Wednesday, May 30, 2007

ஒரு படுகொலையின் நினைவு-யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 26 வருடங்கள்

புத்தரின் படுகொலை


நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.

இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?'
என்று சினந்தனர்.

'இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால்......
என்றனர் அவர்கள்.

'சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை'
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.

சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
*சிகாலோவாத சூத்திரத்தினைக்
கொழுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது
*தம்ம பதமும்தான் சாம்பரானது.

-கவிஞர் எம்.ஏ.நுஃமான்


ப்பத்தியாறு வருடங்களுக்கு முன்னர் இதே சூன் முதலாம் திகதி காலைப் பொழுது, நன்றாகப் பேசிக்கொண்டிருந்த பாதிரியார் தவீது அடிகள் அவரைத்தேடி வந்த ஒரு சேதி கேட்டு மாரடைப்பால் மரணமடைகிறார்.அவருக்கு கிடைத்த அதே செய்தியை
யாழ்ப்பாணத்தில் கேள்விப்பட்ட ஒவ்வொருவரும் ஒப்பாரி வைத்தபடியே யாழ்ப்பாணத்தின் மையப் பகுதி நோக்கி ஓடுகிறார்கள்.ஒரு பெருங் கூட்டம் அந்த இடத்தில் கூடிவிட்டது.அந்த இடம் முழுவதும் அழுகையும் ஒப்பாரியும் நிறைந்திருந்தது. எரிந்து கொண்டிருக்கும் தணல் மேட்டில் இருந்து புகை கிளம்பிக்கொண்டிருந்தது.அத்தனை பேர்களின் கண்ணீராலும் அந்த தீயை அணைக்க முடியவில்லை.ஈழத்தமிழர்களின் தேசிய நூலகமான யாழ் நூலகத்தில் இருந்த 97,000 புத்தகங்களும் ஓலைச்சுவடிகளும் ,ஒலி ஒளி நாடக்களும் எரிந்து சம்பலாகிக் கொண்டிருந்தன.

யாழ்ப்பணத்தைப் பொறுத்தவரையில் முதல் நூலகம் 1842 இல் ஆரம்பிக்கப்பட்டதாக தகவல் உள்ளது. ஆனலும் அது பெரு வளர்ச்சி பெற்றதாக இல்லை. 1933 இலேயே இன்றைய நூலகத்திற்கான முதல் விதை போடப்பட்டது..சிறிய அளவில் யழ்ப்பாணத்தில் இயங்கிய நூலகத்திற்கான நிரந்தரக் கட்டடத்தின் தேவை உணரப்பட்டது. யாழ் நகரபிதா,வண. லோங் அடிகள்,இந்திய தூதுவராலய செயலர்,அமெரிக்கதூதுவர்,பிரித்தானியத் தூதுவர் ஆகியோரால் புதிய நூலகத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.

யாழ்ப்பாணம் கண்டிராத பெரும் களியாட்ட விழாக்கள்,பரிசு சீட்டு விற்பனை போன்ற பலவற்றின் மூலம் மக்களிடமிருந்து நூலகம் கட்டுவதற்கான பணம் சிறிது சிறிதாக திரட்டப் பட்டது.இந்திய கட்டடக் கலைஞர் நரசிம்மன் என்பவரின் வழிகாட்டுதலில்
யாழ் நூலகக் கட்டடம் உருப் பெறத் தொடங்கியது.பல பேரின் கூட்டுழைபினாலும் யாழ்ப்பாண மக்களின் பங்களிபினாலும் உருபெற்ற நூலகம் கம்பிரமாக தலை நிமிர்ந்து நின்றது

யாழ் நூலகம் ஆசியாவின் மிகப் பெரும் நூலகம்.தமிழர்களின் கல்வி வளத்தின் ஆதரமாகவும் தமிழரின் அடையாளமாகவும் உருபெற்று நின்றது.11.10.1959 இல் பொதுமக்கள் பாவனைக்காக யாழ் மேயர் அல்பிரட் துரையப்பவினால் நூலகம் திறந்துவைக்கப்பட்டது.அன்று தொடக்கம் யாழ்ப்பாணத்தவரின் வாழ்வியலோடு நூலகம் ஒன்றிக்க தொடங்கியது.யாழ்ப்பணத்தில் ஊருக்கு ஊர் இயங்கிய வாசிப்புமையங்கள்,சனசமூக நிலையங்கள் வாசிக சாலைகள் என்பவற்றின் மையப் புள்ளியாக யாழ் பொதுசன நூலகம் உருப்பெறலாயிற்று..

ஏறாத்தாழ 98 வீதம் எழுத்தறிவு உள்ளதான யாழ்ப்பாணச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு இந்த வாசிகசாலைகளும் நூலகங்களும் உந்து சக்தியாக இருந்தன. யாழ்ப்பணத்தின் பெரும்பாலான வீடுகளில் பத்திரிகை வாங்கும் பழக்கம் இருந்தது.இளைஞர்கள்
கூடும் இடங்களாக வாசிப்பு நிலையங்களும் ,நூலகங்களும் மாறியிருந்தது.சிங்கள இனவாதிகள் தமிழருகெதிரான வன்முறையினைக் கட்டவிழ்த்த பொழுதுகளில் சிங்களவர் கண்களில் தமிழரின் அறிவு வளர்ச்சி உறுத்திக் கொண்டிருந்தது.

சிங்கள இனவெறியர்களுக்கு தமிழர் மீது இருந்த வெறுப்பு இனாவாதத் தீயாக எரிந்து கொண்டிருந்தது.அவர்கள் தருணம் பார்த்திருந்தனர்.1981 மாவட்ட சபைத் தேர்தலையொட்டிய நாட்க்கள் தமிழர் கல்வி ஆதரத்தை அழிப்பதற்கான நாளாக தீர்மானிக்கப்பட்டது .
1981 மே மாதத்தின் இறுதி நாட்கள் மாவட்ட சபைத் தேர்தல் பிரச்சரத்தில் இருந்த பொலிசார் மீது ஒரு சிறிய தாக்குதல் நடத்தப் பட்டது. தருணம் பார்த்துக் காத்திருந்த சிங்கள பொலிஸாரும், இராணுவத்தினரும்,கொழும்பில் இருந்து கொண்டுவரப் பட்ட
சிங்கள குண்டர்களும் யாழ்ப்பாணத்தை எரிக்கத் தொடங்கினர்.

யாழ்ப்ப்பணதில் உள்ள புத்தகக்கடைகளுக்கு தீவைக்கப்பட்டது,தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் யோகேசுவரனின் வீடு ,மகிழூர்ந்து என்பன தீக்கிரையாக்கப் பட்டன.1981 மே 31 நள்ளிரவை எட்டிக் கோண்டிருந்தது யாழ்ப்பாணத்தின் முதல்
தினசரிப் பத்திரிகையான ஈழநாடு பத்திரிகை அலுவலகத்திற்க்கும் தீ வைக்கப்பட்டது.அந்த அலுவலகம் எரிந்து கொண்டிருந்தது.எரிந்து கொண்டிருந்த பத்திரிகை அலுவலகத்தில் பணியில் இருந்தவ்ர்களில் பலரும் சிதறி ஓட இருவர் அலுவலகதினுள் சிக்குண்டனர்.

தீ யாழ்ப்பாண நகரமெங்க்கும் கொழுந்துவிட்டெரிந்த அந்த நள்ளிரவில் யாழ் நூலகத்தின் மேற்க்கு மூலையில் முதல் தீ வைக்கப் பட்டது. ஒவ்வொரு பகுதியாக பார்த்து பார்த்து நூலகம் முழுவது தீ வைக்கப் பட்டது. யாழ்ப்பாண நூலகத்தில் வைக்கப்பட்ட தீ கொழுந்து விட்டு எரிந்தது யாழ்ப்பாண நூலகத் தாய் துடிதுடித்து எரிவதைப் பார்த்த மக்கள்
துடித்தனர். வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற முடியாதவாறு பொலிசார் தடுத்தனர்.தகவல் அறிந்து வந்த யாழ் மாநகராட்சி ஆணையரை இடைவழியில் இரணுவத்தினர் தடுத்து வீட்டுக்கு திரும்புமாறு பணித்தனர்.

யாழ் நூலகத்திற்கு அருகிலேயே யாழ்ப்பாணம் காவல்துறை தலமை அலுவலகம் இருந்தது.அங்கிருந்தும் பெற்றொல் குண்டுகள் வீசப்பட்டதாக அருகில் வீடுகளில் இருந்தவர்கள் சொன்னாகள்.கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்டு நூலகத்திற்கு அருகில் உள்ள யாழ்ப்பாணம் முற்றவெளியில் தங்க வைக்கப் பட்டிருந்த நூற்றுக் காணக்கான சிங்களக் குண்டர்களே இதனைச் செய்தார்கள் என்று அடுத்தடுத்து நடந்த விசாரணைகளில்
தெரியவந்தது.

இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கையில் சிறிலங்கா அரசின் மூத்த அமைச்சர்களும் சனாதிபதி செயவர்த்தனாவின்நெருக்கத்திற்குரியவர்களுமான இரண்டு அமைச்சர்கள் நூலகத்திற்கு அருகில் உள்ள சுபாசு விருந்தினர் விடுதில் தங்கியிருந்தனர்.1983 தமிழர் படுகொலையை முன்னின்று செய்த சிறில் மத்தியூவும்.தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி கலவரங்களைத் தூண்டிய காமினி திசாநாயக்கவுமே அந்த இரு அமைச்சர்களும். இவர்களின் ஏற்பாட்டில்யே சிங்கள குண்டர்கள் யாழ்ப்பாணம் கொண்டுவரப் பட்டனர்.இவர்கள் இருவரும்தான் யாழ் நூலக எரிப்புக்கு காரணம் என்பதைப் பின்னாளில்
சனாதிபதியான பிரேமதாச ஒப்புக்கொண்டார்.

ஒரே நாளில் மொத்த யாழ்ப்பாணக் கல்வி வளத்தையும் எரித்துவிட நினைத்து சிங்கள அரசு வைத்த தீ தமிழரின் உரிமைத் தீப் பிளம்பாக மாறியது.அந்த தீ இன்று கொழுந்துவிட்டு இலங்கையெங்க்கும் எரிகிறது.ஈழத் தமிழரின் தேசிய அடையாளதின் மீது நிகழ்ந்த ஒரு படுகொலையாகவே காலம் முழுவதிலும் யாழ் நூலக எரிப்பு சொல்லப்படும்.
யாழ் நூலகம் பற்றிப் பேசுகிறபோதெல்லம் இப்போதும் பலர் அழுவார்கள்.

உலகில் எந்த வன்முறை பிரதேசத்திலும் நிகழ்ந்திராத ஒரு கொடுமையினை சிங்கள அரசு நிகழ்த்திக்காட்டியது.ஒரு அரசே தனது நாட்டின் மிகப் பெரும் நூலகத்தை எரிகிறதென்றால் அதன் வன்முறை உணர்வு எத்தனை உச்சமாக இருக்கும்.

1984 இல் எரிக்கப்பட்ட நூலகத்தின் ஒரு பகுதி எரிந்த நிலையிலேயே நினைவிடமாக இருக்க மீதிப் பகுதியில் நூலகம் மீளவும் ஆரம்பிக்கப்பட்டது.ஆனால் நூலகம் மீண்டும் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியது.அதன் பின்னர் சண்டைக் களமாக போராளிகளின்
பதுங்கு குழியாக பின்னர் இராணுவதினரின் உயர்பாதுகாப்பு பிரதேசமாக என்று நூலகம் போராட்டதில் பல்வேறு பத்திரங்களைப் பெறலாயிற்று.இந்த கட்டுரையை எழுதும் இந்த கணம் வரைக்கும் நூலகம் இராணுவதினரால் சுற்றிவளைக்கப்பட இராணுவ
அதி உயர் பாதுகாப்பு வலையதுக்குள்ளேயே இருக்கிறது.

இப்போது சர்வதேசகக் கவனத்தைப் பெற்றுவிட்ட நூலகத்தை மீண்டும் சிறிலங்கா அரசு கட்டியிருக்கிறது இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீளவும் நூலகத்தைக் கட்டுவதற்கு உதவின. பலரும் முன் வந்து புத்தகங்கள் வழங்கினர்.இந்திய அரசு முப்பதாயிரம் புத்தகங்களை வழங்கியது. இப்போது நூலகம் மீண்டும் புதுப் பொலிவுடன் காட்சி தருகிறது.
இருப்பினும் எரிந்து போன அந்த நூலகத்தின் சாம்பல் மேட்டின் நினைவில் இருந்து தமிழர்களால் மீள முடியவில்லை.

அரிய ஓலைச் சுவடிகளும், புத்தகங்களும் எரிக்கப்பட்ட அந்த கட்டடம் ஒரு படுகொலையின்
சமாதியாகவே இருகிறது இப்போது மீளவும் கட்டப் பட்டுள்ள அந்த நூலகம் வெள்ளையடிக்கப்பட்ட ஒரு படுகொலையின் சமாதியே.முன்னைப் போல இப்போது மக்கள் அந்த நூலகத்திற்கு போவதில்லை.பெருமபால பொழுதுகளில் சோகமேயுருவாக யாழ் நூலகம்
தனித்தே இருகிறது.அதனிடம் இப்போது நிறையப் படுகொலைகளின் கதைகள் உள்ளது.


(இக்கட்டுரை அப்பால் தமிழ் இணையத்தளம் மற்றும் தமிழ் ஓசை பத்திரிகைக்காக எழுதப்பட்டது) -செளமியன்

Sunday, May 27, 2007

-அப்பா-கனிமொழியின் கவிதை

கவிஞர் கனிமொழியின் அரசியல் பிரவேசம் அதிசயமானதொன்றல்ல.இந்திய அரசியலில் இது புதுமையும் இல்லை.இதைப் பற்றி ஊடகங்களில் நிகழும் விமர்சனங்கள்தான் புதுமையானது.
அப்பா குறித்த கனிமொழியின் கவிதை ஒன்றை 'அகத்திணை' என்ற அவரின் கவிதைத் தொகுப்பில் இருந்து தருகிறேன் வாசியுங்கள்.

அப்பா

சின்ன வயதில்
செய்த தவறுகளுக்கெல்லாம்
பூச்சாண்டியாய் உன்
பெயரைத்தான் சொன்னாள்
அம்மா

காலையில் கணக்குப் பாடம்
குழம்பியபோது
பத்திரிகையில் புதைந்த
உன் தியானத்தை எப்பிடிக்
கலைப்பது?

விடுமுறை நாள்களில்
சினிமாவுக்குப் போக
அம்மாவைத் தூதுவிடுவதே
ஆபத்தற்றதாய் இருந்தது

வாரம் ஒருமுறை
பின் சீட்டில் வைத்து
தேக்காவுக்கு அழைத்துச் சென்றது

உன் கால் செருப்பு
ஓசையில்
வீடு அமைதியானது

அப்பாவுக்குப் பிடிக்கவில்லை
என்று குட்டை ஸ்கர்ட்டை
அம்மா எதிர்த்தது

இதுதான் நீ என்று
பதிந்துபோய்விட்டது

பெருமாள் கோயிலில்
யாரோ ஒருவன்
கையில் பிடித்துக்கொடுத்தபோது
நடுங்கிய உன் கைகளில்
தெரிந்த நேசத்தை ஏன் ஒளித்துவைத்தாய்
இத்தனை காலமாய்?


-கனிமொழி

மன்னராட்சியில் ஒருவர் மன்னராக முடிசூடிக்கொண்டால் அவரது சந்ததியில் வாரிசு இல்லாத ஒரு நிலை உருவாகும் போது மட்டுமே வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கும்.. இல்லை வாரிசு சிறுவனாக இருந்தால் அந்த வாரிசு வளரும் வரை இன்னுமொருவர் ஆட்சியில் இருந்து நாட்டைப் பாதுகாத்து அந்த வாரிசிடம் ஒப்படைக்க வேணும்.

மேற்கூறிய இந்த மன்னர் முறைமைக்கு சற்றும் குறைவில்லாத அதிகார பரிமாற்றமே இந்திய அரசியலிலும் உள்ளது.இந்த அரசியலில் உருவெடுக்கும் பலவாரிசுகளோடு ஒப்பிடுகையில் கனிமொழி விசயமறிந்த பெண் என்றே தோன்றுகிறது.

Tuesday, May 22, 2007

எரிக்கப் பட்ட -யாழ்ப்பாண நூலகம் பற்றிய வீடியோ ஆவணப்படம்

மே 31 நள்ளிரவில் நூலகத்தில் வைக்கப்பட்ட தீ 26 வருடங்கள் தண்டி இன்றுவரையும் எரிந்துகொண்டே இருகிறது.நான் பிறந்து 18 நாட்களில்
எரியூட்டப்பட்ட அந்த நூலகம் குறித்த ஆவணப் படத்தினை எடுக்க வேண்டும் என்ற எனது கனவுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக செயல் வடிவம் கொடுத்து வருகிறேன்.

2005 இல் நூலகம் தொடர்பான ஆவணப் படம் ஒன்றினை எடுக்க வேண்டுமென பலரிடம் சொன்னேன்.2006 இல் நூலகம் எரிகப்பட்டு 25 ஆண்டுகள். 97,000 புத்தகங்களும் அரிய ஓலைச் சுவடிகளும் சிங்கள இனவாதத் தீயில் எரிந்து சாம்பலாகின.இது தமிழர் கலச்சாரத்தின் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலை.

இந்த படுகொலையின் வரலாற்றை பதிவு செய்வது அவசியமாகிறது.நூலகம் ஒன்றின் அவசியம் யாழ்பாணச் சூழலில் உணரப்பட்டு 1930களில் அது உருவாக்கம் பெறறது முதல் இன்றுவரையான நூலகத்தின் வராலறும் தமிழரின் வழ்வியலும் அரசியலும் இந்த ஆவணப்படத்தில் உள்ளடக்கப்படுகிறது.

இது ஒரு தனிமனித முயற்சியாக தொடங்கினாலும் இதற்கான அனைவரின் பங்களிப்பும் இருந்தால் மட்டுமே இந்த ஆவணப் படத்தை முழுமையானதாக உருவாக்க முடியும்.யாருடைய உதவியுமற்று தொடங்கிய இந்த முயற்சிக்கு சரிநிகர் சிவகுமார் என்னுடன் இணைந்திருந்தார்.இன்னும் இணைந்திருக்கிறார்.பத்மநாப அய்யர்,துவாரகன் ஈழநாதன்.கனேடிய நண்பர்கள் சிலர் என்னை ஊக்கப்படுத்தினர்.

நூலகம் பற்றிய பல சேதிகளும் தகவல்களும் படங்களும் இன்னும் பலரிடம் இருக்கலாம்.அது உங்களிடமும் இருக்கலாம்.அவையெல்லாம் இணைத்ததாகவே இந்த ஆவணப் படம் இருக்க வேண்டும் அதற்க்கு அனைவரினதும் ஒத்துழைப்புத் தேவை. கடந்த வருடத்தில் மீண்டும் சண்டை சூழ்ந்த சூழலில் மிகுந்த சிரமம் எடுத்து இந்த படத்தை எடுத்தேன்.பண நெருக்கடியும் தகவல்களைத் தேடுவதில் உள்ள நெருக்கடியும் இருக்கும் சூழலில் இந்த முயற்சியை மேற்கொள்ளுகிறேன் இதற்க்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.

இன்னும் 20 தினங்களில் இந்த ஆவணப்படத்தினை உங்கல் பார்வைக்கு வழங்க முடியும் என் எண்ணுகிறேன்.உங்களிடம் தகவல்கள் படங்கல் இருப்பின் என்னுடன் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்.

"எரியும் நினைவுகள்" ( 55 நிமிட வீடியோ ஆவணப் படம்)

யாழ் நூலக ஆவணப் படத்தினை முப் பரிமாணத்தில் நாம் எமது படத்தில் பார்க்கின்றோம்.மூன்று முக்கிய மையப் பொருட்களுக்கு அமைவாகவே 55 நிமிட நேரப் படம் நகர்ந்து செல்கிறது.பண்பாடு ,அரசியல்,சமூகவியல் ஆகிய மூன்று பிரதான அம்சங்களின் பின்னணியில் நூலகம் பார்க்கப் படவுள்ளது.

யாழ்ப்பாணத்தின் வரலாறும் நூலகத்தின் கலாச்சார முக்கியத்துவமும்.:
யாழ்ப்பாண நூலகம் தமிழரின் தேசிய காலாச்சார மையமாக மாறியமை,யாழ் நூலகத்தின் உருவாக்கம். திரவிட தனித்துவம் இருக்கவேண்டும் என்பதும் நூலகம் ஒரு அடையாளத்துகுரியதாக இருக்க வேண்டும் மென்ற ஆசையும் நூலக உருவாக்கமும். நூலகம் ஒரு பண்பாட்டு வடிவமாகவும் சமய கலச்சார மையமாகவும் யாழ்ப்பாணத்தாரிடம் உருவெடுத்தமை உதாரணமாக சரஸ்வதி பூசை ஒரு கலச்சார விழாவாக நூலகத்தில் கொண்டாடப் பட்டமை தங்கள் பிள்ளைகள் பரிட்சையில் சித்தியானால் நூலகத்தினுள் பொங்கல் வைத்தல் போன்றவற்ரை கொள்ள முடியும்.இன்றுவரையும் யாழ்பாண நூலகம் ஒரு காலாச்சார அடையாளமாக பார்க்கபடுகின்ற நிலை.யாழ்ப்பாண கலாச்சாரத்தினையும் நூலகத்தினையும் இணைத்து எமது படத்தில் பார்க்க இருக்கின்றோம் .

அரசியலில் நூலகம் :
நூலகம் மூன்று அரசியல் நிலைகளில் இருந்துள்ளது. முதலாவதாக 1960 தில் நூலகத் திறப்பு அல்பிரட் துரையப்பா அவர்கள் யாழ் மாநகர சபைத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்தது(1959 இல் நூலகம் திறக்கப் பட்டது 61 இல் அல்பிரட் துரையப்பா யாழ் மேயராகின்றார்)
இதன் பின்னர் த்மிழரின் தேசியச் சின்னமாகௌருவெடுத்த நூலகம் 1981 இல் சிறீலங்கா அரச ஆதரவோடு எரிக்கப் படுகிறது .இதன் பின்னர் இலங்கையின் தேசிய அரசியல் அரங்கிலும் இனமுரண்பாட்டிலும் அது பிரதான பாத்திரமாக மாறுகிறது. இப்போது வரையும் தேசிய அரசியலில் அது பிரதான பங்கு வகிப்பதாகவே உள்ளது
இரண்டு பிரதான தேசியக்கட்சிகளின் அரசியலிலும் அதேநேரம் போராட்ட அரசியலிலும் நூலகம் முக்கிய பாத்திரமாகிறது.
மூன்றாவதாக அது சர்வதேச அரசியல் அந்தஸ்து பெற்ற ஒன்றாகவும் உள்ளது.இன்று சர்வதேச சமூகத்தின் பார்வைகுட்பட்டதாக அது உள்ளது.

சமூகவியல் நோக்கில் நூலகம் :
யாழ்ப்பாணச் சமூகத்தின் கல்வி முக்கியத்துவம் காரணமாக கல்வியோடு தொடர்புடைய நூலகம் மக்கள் மத்தியில் முகியத்துவம் மிகுந்ததாகவுள்ளது.யாழ்ப்பாணச்சமூகக் கட்டமைபில் சிறப்பியல்புகளில் ஒன்று சனசமூக நிலயங்கள்.ஒவோரு ஊரிலும் இருகின்ற சனசமூக நிலயங்களுக்கெல்லம் மையப் புள்ளியாக யாழ்நூலகம் உருமாறுகிறது.சனசமூக நிலயங்களுக்கும் மக்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பிருந்தது.மக்கள் ஒன்றுகூடி கருத்துக்களை பரிமாறுவதற்கான தளமாக அது இருந்தது.பின்னாளில் போராளிகளுக்கான தொடர்பு மையமகவும் மாறியது இந்தப் பின்னணியில் நேரடியாக யாழ் நூலகத்தோடு தொடர்பு பட்டிருக்காத பலரும் சமூகப் பாரம்பரியத்தின் ஊடாக தொடர்பு பெற்றிருந்தனர்.

ஆக,
அழகான கட்டடமாகவும் மிக நெருக்கமான தொடர்பு பட்டதாகவும் துருத்திகொண்டு தெரியும் யாழ் நூலகம் தமிழரை பழி தீர்பதற்கு சரியா தெரிவாக இருந்திருகிறது.இதனப் போலவே எவ்வாறு தமிழரைப் பழிதீர்பதற்கு இந்த நூலகம் பயன் படுத்தப்பட்டதோ அதே போல் தமிழரை தன்வசப் படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டது. இதனை மையப் படுத்திய தமிழரின் உளவியல் சமூகவியல் யதர்த்தமும் அதேபோல் அரச உளவியலும் இந்த படத்தில் ஆரயப் படுகிறன.

கடந்த 25 வருடகால இனப்படுகொலைப் போரியலில் நூலகம் பங்களித்து நிற்கிறது.போராளிகளின் வாசிப்புக்கும் பின்னர் கோட்டைக்கெதிரான சண்டையில் போராளிகளின் அரணாகவும் நூலகம் பயன்பெற்றிருக்கிறது.

தொடர்புக்கு: someeth13@gmail.com

Saturday, May 19, 2007

நகுலன்...காலமானார்.

17.05.2007 அன்று மிக அமைதியான வாழ்வியலின் ஒரு நாடகக்காரனாக வாழ்ந்த நகுலன் என்கிற எழுத்து ஆழுமை நிரந்தர அமைதிக்குப் போய்விட்டது. இன்று(19.05.2007) அவரின் இறுதி நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன.




இருபதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல் போகிறோம்.

-நகுலன்.


நவீன தமிழ் இலக்கியத்தின் அற்புதமான படைப்பளி.அவர் எப்போதும் எந்த குழுக்களுக்குள்ளும் சிக்கிகொள்ளாத ஒரு நீடித்த தனிமையில் இருந்தார்.இறக்கும் போது அந்த தனிமை அவரை யாரும் நெருங்க முடியாத துரத்திற்க்கு கொண்டு போனது.

நகுலன் என்கிற டி.கே.துரைசாமி பிரந்தது தமிழ் நாட்டில் உள்ள கும்பகோணத்தில் ஆனாலும் வளர்ந்தது இறுதிவரை வாழ்ந்தது எல்லாமே கேரளத்தின் திருவானந்தபுரத்தில்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் முதுகலையும் ஆராச்சிப் பட்டமும் பெற்றவர்.திருவானந்த புரம் இவானியர் கல்லூரியில் ஆங்கிலப் பேரசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

நாவலாசிரியர் ,சிறுகதை எழுத்தாளர்.கவிஞர்,விமர்சகர்,ஆராச்சியாளர் என்கிற பல பரிணாமங்களைக் கொண்டாலும் எந்த இத்தியாதிக் இலக்கியக் குழுகளிலும் சிக்காதவர் நகுலன்.

காமம், மரபு,பிரம்மச்சர்யம்,காமம்,தனிமை,தர்க்கம் என் நீளும் நகுலனின் எழுதுலகம் அலாதியானது. ஏழ்மையும் ,தனிமையும் அவருடன் எப்போதும் கூட இருந்தன.

நகுலன் கவிதைகளை மீண்டுமொருமுறை படித படியே அவர் எழுதாலேயே அவரை அஞ்சலிப்போம்.தன் மரணம் குறித்து அவர் நீறையவே எழுதியிருகிறார்.அதை நோக்கி அவர் காத்திருந்தார்.




" ராத்திரியில்
ஒவ்வொரு நட்சத்திரமும்
என்னை பிரசவிக்கிறது"

-நகுலன்



"one said:
The cat has its claws
The rat has its teeth
Even the bird has its beak
What have you?
The other said:
Flash wedded to the mind
Subject to the school of suffering and
survival"

-Nakulan





( நண்பர் காஞ்சனை சீனிவாசன் அவர்களின் நகுலன் குறித்த புகைப் பட ஆவணத்தில் இருந்து எடுக்கப் பட்ட படங்கள் இவை. நகுலனின் மறைவுக்கு சில மாதங்கள் முன்னர் இந்தப் வண்ணப்படங்கள் எடுக்கப் பட்டன.கறுப்பு வெள்ளைப் படம் சில வருடங்கள் முன்னர் எடுக்கப் பட்டது)

Friday, May 18, 2007

மே 13....படுகொலையின் மற்றுமொரு நாள்.

மே 13 என்பது என் வழ்வின் அற்புதமான நாளாகத் தான் எப்போதும் இருந்திருக்க வேண்டும்.
1981 இல் மே 13 க்கு பின்னரான நாட்களில் தீட்டப் பட்ட கொடும் திட்டத்தின் படுகொலையின் செய்தியினை மே 31 நள்ளிரவில் யாழ் நூலகத்தில் கொழுந்துவிட்டெரிந்த தீ உலகிற்க்குச் சொல்லியது. 2006 அந்த படுகொலைக்கு 25 வயது.அதற்க்கு 18 தினம் முன்பாக மே 13 நள்ளிரவில் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் உறங்கிகொண்டிருந்த அப்பாவிகளை உயிர்பலிவாங்கின சில துப்பாக்கிகள்.

நான் மறந்தாலும் மே 13 என்னைச் சூழ உள்ளவர்களால் எப்போதும் நினைவு படுத்தப்படும் நாள்.இந்த ஆண்டு அதற்கு பல தினங்கள் முன்பதாகவே அது எனக்கு நினைவில் வலியாய் வந்தது.கடந்த வருடத்தில் யாழ்ப்பாணத்தில் அந்த மக்களின், சின்ன் சின்னப் பிள்ளைகளின் உணர்வினைக் சில நாட்கள் கூடவே இருந்து கண்டிருகிறேன்.அதனைப் பதிவு செய்திருகிறேன்.

கொலை செய்தவர்கள் குறித்த விபரம் தெரியும் என்று நீதிபதியிடம் சொன்ன சாட்சிகள் இன்றுவரை என்ன ஆனார்கள் என்று யாருக்கும் தெரியாது. பெரும்பாலும் இனியும் தெரியப்போவதில்லை.யார் கொலை செய்தார்கள் என்பதும் இனித்தெரியப் போவதில்லை.ஒருகிராமமே ஏதிலிகளானது........

அந்த மே 13 படுகொலையில் இறந்துபோன ஒரு வயது கூட ஆகாத சின்னப் பிஞ்சுகள் இரத்ததில் மிதந்ததைப் பார்த்த இளம் குழந்தைகளின் உணர்வுகளை, சென்ற வருடத்தில் கட்டுரையாக எழுதியிருந்தேன்.ஆங்கிலத்தில் எழுதப் பட்ட அந்த கட்டுரையை உங்கள் வாசிப்புக்காக தருகிறேன்.


(உங்கள் வேலைப் பளுக்களுகிடையில் இந்தக் கட்டுரையைப் படிப்பது கடினமெனில் நேரமிருக்கையில் வாசியுங்கள்)

Human rights: Fear stalks the survivors of Allaipiddy
By: S.Somitharan
Courtesy: Northeastern Monthly - July 2006

We are scared. We d not know why they kill little children. After the massacre that night we peeped through the window. Children were swimming in pools of blood. My uncle was also in the same state,? said a young girl.

Another girl added ?Those who did not see the actual scene saw pictures of the dead kids. We like to live at Allaipiddy but we are scared.?

These children (whose names like those of most others in this article are withheld for security reasons) are displaced in a Catholic church in Jaffna town after the massacre at Allaipiddy in Kayts on 13 May. Like this child others too are bereft of their homes and cannot return.

Ironically, none but the Sri Lanka navy and the EPDP cadres in Allaipiddy are willing to give protection to the civilians. Let alone being reluctant to accept security guarantees from the navy and EPDP, the civilians are also apprehensive of residing near camps in fear such places might be attacked by the Tigers.

The people of Allaipiddy returned to the village they abandoned in 1990 after the Ceasefire Agreement of 2002. They rebuilt their homes and businesses. Till 13 May this year they believed they could live in Allaipiddy though fighting was raging elsewhere. Today however residents feel the killings at Allaipiddy are without precedent because unlike on other instances where people of the area are arrested on suspicion after an attack on government forces, in the case of Allaipiddy, the navy deliberately targeted civilians, including children, without cause.

I am quite certain the victims had nothing to do with any subversive activity. It is precisely this reason that we feel there is no guarantee for the lives of anyone at Allaipiddy. That is why the whole village fled elsewhere for refuge,? said a displaced resident from the village.

Residents however believe that the navy was interested in acquiring the house where the family was massacred, but its owners were unwilling to part with it. This could be the punishment.

Allaipiddy, as was the case in most of the villages that are now within the 144 sq. km. high security zone (HSZ), first suffered displacement in 1990. Many of the survivors are fishing families from coastal areas such as Kankesanthurai and Keerimalai, while others are from the interior farms of Tellipalai.

The Sri Lankan security forces moved into Allaipiddy in 1990 because of a need to establish a camp to facilitate troop movement and supply lines to the Jaffna Fort, which was at that time under the control of the Sri Lanka government. The disappearances, extrajudicial executions and sheer terror perpetrated by the security forces on the civilian population at Allaipiddy forced them to vacate the village.

It is believed more than 100 persons were either killed or disappeared from that village during the military campaign of 1990. (An account of the depopulation of three villages: Mandatheevu, Allaipiddy and Mankumban are set out in a North East Secretariat for Human Rights ? NESOHR ? report published in 2005). What remained till resettlement began after the CFA was initialled were the navy and the EPDP.

Allaipiddy will remain a contentious spot because it occupies the strategically important position it does. As long as the LTTE retains its base at Pooneryan, the navy needs Allaipiddy to control LTTE sea movements between its base and the government facilities at Kankensanthurai. It will also be of some importance as a supply line for troops in Jaffna.

Rev Fr. Amalraj a Catholic priest attached to the parish at Allaipiddy rescued some injured people from certain death by taking them to hospital on the night of 13 May. The navy tried its best to prevent him in fear the survivors would later identify the killers. Through his prompt and humane action three persons survived and are now witnesses ? two old people and a child. It is believed that the woman took a glancing shot and fell down and the killers had left her for dead. The man was severely injured and was admitted to hospital, but lived to tell the tale. The child was hiding behind a door and saw all what happened.

Returning to Allaipiddy is almost impossible. There is no security for Tamil civilians. However, there is no difference between Allaipiddy and the rest of Jaffna. When I ride a motorbike even in Jaffna town I feel the small of my back tingling in fear of straying into the crossfire,? said Amalraj.

Many people in Jaffna think similarly. Rather than the day-to-day killings that are the order of the day at present, the period when there was total war was better they feel. After four years of the CFA, terror has suddenly re-emerged with disappearances and murder that make the residents feel very vulnerable.

According to the Human Rights Commission (Jaffna) 153 disappearances have been reported recently. But it is well known that those whose names are reported form only a fraction of those whose rights have been violated in some way. Due to the multiplicity of possible perpetrators, the public is scared to complain to the authorities. Second, it is mostly the educated and the city dweller that has access to the HRC not those in the outlying villages who have to cross checkpoints manned by the military to reach Jaffna. Young people do not complain nor do families with young people ? the high risk category.

Human rights activists feel that people living in groups are harassed more than others because if the military enters a place with a large group of people, they abuse more people. This could be because the demonstration effect of such abuse could have greater impact than in the case of few individuals. It could also be because nobody takes ultimate responsibility in an IDP camp and the security forces can behave with impunity.

An example of what happened recently is illustrative. When a claymore blast occurred near a welfare centre, soldiers entered the centre on suspicion the perpetrators could have run inside. When they could not find them they turned violent hands on the young males within the camp. Then they told the males and the older folk to leave the makeshift huts while the girls were kept inside. The soldiers and the girls remained together for around half an hour.

The victims are unwilling to speak because they might be victimised again. They are scared to report to the HRC either,? said an NGO worker laconically.

Another reason the public is scared to complain is because the perpetrators of violence are not easily identifiable. It could be the military, the paramilitaries or the Tigers. The confusion and the culpability of all parties in some way or another have given rise to distrust towards all of them.

A woman having love affair with EPDP cadre is killed, as much as the man who gives meals to the LTTE. The Jaffna public was trained to protect themselves when there was full-scale war, including air raids, but today, since individuals are the target there is no escape,? the NGO worker said.

The only option is to run away from Jaffna, but it will be better to go overseas,? said a resident.

It was when the Jaffna public was under such stress that the bodies were discovered at Kopay. The body of a Hindu priest was exhumed and identified. He had no political connections. The body of a youth was also discovered there, wearing a watch that was eerily still ticking. He too was identified but there was report about him with the HRC. Nobody had complained to the HRC he was missing because he had gone to his grandmother?s home and was not missed anywhere till the fateful news arrived of his corpse.

What is more, though there are details of killing people look at it as news and sensation. It has not acted as a preventive of further killing. Therefore, the acts of violence continue unabated. This is partly because the law enforcement machinery is impaired, but not entirely.

Civil society has lost its voice and the state acts as if it has no obligation towards one as a citizen. So even public opinion carries no weight,? said the NGO worker.

An existence wrapped with fear is beginning to tell on people?s minds. Psychological disturbance is not only telling on them in the way they handle conflict-related issues but also in other matters that they confront in their day-to-day lives. Amongst the groups vulnerable are children.

The next generation is badly affected because they see pictures in the media as well as in real life, which leaves them scarred,? said Dr. S. Sivayogam a psychiatrist at the Jaffna Teaching Hospital.

The public believes that anyone can kill anyone else and get away with it. It creates a great sense of vulnerability and futility, which is affecting their emotional well being.

Civilians do not carry arms. But in today?s war it is they who are worst affected. It is the government and LTTE that should guarantee civilian protection and how well they do it will play an important role in defining the politics of the future.