Sunday, April 08, 2007

வரவனையான்- சோமி - சயந்தன், ஒரு பரபர உரையாடல்

சயந்தனின் பதிவில் இருந்து முழுமையாக எடுக்கப் பட்டு எனது பதிவில் பிரசுரிக்கப் படுகிறது.
தொடர்ந்து எங்கள் ஒலிப்பதிவுகளை வலையுலகில் ஏற்றிவரும் அண்ணன் "மொக்கை ஒலி" சயந்தன் மாஸ்டருக்கு
நன்றி

வலைப் பதிவுலகில் பின்னூட்டமிடும் வசதியென்பது வேறெந்த ஊடகத்திற்கும் கிடைத்திராத பெரும் வாய்ப்புக்களில் ஒன்று. பதிவாளர் முடித்த பதிவு, அதனை வாசிப்பவரிடத்தில் ஆரம்பிக்கும் அவரது சிந்தனையின் தொடர்ச்சியை, தொடர்ந்தும் இறுதி வரை கொண்டு செல்ல உதவும் பின்னூட்ட வசதிகள் சரியான முறையில் தமிழ் வலைப்பதிவுச் சூழலில் பயன்படுத்தப் படுகிறதா..?

பெரும்பாலும் பாராட்டுக்களாகவும் வாழ்த்துக்களாகவும் அல்லது வசைவுகளாகவும் அமைகின்ற பின்னூட்டங்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் படுகின்றது..?

ஒருவருடைய எண்ணப் பதிவுகளை வெளியிட, இன்னுமொருவருடைய அனுமதியை வேண்டி நிற்கும் ஊடகச் சூழலில், பெரும் கட்டுடைப்பாக அவரவர்கள் தமது மனப்பதிவுகளை சுதந்திரமாகவும், திறந்த நிலையிலும் வெளியிடும் வாய்ப்பினை வலைப் பதிவு தந்திருக்கிறது. இந்நிலையில் எழுதப் படும் பதிவுகள் ஒருவருடைய மன வெளிப்பாட்டின் பதிவுகளாக அமைவது தவிர்க்க முடியாததாகிற போது, அவை கண்டிப்பாக ஏதாவது மாற்றத்திற்கான, அல்லது வாசகரை ஏதோவொரு விதத்தில் ஒழுங்கமைக்கும் படியாக அமைவது கடைப் பிடிக்கப் படக் கூடியதா..?

இவைபற்றிய கலைந்துரையாடல் இது.




Saturday, April 07, 2007

முன்னோட்ட முகப்பு ;ஒரு பரபர உரையாடல்....

எந்தவித முன்னேற்பாடுமற்ற கதைகளின் குவியல் இது...............

பல வட்டார வழக்கியல் தமிழ்கள்.........

வரவனியானின் பின்னூட்ட அரசியல் மீதான கட்டுடைப்பு.......

சயந்தனின் சைற் அடித்தல்கள்.....

சோமியின் சொதப்பல்கள்.............

இப்படி இன்னும் பல ...காத்திருங்கள் விரைவில் உங்கள் தமிழ்மணத்தில்.....

ஒரு நள்ளிரவுபொழுதில் சயந்தனும் பின்னிரவில் அல்லது அதிகாலையில் நானும் வரவனையானும் மும்முனையில் நடத்திய மொக்கைக் கதைகளின் தொகுப்பு விரைவில் உங்கள் தமிழ்மணத்தில் வருகிறது.