுமெண்டால் கலியாணம் முடி இந்த வருத்தம் சரிவரும் என்பார்.
மூத்தமாமாதான் எனக்கு தமிழ் உணர்வு பெரியாரியம் எல்லாம் சொன்னவர். நான் இங்கிலிஸ் வகுப்புக்கு கட் அடிச்சுப் போட்டு தமிழ் தமிழெண்டு திரியேக்க அவர்ட பிள்ளளயள் லண்டன் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தார்கள். "தம்பி தமிழ் உனக்குச் சோறு போடாது பேசம இங்கிலிஸில டெவலோப் பண்ணிட்டு அமெரிக்கா போக முடிந்தால் போ" என்கிர அவரின் அலோசனைக்கு இப்போது எங்கள் எல்லா மாமாக்களிடமும் நல்ல மதிப்பிருக்கு.குடும்பச் சண்டைகளில் மூத்த மாமாவோடு மல்லுக்கு நிக்கும் மற்ற மாமாக்கள் இந்த மாதிரி விசயத்தில் அவரி எதிர்ப்பதில்லை
எனர மற்ற மாமாக்களும் தமிழ் தேசியத்துக்குள் வளந்தவர்கள்தான்.மூத்தமாவைப்போல் கம்யூனிசத்துக்குள் இருந்து வராமல் நேரடியாக தமிழ்தேசியத்துக்குள் வந்தவர்கள். திராவிட இயக்க செல்வாக்கு அவர்களிடம் இப்போதும் இருக்கிறது.
ம்...இதில தமிழ்நாட்டிற்க்கு வந்த பிறகு கூடப் படிகிறவனில் இருந்து கூட்டிக்குடுகிறவன் வரைக்கும் பொலிஸ் மாமாக்கள் ஈறாக பல மாமாக்காளைத்தெரியும்.
இதை எழுத என்ன காரணமுன்னா என்னோட ஒண்ணுவிட்ட அக்கா ஒருத்திக்கு பொண்ணு பிறந்திருக்குது அதனால நான் இப்பா மாமாவாகிட்டனுங்கோ..
சரி, அசுரன் உள்ளிட்டவர்கள் எப்படி மாமாக்களை தீர்மானம் செய்கிறார்கள் எனபதி எனக்கும் சொன்னா நானும் இனி அவங்கள மாதிரிப் பதிவு போடுறன்
Tuesday, June 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
இது ஒரு மொக்கைப்பதிவு என்பதை இத்தால் பின்னுட்டவருபவர்கள் அனைவரும் கருத்தில் எடுக்கவும்
சொதி (புகழ்) சோமி இப்ப 'மாமா சோமி' ஆகிட்டாரா?
ஆண்டவனே அம்மணமா நிக்குதாம் ! பூசாரி பட்டுக்கோமணம் கேட்டாராம்.
இதெல்லாம் ஓவரா தெரியல்ல
எழுதியவர் சோமி என்று இருக்கிறது, இதுக்கு அப்புறம் என்ன தனியா மொக்கைன்னு குறிப்பு வேற
// மாமா ஆகிவிட்டேன்.. இப்ப மாமாதான் ஸ்பெஸலுங்கோ?!//
சொற்குற்றம் உள்ளதாக புகார் வந்ததால் இப்பக்கம் ரோந்து வந்தோம்!
ஸ்பெஸல் என்பது ஸ்பெஷல் என்றோ அல்லது ஸ்பெசல் என்றோ தூய தமிழில் இல்லாமல் முற்றிலும் வட இந்திய மொழியில் எழுதியதை தமாசா கலாய்க்கிறோம்
//இது ஒரு மொக்கைப்பதிவு என்பதை இத்தால் பின்னுட்டவருபவர்கள் அனைவரும் கருத்தில் எடுக்கவும்//
இதனை தனியாக வேறு சொல்லனுமாக்கும்?!!!
அதுசரி மாமா க்களை எப்பிடி அடையாளம் கண்டு கொள்ளுவது என்று யாராவது விளக்கம் சொல்லுங்கப்பா......
என்னகொடுமையிது வீரமணி மாமா வானல் சண்டைபிடிகிறாங்க நான் மாமாவகிட்டன் அதைப் பற்றி பெசுவாரேயில்ல...ம்....இதுக்குதான் அரசியல் அரங்குக்கு வரோணுமெண்டுறது......
வாழ்த்துக்கள்:)
//வரவனையான் said...
எழுதியவர் சோமி என்று இருக்கிறது, இதுக்கு அப்புறம் என்ன தனியா மொக்கைன்னு குறிப்பு வேற//
ஹிஹஹஹஹஹிஹிஹஹஹி
//எழுதியவர் சோமி என்று இருக்கிறது, இதுக்கு அப்புறம் என்ன தனியா மொக்கைன்னு குறிப்பு வேற//
Ithai Naan Vazhi Mozhigiren!
Post a Comment