கனடாவில் இருந்து நண்பர் ஒருவர் தொலைபேசினார்... தம்பி உங்கள் ஆவணப் படதின் விலை அதிகமாக இருக்குது என்றார் ..."சினிமா படமெல்லாம் இங்க ஒரு டாலரில் கிடைக்குது ஆனா உங்கட DVD மாட்டும் 10 டொலர் என்றார்... " எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டேன்..
என் மற்றய நண்பர்களிடம் விசாரித்தேன் ஒறியினல் சினிமா DVD 25 டொலர் வரை விற்பனையாகுது ..1 டொலரில் விற்பனையாவது பைரசி DVD என்றனர் அவர்கள்... எமது "எரியும் நினைவுகள்" படத்தை பைரசியில் விற்பதற்க்கு யாரும் முன்வரவில்லை?! என்பதால் அது இன்னமும் 10 டொலரில் விற்க்கப் படுகிறது. தமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஆகிய மூன்று மொழிகளிலான படங்கள் அடங்கிய ஒரு DVD யின் விலைதான் 10 டொலர். இந்தியா உட்பட உலகம் பூராவும் ஏறக்குறைய ஒரே விலையைத்தான் நாங்கள் நிர்ணயித்திருக்கிறோம்.
உணமையில் எமது போராட்டத்தின் ஆரம்பம் குறித்துப் பேசும் ஒரு படத்திற்க்கு நமது மக்களிடம் நல்ல வரவேற்ப்பு கிடைக்கும் என்ற எனது நம்பிக்கை தோற்றுப் போனதாகவே நான் உணருகின்றேன்.தமிழ் சினிமாவின் மீதிருக்கும் மாயையில் இருந்து மீளாத நமது தமிழர்களிடம் ஆவணப் படத்தைக் கொண்டு செல்வதும் அதன் முக்கியத்துவத்தை உணரச் செய்வதும் மிகப் பெரும் சவாலாகவே இருக்கிறது. நாம் விடிய விடியப் பேசும் ஒரு விடையத்தை ஒரு மணி நேர ஆவணப் படம் மிக இலகுவாக எடுத்துச் சொல்லும். நமது மக்களின் அவலங்களையும் போராட்டத்தின் அவசியத்தையும் உலகிற்க்கு உணர்ர்த்த வேண்டிய மிக அவசியம் இருகிறது.
இன்று காட்சி ஊடகம் மக்களைக் கட்டிப் போட்டிருக்கும் சூழலில் அதன் உச்ச பட்ச பயன் பாட்டை எமக்கானதாக மாற்றியாகா வேண்டும்.யாழ் நூலகம் பற்றிய எமது படம் ஒரு முன் வரைபு மட்டுமே...இன்னும் பலரின் ஒத்துழைப்பும் பல தகவல்களும் ஆவணங்களும், வீடியோகளும் புகைப்படங்களும் கிடைக்கப் பெற்றால். ஒரு முழுமையான படத்தை உருவாக்கிட முடியுமென நானும் நண்பர் சரிநிகர் சிவகுமாரும் நினைத்திருந்தோம்.எப்போதும் புனைக்கதைகளிலும், பெருமைபேசுதலிலும் காலத்தைக் கழிக்கும் எமது தமிழ் சமூகம் வரலாற்றில் தோல்வியடையும் சமூகமாக மாறிவிடுமோ என்ற கவலையே எமக்கானது.
நண்பர்களே, உலகம் பூராவும் விரவிக் கிடக்கும் நாம் அனைவரும் இன்று செய்ய வேண்டிய அவசிய வேலை நமது அரசியல் பிரச்சனையை சாத்தியமான எல்லா வழிகளிலும் உலக மக்களிடம்ம் எடுத்துச் செல்வதுதான். அதற்க்கு காட்சி ஊடகம் நல்ல தெரிவு. உங்களை ஆவணப்ப்டம் மட்டும் எடுங்கள் என்று நான் சொல்லவில்லை. பாடல்கள், குறும் படங்கள் ,முழுநீளப் படங்கள், பல் மொழி தொலைக்காடசி நிகழ்ச்சிகள் என்று சாத்தியமான எல்லா வழிகளிலும் முயற்சிப்போம்.
வெறுமனே தமிழில் இணையத்தளம் நடத்துவது,தொலைக்காட்சி நடத்துவது,வானொலி நடத்துவது என்பது மட்டும் போதாது.இலங்கை ரூபவாகினி செய்யும் வேலையில் பாதியைக்கூட நாம் செய்து விட வில்லை.இலங்கை அரசின் ராணுவபலத்திற்க்கு நிகராக நம்மை வளர்த்துவிட்டால் மட்டும்போதாது...கடந்த முப்பது வருடத்தில் நாம் மக்கள் தொடர்பிலும் எந்தளவைத் தொட்டிருக்கிறோம் என்று ஒருதடவை பாருங்கள்.
இது குற்றம் சுமத்துவதற்க்கான பதிவல்ல...நான் உட்பட நமது பணிக்கான ஒரு முன்வரபு..
Tuesday, January 20, 2009
Subscribe to:
Posts (Atom)