என் ஆவணப் படங்களின் உருவாக்கம் பற்றி நண்பர் ஈழநாதன் சில மாதங்களுக்கு முன்பு எழுதச் சொல்லிக் கேட்டிருந்தார். என்னால் தொடர்ந்து பதிவிட முடியாத நிலை இருந்ததால் நான் அது பற்றி எதுவும் எழுதவில்லை.
விக்கிரமாதித்தனைப் போல பதிவினை தொடர்சியாக இடும் பணியில் மீண்டும் மீண்டும் தோற்றுப் போய்க்கொண்டே இருகிறேன்.எனது வரவுசெலவு நிலவரம் இடம் கொடுக்காத காரணத்தினால் இதுவரை சென்னையில் உள்ள எனது அறைக்கு இணையம் வரமுடியாமல் போனது. இப்போது சில ஒதுக்கீடுகளை செய்து என் அறைக்கு இணையத்தை கொண்டு வந்து விட்டேன்.இன்றைய தேதியில் ஒரு சாமான்யனுக்கு இது இனிப்பான செய்திதான்.இணையம் இந்தியாவில் சாமான்யன் எட்டும் தூரத்துகு வந்திருப்பது சில அத்துமீறல்களையும் தாண்டி அதிக மகிழ்ச்சி தரக்கூடியது.
யாழ் நூலகம் உட்பட 3 ஆவணப் படங்களையும் சிவராம் கொலையின் பின்னரான பொழுதுகள் குறித்த ஆவணப் படத்தினையும் ஆரம்பித்து 90 வீத வேலைகள் பூர்த்தியாகப் பட்டுள்ளது. யாழ் நூலகம் குறித்த எனது படத்திற்கான தகவல்த் தேடல்கள் இன்னமும் தொடர்கிறது.உங்களீல் யாரும் விரும்பின் இணைந்து கொள்ளலாம்.
இன்னும் ஒரு மாதத்திற்குள் யாழ்ப்பாணத்து செய்திகள் சொல்லும் இரண்டு படங்கள் முழுமை பெற்றுவிடும்.அவை என்ன சொல்லப் போகிறது என்பதைப் பின்னர் சொல்கிறேன்.சில சிக்கல்கள் காரணமாக(பொருளாதாரம் உட்பட) நிறயவே தாமதமாகி விட்டது
சிவராம் கொலைக்கு பின்னர், சிவராமின் கொலைக்கு பின்னரான சூழலும் ஈழ ஊடகவியல் சூழலும் எவ்வாறு உள்ளது என்பது குறித்த ஆவணப் படுத்தலினை மேற் கொண்டேன்.மறைந்த புலமையாளர் ஏ.ஜே.கனகரட்ணா மற்றும் பல்வேறு தமிழ், சிங்கள ஊடகக்காரர்கள் உட்பட பலரின் கருத்துகளும் பதிவாகியுள்ளது.
இதைப் போலவே முல்லை தீவு கூத்தினை ஒளிப்பதிவு செய்து வைத்திருந்தேன்.இப்போது இந்திய தேசிய நாட்டுப் புறவியல் நிறுவனம் கேட்டதன் பெயரில் அதனை 30 நிமிடக் படமாக உருவாக்கியுள்ளேன். முல்லைக் கூத்தின் ஒரு அறிமுகமாக அது இருக்கும்.
இந்த வருடம் வற்றாப்பளை அம்மன் திருவிழாவுக்கு முன்னதாக நிகழ்த்தப் பட்ட முல்லைமோடி கோவலன் கூத்தே அது.வயது முதிர்ந்த கூத்துக்காரர் ஒருவரி கூத்து பாடல்களையும் ஆவணப் படுத்தினேன்.
இப்போதைய எனது நோக்கமெல்லாம் ஆவணப் படுத்த வேண்டுமென்பதே முடிந்தளவு முறையாக அதை செய்ய வேண்டும்.எங்களிடம் இருக்கும் முக்கியமான நபர்களை ஆவணப் படுத்த வேண்டும். பேராசிரியர் சிவத்தம்பியை ஆவணப் படுத்துவதற்கு சரிநிகர் சிவகுமார் முயற்சித்தார் இன்றுவரை முடியவில்லை.சமாதானப் பேச்சுக்காலத்தில் ஆதைச் சிறப்பாக செய்திருக்க முடியும். ஏ.ஜேயை ஆவணப் படுத்தலாமென்று சிவகுமரும் நானும் முயற்சித்தோம்.முதலில் சிவத்தம்பியை பண்ணுங்கோ என்னை பிறகு பார்கலாமென்றார் ஏ.ஜே . இப்பொது என்னைடம் உள்ள அவரின் இறுதி நேர உரையாடல்களை கொண்டு ஒரு சிறிய வீடியோ ஆவணம் உருவாக்க நினைத்துள்ளேன். என்னிடம் வீடியோ மட்டும் உள்ளது இன்னும் பல அவரின் புகைப் படங்கள் சம்பவங்கள் அது தொடர்பான புகை படங்கள் யாரிடமாவது இருப்பின் கொடுத்துதவினால் ஒரளவு செழுமையாக செய்வதற்கு அது உதவியாக இருக்கும்.
நானும் பா.அகிலனும் சேர்ந்து சிலரை ஆவணப் படுத்த நினைத்தோம் நினைத்ததில் பாதி கூட பண்ண முடியவில்லை.இந்தவருடம் தனது 75 வது பிரந்த நாள் கண்ட குழந்தை சண்முகலிங்கம், மாமனிதர் எஸ்.ரி.அரசு ஆகியொரை இந்த வருடத்தில் ஆவணப் படுத்த நினைத்தோம்.நாட்டின் மேசமான நிலையினால் இடைநடுவில் கைவிடப் பட்டது.இருப்பினும் ஓரளவு அவர்கள் இருவரின் நேர்காணல்களையும் பதிவு செய்து விட்டோம்.இருவருமெ யாழ்ப்பாண நாடகப் வரலாற்றில் முக்கியமானவர்கள்.குழந்தை சண்முகலிங்கம் இன்று வலுப் பெற்ற நவீன தமிழ் நாடக உருவக்கதில் முக்கியமானவர்.
சரி அடுத்த பதிவில் முல்லைதீவில் கூத்து ஒளிப்பதிவு செய்த போது நான் சந்தித்த பழய கூத்துக்காரர்கள் சொன்ன அவலமான 2 விடயங்கள் பற்றி சொல்கிறேன். இப்பொதைக்கு விடை பெறுகிறேன்.
Monday, November 20, 2006
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
வாழ்த்துக்கள்.
ஆகா நிறய சொலுரான்.
தொடரட்டும் ....
எழுதுங்கையா எழுதுங்க !!!!
வாசிக்க நான் தாயர்,
திலகன்
(ஞாபகம் இருகுதா???
ஞாபகம் இருக்குது திலகன் இப்ப எங்க இருகிறீர்கள்?
வாவ். சோமி.. எப்படி இருக்கீங்க நீங்களும் வந்துட்டீங்களா..?
வாழ்த்துக்கள்
சிவரஞ்சித்
வாழ்த்துக்கள் சோமிதரன், முன்னர் தொடர்பு கொள்ளவேண்டும் என்று இருந்த போது வெளியூர்ப்பயணங்கள் மறக்கடித்துவிட்டது. முடிந்தால் தனிமடல் போடுகிறீர்களா?
நல்ல விஷயங்கள் பலவற்றைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி சோமிதரன்.
முடிந்தால் எனக்கொரு தனிமடல் இடமுடியுமா?
mathygrps at gmail dot com
நன்றி!
-மதி
நன்றி
உடனடியாக பார்த்தவர்களுக்கும் பின்னூட்டங்களை இடுகை செய்தவர்களுக்கும் எனது நன்றி
மதி மற்றும் கானாபிரபாவுக்கு மடல் போட்டேன் கிடைத்ததா என்பது பற்றி தெரியாது
தொடர்ந்தும் நிறயவே பகிர்ந்து கொள்வோம்.
சோமிதரன் உங்களது ஆவணப்படங்கள்..??? எனக்கு பெருமளவில் உதவியது போலவே பலருக்கும் உதவட்டும்.. வாழ்த்துக்கள்..
இனியாவது முடிச்சை அவிழ்ப்பம்..
http://sayanthan.blogspot.com/2005/07/blog-post_18.html
சயந்தன் உங்களுக்கு அதுகள் எதுகெல்லம் உதவியது எண்டு பிறிதொரு பதிவில் சொல்லுங்கள்.நான் சொல்லுறது சரியில்லைதானே.
ஆவணப்படுத்தல் என்பதே அடுத்தவனுக்கு உதவும் ஒரு முயற்சிதான்.
சோமிதரன்!
வாழ்த்துக்கள். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும். முடிந்தவரையில் உங்கள் முயற்சிகளுக்கு உதவக் காத்திருக்கின்றேன்.
நன்றி!
Post a Comment