இலங்கை அரசின் அதி உச்ச பாதுகாப்பு வலையத்துள் ஒருவரை கொலை செய்து போடும் வரை பார்த்துக்கொன்டிருக்கும் மோசமான பாதுகாப்பா இலங்கையில் இருகிறது?
புலனாய்வு பிரிவினர் இதற்கு பின்னணியில் இருக்கலாமாம் ........
எல்லாம் முடிந்து போய் விட்டது இனியாவது .......................
என்னத்தை செய்யிறது ....???
Friday, April 29, 2005
....அஞ்சலிகள்.........
ம்.........பெருமூச்சு மட்டுமே இன்னமும் மீதியாக.......சிவராம் அண்ணா.....இலங்கைத் தமிழ் பத்திரிகையளர்களில் மிகச்சிறந்த ஆளூமை... திட்டமிட்ட படுகொலைகளின் தொடர்ச்சியாய்..... விடுதலை பெறுகிற போது வெறும் மூளையற்ற சமுதாயம் ஒன்றை கட்டியெளுப்ப முனைபவர்களுக்கு துணையாக எத்தனை காலம் நாமும் செத்துக்கொன்டிருப்பது...தமிழனின் 25 வருடகால போராட்டத்தில் நாம் இழந்து விட்டவர்கள் எத்தனை பேர்.......
80 களின் தொடக்கம், இந்திய இராணுவ காலம், 90கள்...........இப்போதும்??? நடை பெறும் கொலைகளின் பொறுப்பாளிகள் யாராக இருபினும் எம் மீதான கொலை களும் அச்சுறுதல்களும் மட்டும் தொடரவே செய்கிறது
நிமலராஜன் ,நடேசன், சிவராம்.......???

Wednesday, April 13, 2005
புது வருசமும் நானும்....?!
என் இனிய நண்பர்களெ,நான் என் எழுத்துக்களை பதிவு செய்வது இல்லையே என்று நிறைய ஆதங்கப்படுகிரேன்.உங்கள் எழுத்துக்களையெல்லாம் பார்க்கும் போது மகிழ்ச்சி இயல்பாக வருகிறது நல்லதை நான் வாசிக்க தருகிற நன்பர்கள் அனைவருக்கும் நன்றி.நிறைய உணரமுடிகிறது.சென்னையின் கடினமும் இன்பமும் நிறைந்த கல்லுரி விடுதி வாழ்க்கையில் இவற்றை பதிவதற்க்கு நேரமும் குறிப்பாய் காசும் பெரிய சோதனைதான்...எல்லாவற்றையும் வாசிப்பதற்கு மட்டுமே நேரம் சரியாக போய்விடுகிறது.
புதிய ஆன்டில் எல்லாரும் கூறும் வாழ்த்துக்களுக்கும் அப்பால்....ஒன்றே ஒன்று அடுத்த வேளை சாப்பாடு அற்று இருக்கும் என் சக மனிதனை, அடிப்படை உரிமைக்காய் இன்னும் அடிபட்டுக்கொன்டிருக்கும் மனிதனைஉம் ஒரு தடவை நினைத்துக்கொள்வோம்.......பின்னர் எங்கள் எல்லா தத்துவங்கள் பற்றியும் பேசுவோம்.இன்னும் தொடரும் ஈழத்துக் கொலைகளும்...தமிழ்நாட்டில் உணர்வுகள் கொச்சைப்படுத்தப்படும் தலிதுகளும் பெண்களும் அந்த வன்முறைகலும் என்று தேறும்...?!அதட்க்காக இந்த புது வருடத்தை(!)அர்ப்பணிப்போம்.

Subscribe to:
Posts (Atom)