Wednesday, November 12, 2008

உதடுகளால் சொல்ல முடியாததை இமைகளால் சொல்ல முடியும்- அறிவுமதி

யாழ் நூலகம் எரிப்பு ஆவணப் படம் உலக ளாவிய அளவில் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை மூலமாக பரப்பப்படும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்.பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை தொடக்க மற்றும் எரியும் நினைவுகள் என்ற தலைப்பில் யாழ் நூலக எரிப்பு குறித்த ஆவணப் படம் திரையிடல் கொண்ட வரலாற் றில் மிக முக்கிய நிகழ்ச்சியாக 8.11.2008 அன்று சென்னை - பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும், பாவலர் அறிவுமதி அவர்களும் நிகழ்ச்சியில் பார் வையாளர் வரிசையில் அமர்ந் தனர்.மண்டபம் நிரம்பி, நிற்க இடமில்லைஆனால் நிகழ்ச்சி துவங்குவ தற்கு முன்பே அன்னை மணி யம்மையார் அரங்கம் நிரம்பி வந்திருந்தோர் நாற்காலி மற் றும் உட்கார இடமில்லாமல் நின்று கொண்டிருந்தனர். கூட்டம் அளவுக்கு அதிக மாக ஈழத் தமிழர் உணர்வு காரணமாகக் கூடியிருந்தது.முதலாவதாக சோமீதரன் என்ற ஈழத் தமிழரான இளை ஞர் எரியும் நினைவுகள் என்று அவரது முயற்சியால் எடுக்கப்பட்ட குறும்படம் ஆவணப் படம் திரையிடப் பட்டது. யாழ் நூலகம் எப்படி எரிக்கப்பட்டது? ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குரிய பழைய கால ஓலைச் சுவடிகள், வரலாற்று ஆதாரங்கள், ஏராள மான நூல்கள் சஞ்சிகைகள் எப்படி எரிக்கப்பட்டன? ஏன் அந்த சூழ்நிலை ஏற்பட்டது? என்ன காரணம்? எந்த நேரத் தில் யாழ் நூலகம் எரிக்கப் பட்டது?97,000த்திற்கும் மேற்பட்ட நூல்கள் எப்படி எரிந்து சாம் பல் மேடாயின? என்கின்ற வர லாற்றுச் செய்தியை விளக் கியது இக்குறும்படம்.இதைப்பற்றி அறிஞர்கள் கா.சிவத்தம்பி, ஓய்வுபெற்ற ஆசிரியர் அந்தோணிதாசன், சித்ரலேகா மவுனகுரு, சுலோச்சனா ரகுநாதன், நூலக உதவியாளர் பீதாம்பரம், யாழ்ப் பாண மாநகர சபை ஆணை யாளர் சி.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாண முதல்வர் இராச. விஸ்வநாதன் அன்றைய எதிர்க் கட்சித் தலைவர் அமிர்தலிங் கம் ஆகியோர் தங்களுடைய கருத்துக்களை தாங்கொணாத துயரத்தோடு சொன்ன செய் திகள் இக்குறும்படத்தில் இடம் பெற்றிருந்தன. தமிழர்கள் தேர்தல் சமயத் தில் எங்கே முன்னேறி விடு வார்களோ? என்ற ஆத்திரத்தில் சிங்களவர்கள், சிங்கள காவல் துறையினர், சிங்கள இராணு வம் தமிழர்களை ஒடுக்கத் திட்டமிட்ட வரலாறு.பொதுசன யாழ்ப்பான நூலகம் எப்படி எரிக்கப்பட் டது? யாழ் நகரை எப்படி சிங்கள போலீஸ் தீ வைத்து எரித்தது?100 கோடி மில்லியன் ரூபாய் சேதம்தமிழர்கள் அங்கிருந்து முற்றாக கதறி எப்படி வெளி யேறினார்கள்? யாழ் நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. 1981லே யாழ் நகர மக்களின் 100 கோடி மில்லியன் ரூபாய் சொத்துகளை எப்படி எரித்து சிங்களவர்கள் சாம்பலாக்கினர் என்ற வரலாறு மீண்டும், மீண்டும் நூலகத்தைப் புதுப் பிக்க எடுத்த முயற்சி மீண்டும் நூலகத்தை சிங்களவர்கள் வெடி வைத்து தகர்த்தது.மற்றும் யாழ்ப்பாண நூலக வரலாறு இனக் கலவரம் தோன்றியதற்கான அறிகுறி மூல காரணம் என்ன? என்பதை எல்லாம் மிகச் சிறப்பாக விளக்கியது இக்குறும்படம் இது. ஒவ்வொரு தமிழனும் பார்க் கப்பட வேண்டிய படம். ஒவ் வொரு கிராமத்திலும், ஒவ் வொரு ஊரிலும் திரையிடப் பட வேண்டிய வரலாற்று ஆவணம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு ஆவணக் குறும் படமாகும் இது.இதைப் பார்க்கத் தவறிய வர்கள் நல்லதொரு வரலாற் றுச் சம்பவத்தை அறிந்து கொள்ள முடியாமல் போயிற்றே என்ற ஆதங்கத்திற்குத்தான் ஆளாவார்கள்.இந்த ஒரு குறும்படமே போதும் ஈழப் பிரச்சினையை மக்கள் புரிந்து கொள்ள, தெரிந்து கொள்ள, தமிழர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய அரிய படம் இது. திரைப்படம் முடிவடைந்து - அடுத்த நிகழ்ச்சி தொடங்கியது.

கலி.பூங்குன்றன்திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங் குன்றன் அனைவரையும் வர வேற்று பேசினார். அவர் தனது உரையில் இன்று ஓர் முக்கிய நாள். அறிவியல் ஆண்டில் நமது இயக்கம் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் சான்று. இன உணர்ச்சி மேலும் தீவிர மாகியது. குருதி உறையக் கூடிய அளவுக்கு இப்படம் அமைந் திருந்தது என்று கூறினார்.குறும்படத்தை எடுத்த சோமீதரன், ஒரு ஈழத் தமிழர் இளைஞர் என்று அவரைப் பற்றிய அறிமுகத்தை பெரியார் சாக்ரட்டீஸ் விளக்கிய அவர், சிங்கள அரசின் கொடுமை களை காலா காலத்திற்குக் காட்டும் படம் இது என்றார்.
சோமீதரனுக்குப் பாராட்டுஅடுத்து எரியும் நினை வுகள் (யாழ் நூலக எரிப்பு குறித்த ஆவணப் படம்) என்ற இந்த குறும்படத்தை எடுத்து தயாரித்த இளைஞர் சோமீ தரன் அவர்களுக்கும், பாவலர் அறிவுமதி அவர்களுக்கும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார்.

பாவலர் அறிவுமதி பிரபல திரைப்பட பாடலா சிரியர், இன உணர்வாளர் பாவலர் அறிவுமதி தமது உரையில், ஒரு கனத்த நெஞ் சத்தோடு நாம் அமர்ந்திருந் தோம். உதடுகளால் சொல்ல முடியாததை இமைகளால் சொல்ல முடியும் என்ற சோமீதரன் தனது குறும் படத்தில் காட்டியிருக்கின்றார்.உடைந்த வரலாற்றை நமக் குக் காட்டியிருக்கின்றார்.உலகத்திலேயே மிகப் பெரிய கொடுமைக்காரர்கள் உண்டென்றால் அவர்கள் சிங்கள இன வெறியர்கள்தான்.பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை உலக அறிவு களத்தில் ஒரு முன் மாதிரியான நிகழ்ச்சியைத் தொடங்கியி ருக்கிறது என்றார்.
கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.அவர் தமது உரையில் குறிப் பிட்ட முக்கிய செய்தியாவது, இன்றைக்கு இளைஞர்கள் எங்கோ திசை தடுமாறிச் சென்று கொண்டிருக்கக் கூடிய கால கட்டத்தில், இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புக்குரிய குறும்படத்தை வெளிக் கொணர்ந்த இளைஞர் சோமீ தரன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பாராட்ட வார்த்தைகளே இல்லை.சோமீதரன் ஒரு வரலாற்று இயக்குநர்சோமீதரன் ஒரு மிகப் பெரிய சாதனையாளர். அவரை ஒரு வரலாற்று இயக்குநர் என்றே அழைக்கலாம். சமுதாயத்திலே ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக பெரி யார் சுயமரியாதை ஊடகத் துறை தொடங்கப்பட்டு இயக்க வரலாற்றிலே இன் றைக்கு ஒரு முத்திரையைப் பதித்திருக்கிறது.இயக்க வரலாற்றில் முக்கிய நாள்இன்றைக்கு இயக்க வரலாற் றில் ஒரு முக்கிய நாள்.இன்றைக்கு இந்த நிகழ்ச்சி ஒரு சிறிய அரங்கத்திலே தொடங்கினாலும் இதனு டைய வீச்சு உலகளாவியதாகத் தான் இருக்கும். நான் என்றைக்கும் புத்தகங் களை வாசிப்பவன் மட்டும் அல்ல, புத்தகங்களை நேசிப்ப வன் - சுவாசிப்பவன்.யாழ் நூலகம் பல முறை எழ முடியாத அளவிற்கு சிங்களவர் கள் எப்படி அழுத்தினார்கள் என்பதை இந்தப் படம் விளக் கியது. வரலாறு மறைக்கப் படக் கூடாது; மறுக்கப்படக் கூடாது. திரிக்கப்படக் கூடாது. பொது சன நூலகம் என்று தான் யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகத்திற்கு அங்கு பெயர் வைக்கப்பட்டிருந்தது. பொது ஜன நூலகம் என்று அவர்கள் பெயர் வைக்கவில்லை. கெட் டுப் போகாத தமிழும் பட்டுப் போகாத உணர்வும் அங்குதான் இருக்கின்றன. சோமீதரன் ஒரு புதை பொருள் ஆராய்ச்சி போல செய்து நமக்கு காட்டி யிருக்கின்றார். சிங்களவர்கள் எரித்தது நூலகத்தை மட்டு மல்ல நம்முடைய இன உணர்வையும் சேர்த்து எரிக்க நினைத்தார்கள். அந்த இன உணர்வுத் தீ இன்றைக்கும் இருக்கிறது. பரவிக் கொண்டி ருக்கிறது.இன உணர்வை திசை திருப்பப் பார்க்கிறார்கள்நம்முடைய இன உணர்வை திசை திருப்பப் பார்க்கிறார்கள் இன எதிரிகளும், ஊடகத் துறையினரும். அதற்கு நாம் பலியாகி விடக்கூடாது.இந்தக் கருத்துகள், இந்த உணர்வுகள் உலகளாவிய அள வில் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை மூலமாக எடுத்து பரப்பப்படும்.பெரியார் சுயமரியாதைக் கருத்துகள் உலகமயமாகும். அறிவுப் புரட்சி ஏற்படுத்தப் படும் - அமைதிப் புரட்சி ஏற்படுத்தப்படும். இன்றைக்கு ஏற்பட்டிருக் கின்ற இந்த உணர்ச்சி இது ஒரு முடிவு அல்ல. இது ஒரு தொடக்கம் தொடக்கம் என்று கூறி விளக்கிப் பேசினார்.நிறைவாக பிரின்ஸ் என்னா ரெசு பெரியார் நன்றி கூறினார்
யாழ் நூலகம் எரிப்பு ஆவணப் படம் உலக ளாவிய அளவில் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை மூலமாக பரப்பப்படும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்.பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை தொடக்க மற்றும் எரியும் நினைவுகள் என்ற தலைப்பில் யாழ் நூலக எரிப்பு குறித்த ஆவணப் படம் திரையிடல் கொண்ட வரலாற் றில் மிக முக்கிய நிகழ்ச்சியாக 8.11.2008 அன்று சென்னை - பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும், பாவலர் அறிவுமதி அவர்களும் நிகழ்ச்சியில் பார் வையாளர் வரிசையில் அமர்ந் தனர்.மண்டபம் நிரம்பி, நிற்க இடமில்லைஆனால் நிகழ்ச்சி துவங்குவ தற்கு முன்பே அன்னை மணி யம்மையார் அரங்கம் நிரம்பி வந்திருந்தோர் நாற்காலி மற் றும் உட்கார இடமில்லாமல் நின்று கொண்டிருந்தனர். கூட்டம் அளவுக்கு அதிக மாக ஈழத் தமிழர் உணர்வு காரணமாகக் கூடியிருந்தது.முதலாவதாக சோமீதரன் என்ற ஈழத் தமிழரான இளை ஞர் எரியும் நினைவுகள் என்று அவரது முயற்சியால் எடுக்கப்பட்ட குறும்படம் ஆவணப் படம் திரையிடப் பட்டது. யாழ் நூலகம் எப்படி எரிக்கப்பட்டது? ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குரிய பழைய கால ஓலைச் சுவடிகள், வரலாற்று ஆதாரங்கள், ஏராள மான நூல்கள் சஞ்சிகைகள் எப்படி எரிக்கப்பட்டன? ஏன் அந்த சூழ்நிலை ஏற்பட்டது? என்ன காரணம்? எந்த நேரத் தில் யாழ் நூலகம் எரிக்கப் பட்டது?97,000த்திற்கும் மேற்பட்ட நூல்கள் எப்படி எரிந்து சாம் பல் மேடாயின? என்கின்ற வர லாற்றுச் செய்தியை விளக் கியது இக்குறும்படம்.இதைப்பற்றி அறிஞர்கள் கா.சிவத்தம்பி, ஓய்வுபெற்ற ஆசிரியர் அந்தோணிதாசன், சித்ரலேகா மவுனகுரு, சுலோச்சனா ரகுநாதன், நூலக உதவியாளர் பீதாம்பரம், யாழ்ப் பாண மாநகர சபை ஆணை யாளர் சி.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாண முதல்வர் இராச. விஸ்வநாதன் அன்றைய எதிர்க் கட்சித் தலைவர் அமிர்தலிங் கம் ஆகியோர் தங்களுடைய கருத்துக்களை தாங்கொணாத துயரத்தோடு சொன்ன செய் திகள் இக்குறும்படத்தில் இடம் பெற்றிருந்தன. தமிழர்கள் தேர்தல் சமயத் தில் எங்கே முன்னேறி விடு வார்களோ? என்ற ஆத்திரத்தில் சிங்களவர்கள், சிங்கள காவல் துறையினர், சிங்கள இராணு வம் தமிழர்களை ஒடுக்கத் திட்டமிட்ட வரலாறு.பொதுசன யாழ்ப்பான நூலகம் எப்படி எரிக்கப்பட் டது? யாழ் நகரை எப்படி சிங்கள போலீஸ் தீ வைத்து எரித்தது?100 கோடி மில்லியன் ரூபாய் சேதம்தமிழர்கள் அங்கிருந்து முற்றாக கதறி எப்படி வெளி யேறினார்கள்? யாழ் நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. 1981லே யாழ் நகர மக்களின் 100 கோடி மில்லியன் ரூபாய் சொத்துகளை எப்படி எரித்து சிங்களவர்கள் சாம்பலாக்கினர் என்ற வரலாறு மீண்டும், மீண்டும் நூலகத்தைப் புதுப் பிக்க எடுத்த முயற்சி மீண்டும் நூலகத்தை சிங்களவர்கள் வெடி வைத்து தகர்த்தது.மற்றும் யாழ்ப்பாண நூலக வரலாறு இனக் கலவரம் தோன்றியதற்கான அறிகுறி மூல காரணம் என்ன? என்பதை எல்லாம் மிகச் சிறப்பாக விளக்கியது இக்குறும்படம் இது. ஒவ்வொரு தமிழனும் பார்க் கப்பட வேண்டிய படம். ஒவ் வொரு கிராமத்திலும், ஒவ் வொரு ஊரிலும் திரையிடப் பட வேண்டிய வரலாற்று ஆவணம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு ஆவணக் குறும் படமாகும் இது.இதைப் பார்க்கத் தவறிய வர்கள் நல்லதொரு வரலாற் றுச் சம்பவத்தை அறிந்து கொள்ள முடியாமல் போயிற்றே என்ற ஆதங்கத்திற்குத்தான் ஆளாவார்கள்.இந்த ஒரு குறும்படமே போதும் ஈழப் பிரச்சினையை மக்கள் புரிந்து கொள்ள, தெரிந்து கொள்ள, தமிழர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய அரிய படம் இது. திரைப்படம் முடிவடைந்து - அடுத்த நிகழ்ச்சி தொடங்கியது.கலி.பூங்குன்றன்திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங் குன்றன் அனைவரையும் வர வேற்று பேசினார். அவர் தனது உரையில் இன்று ஓர் முக்கிய நாள். அறிவியல் ஆண்டில் நமது இயக்கம் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் சான்று. இன உணர்ச்சி மேலும் தீவிர மாகியது. குருதி உறையக் கூடிய அளவுக்கு இப்படம் அமைந் திருந்தது என்று கூறினார்.குறும்படத்தை எடுத்த சோமீதரன், ஒரு ஈழத் தமிழர் இளைஞர் என்று அவரைப் பற்றிய அறிமுகத்தை பெரியார் சாக்ரட்டீஸ் விளக்கிய அவர், சிங்கள அரசின் கொடுமை களை காலா காலத்திற்குக் காட்டும் படம் இது என்றார்.சோமீதரனுக்குப் பாராட்டுஅடுத்து எரியும் நினை வுகள் (யாழ் நூலக எரிப்பு குறித்த ஆவணப் படம்) என்ற இந்த குறும்படத்தை எடுத்து தயாரித்த இளைஞர் சோமீ தரன் அவர்களுக்கும், பாவலர் அறிவுமதி அவர்களுக்கும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார்.பாவலர் அறிவுமதிபிரபல திரைப்பட பாடலா சிரியர், இன உணர்வாளர் பாவலர் அறிவுமதி தமது உரையில், ஒரு கனத்த நெஞ் சத்தோடு நாம் அமர்ந்திருந் தோம். உதடுகளால் சொல்ல முடியாததை இமைகளால் சொல்ல முடியும் என்ற சோமீதரன் தனது குறும் படத்தில் காட்டியிருக்கின்றார்.உடைந்த வரலாற்றை நமக் குக் காட்டியிருக்கின்றார்.உலகத்திலேயே மிகப் பெரிய கொடுமைக்காரர்கள் உண்டென்றால் அவர்கள் சிங்கள இன வெறியர்கள்தான்.பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை உலக அறிவு களத்தில் ஒரு முன் மாதிரியான நிகழ்ச்சியைத் தொடங்கியி ருக்கிறது என்றார்.சோமீதரன்தொடர்ந்து சோமீதரன் தனது உரையில் எப்படி இந்தப் படத்தை சிங்கள இராணுவ நெருக்கடிக்களுக்கிடையே யாழ்ப்பாணத்தில் எடுத்தேன் என்பதை விளக்கிய அவர், இப்படி ஒரு படம் எடுக்கப்பட் டிருக்கின்றது என்ற செய்தியை குற்றாலத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் சொன்ன பொழுது, பத்திரிகை யில் இந்த படம் பற்றி வெளி வந்த குறிப்பை தாம் ஃபைல் செய்து ஏற்கெனவே வைத்திருந் ததாகக் கூறிய பொழுது தன்னால் பேச முடியவில்லை. சிந்திக்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு உணர்ச்சி வயப்பட்டேன் என்ற அவர், இந்த குறும்படத்தை வெளி யிட ஊக்குவித்த தமிழர் தலை வர் அவர்களை தன் வாழ் நாளில் என்றும் மறக்க மாட்டேன் என்று நன்றியுடன் கூறினார்.தமிழர் தலைவர் உரைஇறுதியாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.அவர் தமது உரையில் குறிப் பிட்ட முக்கிய செய்தியாவது, இன்றைக்கு இளைஞர்கள் எங்கோ திசை தடுமாறிச் சென்று கொண்டிருக்கக் கூடிய கால கட்டத்தில், இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புக்குரிய குறும்படத்தை வெளிக் கொணர்ந்த இளைஞர் சோமீ தரன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பாராட்ட வார்த்தைகளே இல்லை.சோமீதரன் ஒரு வரலாற்று இயக்குநர்சோமீதரன் ஒரு மிகப் பெரிய சாதனையாளர். அவரை ஒரு வரலாற்று இயக்குநர் என்றே அழைக்கலாம். சமுதாயத்திலே ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக பெரி யார் சுயமரியாதை ஊடகத் துறை தொடங்கப்பட்டு இயக்க வரலாற்றிலே இன் றைக்கு ஒரு முத்திரையைப் பதித்திருக்கிறது.இயக்க வரலாற்றில் முக்கிய நாள்இன்றைக்கு இயக்க வரலாற் றில் ஒரு முக்கிய நாள்.இன்றைக்கு இந்த நிகழ்ச்சி ஒரு சிறிய அரங்கத்திலே தொடங்கினாலும் இதனு டைய வீச்சு உலகளாவியதாகத் தான் இருக்கும். நான் என்றைக்கும் புத்தகங் களை வாசிப்பவன் மட்டும் அல்ல, புத்தகங்களை நேசிப்ப வன் - சுவாசிப்பவன்.யாழ் நூலகம் பல முறை எழ முடியாத அளவிற்கு சிங்களவர் கள் எப்படி அழுத்தினார்கள் என்பதை இந்தப் படம் விளக் கியது. வரலாறு மறைக்கப் படக் கூடாது; மறுக்கப்படக் கூடாது. திரிக்கப்படக் கூடாது. பொது சன நூலகம் என்று தான் யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகத்திற்கு அங்கு பெயர் வைக்கப்பட்டிருந்தது. பொது ஜன நூலகம் என்று அவர்கள் பெயர் வைக்கவில்லை. கெட் டுப் போகாத தமிழும் பட்டுப் போகாத உணர்வும் அங்குதான் இருக்கின்றன. சோமீதரன் ஒரு புதை பொருள் ஆராய்ச்சி போல செய்து நமக்கு காட்டி யிருக்கின்றார். சிங்களவர்கள் எரித்தது நூலகத்தை மட்டு மல்ல நம்முடைய இன உணர்வையும் சேர்த்து எரிக்க நினைத்தார்கள். அந்த இன உணர்வுத் தீ இன்றைக்கும் இருக்கிறது. பரவிக் கொண்டி ருக்கிறது.இன உணர்வை திசை திருப்பப் பார்க்கிறார்கள்நம்முடைய இன உணர்வை திசை திருப்பப் பார்க்கிறார்கள் இன எதிரிகளும், ஊடகத் துறையினரும். அதற்கு நாம் பலியாகி விடக்கூடாது.இந்தக் கருத்துகள், இந்த உணர்வுகள் உலகளாவிய அள வில் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை மூலமாக எடுத்து பரப்பப்படும்.பெரியார் சுயமரியாதைக் கருத்துகள் உலகமயமாகும். அறிவுப் புரட்சி ஏற்படுத்தப் படும் - அமைதிப் புரட்சி ஏற்படுத்தப்படும். இன்றைக்கு ஏற்பட்டிருக் கின்ற இந்த உணர்ச்சி இது ஒரு முடிவு அல்ல. இது ஒரு தொடக்கம் தொடக்கம் என்று கூறி விளக்கிப் பேசினார்.நிறைவாக பிரின்ஸ் என்னா ரெசு பெரியார் நன்றி கூறினார்
நன்றி - விடுதலை
http://files.periyar.org.in/viduthalai/20081109/Page06.html