Saturday, November 25, 2006

வணக்கம்..பரிட்சாத்தப் பதிவு.....

நானும் தெரியாம பிளக் பீற்றாவுல போய்ச் சேர்ந்திட்டன்.

சும்மா பரிட்சாத்தமாக ஒரு பதிவிடுறன்.

தமிழ்மணத்தில் எனது பதிவு அல்லது பின்னூட்டத்தில்; பிரச்சனை வருமெண்டு சயந்தன் சொன்னான். யாருக்காவது இது பற்றி தெரிந்தால் சொல்லுங்கள். எனது பதிவில் சில மாற்றங்கள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

சரி வேறு வழியில்லையேல் புது பதிவில் சந்திக்கிறேன.

Wednesday, November 22, 2006

கடலூர் சிப்காட் பகுதியின் சோகம்.....

கடலூரில் பழைய நகரில் இருந்து தொழிற்சாலைகள் நிரம்பிய அந்த பகுதிக்குள் நாம் நுழைகிறபோது காற்றில் கலந்து வரும் மணம் நம்மை சுவாசிக்க முடியாமல் திணர வைக்கும் குறிப்பிட்ட தூரம்வரை எம்மால் சுவாசிக்கமுடியவில்லை. வெளியே வீதியின் அருகில் சில கிராமக்களும் நிறைய மனிதர்களும் சாதாரணமாக திரிகிறார்கள். ஒரு 10 தொடக்கம் 15 நிமிட நேரத்தில் எம்மால் உணரப்பட்ட அந்த கொடுமையான மணம் சூழ்ந்துள்ள பகுதியில் எப்படி மனிதர்கள்?

அனைவருக்கும் போபால் விசவாயுக் கசிவினை நினைவிருக்கலாம்.அதைப் போன்ற அவலம் சிறிது சிறிதாக கடலூர் சிப்காட் பகுதி மக்களை நோக்கியும் வருகிறது.மக்கள் வாழ்விடங்களில் தாரளமாக நிறுவப்பட்டுள்ள இரசாயனக் கம்பனிகள் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப் படும் கழிவுகளுக்கு சரியான பாதுகாப்பு இல்லை.இன்னுமொரு போபாலை தமிழகத்தில் பார்த்த பிறகுதான் வழமையான அரச நடவடிக்கை வகையாராக்கள் வரும் ஆனால் தங்கள் ஆயுளை குறைத்துக் கொள்ளும் அந்த கிராமவசிகளுக்கு சரியான பாதுகாப்போ அகற்றப் படும் கழிவுகளை மேற்பார்வை செய்வதற்கான ஒழுங்குகளோ சரிவர இல்லை.

கடந்தவாரத்தில் நான் அங்கு போயிருந்த்த போது அந்த மக்களின் சோகங்களையும் தொழில் நிறுவனங்களின் அத்து மீறல் களையும் பார்க்க கிடைத்தது.தொழிற்ச்சங்கம் தொடங்கியமைக்காக தண்டிக்கப்பட்ட தொழிளார்கள் போராட முற்பட்டபோது காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.அவர்களை கடந்தவாரம் நான் நேரில் பார்த்தேன்.

இந்த நிலையில் இந்த அவலத்தைச் சொல்லுவதற்காக எதிர்வரும் 29 ஆம் திகதி(29.11.2006)கடலூரில் இருந்து ஒரு மிதிவண்டிப்(சைக்கிள்) பேரணிஆரம்பமாகிறது. அந்த பேரணி போபால் நினைவுதினமான டிசம்பர் 3 ஆம் திகதிக்கு முதல் நாள் டிசம்பர் 2 அன்று சென்னையை வந்தடையும் அன்றைய தினம் சென்னை பெசெண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் கடலூர் அவலம் உள்பட தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊள்ள தொழிற்சாலை பாதிப்பின் தாக்கம் குறித்த ஆவணப்படங்கள் திரையிடப் படவுள்ளது.இதேபோல் பேரணி பாண்டிசேரி ,திண்டிவனம், மதுரந்தகம் போன்ற பகுதிகளில் தரித்து நிற்கும் போது அங்கும் ஆவணப் படங்கள் மக்களுக்காக திரையிடப்பட்டு கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும்

அதே காலப் பகுதில் சென்னையில் உள்ள கல்லூரிகளிலும் பாடசாலகளிலும் ஆவணப் படங்கள் திரையிடப்படுகின்றன.இந்த ஏற்பாடுகளை சென்னையில் மற்றூம் கடலூரில் உள்ள கல்லூரி\பல்கலை மாணவர்களும் சுழலியல் மந்த உரிமைப் பாதுகாப்பு அமைப்புகளும் இணைந்து மேற்குள்ளுகின்றன.

கடலூர் மக்களினது ஏனைய பகுதி மக்களினதும் இத்தகைய அவலங்கள் கூறித்தும் பின்னர் விரிவாக பதிவிடுகிறேன்.

அவசியம் உண்மையை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்...ஏனெனில் 'தலைமகன்' தமிழ் திரைப்படதில் நிலத்தடி நீரை அபகரிக்கும் பன்னாட்டுகம்பனிக்கு எதிராக காதாநாயகன் போராடுகையில் அதைத் தயாரித்த ராடன் நிறுவனத் தலைவி அல்லது கதாநாயகனின் மனைவி கொக்கோகோலா குடிக்குமாறு சொல்வதுபோல வேடிக்கை எதுவும் நடந்து விடக்கூடாது...

மேலதிக தகவலுக்கு :www.sipcotcuddalore.com

Monday, November 20, 2006

என் ஆவணப்பட உருவாக்க முயற்சிகள் குறித்து....

என் ஆவணப் படங்களின் உருவாக்கம் பற்றி நண்பர் ஈழநாதன் சில மாதங்களுக்கு முன்பு எழுதச் சொல்லிக் கேட்டிருந்தார். என்னால் தொடர்ந்து பதிவிட முடியாத நிலை இருந்ததால் நான் அது பற்றி எதுவும் எழுதவில்லை.

விக்கிரமாதித்தனைப் போல பதிவினை தொடர்சியாக இடும் பணியில் மீண்டும் மீண்டும் தோற்றுப் போய்க்கொண்டே இருகிறேன்.எனது வரவுசெலவு நிலவரம் இடம் கொடுக்காத காரணத்தினால் இதுவரை சென்னையில் உள்ள எனது அறைக்கு இணையம் வரமுடியாமல் போனது. இப்போது சில ஒதுக்கீடுகளை செய்து என் அறைக்கு இணையத்தை கொண்டு வந்து விட்டேன்.இன்றைய தேதியில் ஒரு சாமான்யனுக்கு இது இனிப்பான செய்திதான்.இணையம் இந்தியாவில் சாமான்யன் எட்டும் தூரத்துகு வந்திருப்பது சில அத்துமீறல்களையும் தாண்டி அதிக மகிழ்ச்சி தரக்கூடியது.

யாழ் நூலகம் உட்பட 3 ஆவணப் படங்களையும் சிவராம் கொலையின் பின்னரான பொழுதுகள் குறித்த ஆவணப் படத்தினையும் ஆரம்பித்து 90 வீத வேலைகள் பூர்த்தியாகப் பட்டுள்ளது. யாழ் நூலகம் குறித்த எனது படத்திற்கான தகவல்த் தேடல்கள் இன்னமும் தொடர்கிறது.உங்களீல் யாரும் விரும்பின் இணைந்து கொள்ளலாம்.

இன்னும் ஒரு மாதத்திற்குள் யாழ்ப்பாணத்து செய்திகள் சொல்லும் இரண்டு படங்கள் முழுமை பெற்றுவிடும்.அவை என்ன சொல்லப் போகிறது என்பதைப் பின்னர் சொல்கிறேன்.சில சிக்கல்கள் காரணமாக(பொருளாதாரம் உட்பட) நிறயவே தாமதமாகி விட்டது

சிவராம் கொலைக்கு பின்னர், சிவராமின் கொலைக்கு பின்னரான சூழலும் ஈழ ஊடகவியல் சூழலும் எவ்வாறு உள்ளது என்பது குறித்த ஆவணப் படுத்தலினை மேற் கொண்டேன்.மறைந்த புலமையாளர் ஏ.ஜே.கனகரட்ணா மற்றும் பல்வேறு தமிழ், சிங்கள ஊடகக்காரர்கள் உட்பட பலரின் கருத்துகளும் பதிவாகியுள்ளது.

இதைப் போலவே முல்லை தீவு கூத்தினை ஒளிப்பதிவு செய்து வைத்திருந்தேன்.இப்போது இந்திய தேசிய நாட்டுப் புறவியல் நிறுவனம் கேட்டதன் பெயரில் அதனை 30 நிமிடக் படமாக உருவாக்கியுள்ளேன். முல்லைக் கூத்தின் ஒரு அறிமுகமாக அது இருக்கும்.
இந்த வருடம் வற்றாப்பளை அம்மன் திருவிழாவுக்கு முன்னதாக நிகழ்த்தப் பட்ட முல்லைமோடி கோவலன் கூத்தே அது.வயது முதிர்ந்த கூத்துக்காரர் ஒருவரி கூத்து பாடல்களையும் ஆவணப் படுத்தினேன்.

இப்போதைய எனது நோக்கமெல்லாம் ஆவணப் படுத்த வேண்டுமென்பதே முடிந்தளவு முறையாக அதை செய்ய வேண்டும்.எங்களிடம் இருக்கும் முக்கியமான நபர்களை ஆவணப் படுத்த வேண்டும். பேராசிரியர் சிவத்தம்பியை ஆவணப் படுத்துவதற்கு சரிநிகர் சிவகுமார் முயற்சித்தார் இன்றுவரை முடியவில்லை.சமாதானப் பேச்சுக்காலத்தில் ஆதைச் சிறப்பாக செய்திருக்க முடியும். ஏ.ஜேயை ஆவணப் படுத்தலாமென்று சிவகுமரும் நானும் முயற்சித்தோம்.முதலில் சிவத்தம்பியை பண்ணுங்கோ என்னை பிறகு பார்கலாமென்றார் ஏ.ஜே . இப்பொது என்னைடம் உள்ள அவரின் இறுதி நேர உரையாடல்களை கொண்டு ஒரு சிறிய வீடியோ ஆவணம் உருவாக்க நினைத்துள்ளேன். என்னிடம் வீடியோ மட்டும் உள்ளது இன்னும் பல அவரின் புகைப் படங்கள் சம்பவங்கள் அது தொடர்பான புகை படங்கள் யாரிடமாவது இருப்பின் கொடுத்துதவினால் ஒரளவு செழுமையாக செய்வதற்கு அது உதவியாக இருக்கும்.
நானும் பா.அகிலனும் சேர்ந்து சிலரை ஆவணப் படுத்த நினைத்தோம் நினைத்ததில் பாதி கூட பண்ண முடியவில்லை.இந்தவருடம் தனது 75 வது பிரந்த நாள் கண்ட குழந்தை சண்முகலிங்கம், மாமனிதர் எஸ்.ரி.அரசு ஆகியொரை இந்த வருடத்தில் ஆவணப் படுத்த நினைத்தோம்.நாட்டின் மேசமான நிலையினால் இடைநடுவில் கைவிடப் பட்டது.இருப்பினும் ஓரளவு அவர்கள் இருவரின் நேர்காணல்களையும் பதிவு செய்து விட்டோம்.இருவருமெ யாழ்ப்பாண நாடகப் வரலாற்றில் முக்கியமானவர்கள்.குழந்தை சண்முகலிங்கம் இன்று வலுப் பெற்ற நவீன தமிழ் நாடக உருவக்கதில் முக்கியமானவர்.

சரி அடுத்த பதிவில் முல்லைதீவில் கூத்து ஒளிப்பதிவு செய்த போது நான் சந்தித்த பழய கூத்துக்காரர்கள் சொன்ன அவலமான 2 விடயங்கள் பற்றி சொல்கிறேன். இப்பொதைக்கு விடை பெறுகிறேன்.

Wednesday, June 21, 2006

நீண்ட இடை வெளிக்கு பிறகு ....

நீண்ட இடைவெளி ஒன்றிற்குப் பிறகு உங்களோடு பயணப்பட ஆரம்பிக்கிறேன்.இந்திய நகரங்களிலும் வீதிகளிலும் சுற்றுகிறபோதும், இலங்கையில் சுற்றி கொண்டிருக்கும்போது நான் பார்க்கின்ற பல விடையங்களை உங்களோடு பகிர்வது பொருத்தமாக இருக்கும்.

இப்போது ஒரு வருடதிற்கு மேலாக பத்திரிகைகளிலும் நான் எழுதுவதில்லை.அது எதுவும் பிடித்தமற்றதாகவே எனக்கு தோன்றுகிறது.ஆனால் தமிழ்மணத்தில் பதிவு செய்யபடும் பதிவுகள் எனக்கு நிறைய உற்சாகத்தை தருகின்றன.ஒப்பீட்டு ரீதியில் இணைந்து பணியாற்ற முடியாத ஒரு புதிய தலைமுறையின் மனிதர்களாக நாங்கள் இருக்கிறோம்.

இந்தியாவில் என்னால் முடிந்தளவுக்கு இலங்கையில் கூட்டான வேலைகளை செய்வற்கு என்னால் முடியவில்லை.உண்மையில் கடந்த 25 வருட கலத்தில் தனது பெரும் பகுதியை கழித்த இத தலைமுறையினர் பெருமளவில் புலம்பெயர்துவிட்டனர் இல்லையெனில் விடுதலை போராளிகளாக உள்ளனர்.யாரும் யாருடனும் எதையும் பகிர்ந்துகொள்ளுவதற்கோ விவாதிப்பதற்கோவான மனநிலையும் சூழலும் எங்களிடம் இல்லை.அந்தவகையில் தமிழ்மணத்தில் குறைந்தளவிலாவது கருத்தாடல் இடம்பெறுவது மகிழ்ச்சி.

உண்மையில் இலக்கியங்கள் பற்றியும் இசங்கள் பற்றியும் நான் வசிக்க முற்பட்டதற்கு சசிவனும் நானும் 2003-2004 காலப்பகுதியில் தங்கியிருந்த மயூரன் வீடும் காரணம்.சசிவன்,மயூரன்,கோபி
ஆகியோருடன் நிறைய கதித்திருக்கிறேண். என்னை விட அதிக வாசிப்பளர்களான இவர்கள் மூவருடனும் நானும் சேர்ந்து செய்ய வேண்டிய நிறைய வேலைகள் பற்றி பேசியிருகிறோம்."ம்"பத்திரிகை அடிக்க நினைத்தது உட்பட.ஆனால் கூட்டாக ஏதேனும் செய்வதற்கான ஒரு புதிய அணி உருவாகியாதாக தெரியவில்லை. ஆனாலும் நூலகம் முயற்சியில் கோபியும் மயூரனும் ஒன்றிணைந்து வேலை செய்வது மகிழ்ச்சி.

எனது இந்தப் பதிவிற்கான தொடக்கமும் உங்கள் எல்லோரோடும் இணைந்துகொள்ளூவதுதான்.பெரும்பாலும் விரவில் எனது ஆவணப் படங்கள் குறித்து பதிவிடுவேன்.இப்போதுதான் யர்ழ்பாணத்தில் எனது ஆவணப் படத்திற்கான படப் பிடிப்பை நிறைவு செய்திருகிறேன்.அடுத்த கட்ட வேலைகளை இந்தியாவில் மேற்கொள்ளவுள்ளேன்.

சரி இது கடந்த காலங்களைப் போல் பதிவிடாது இருந்த நிலைபோலல்லமல் தொடர்ந்து எழுதுவதற்கான ஒரு முதல் பதிவே.


||எனக்கு முதல் பதிவிட தமிழ்மணம் blog என்பவற்றை அறிமுகம் செய்து அழைத்து வந்து வலைப் பதிவை உருவாக்கித்தந்த மயூரனுக்கும் என்கூடவே எப்போதும் இருக்கும் த்மிழ்மண்த்தில் உள்ள முக்கியமான விசயங்களை அறியதரும் புது விசயங்களை இணையத்தள்ங்கல் தொடர்பாக கற்றுத்தரும் நண்பன் *சயந்தனுக்கும் நன்றிகள் ||

*சயந்தந்ன்- எனது முதலும் கடைசியுமான கவிதையை பிரசுரித்த சஞ்சிகையின் ஆசிரியர் எனது எழுத்துக்கு முதல் அச்சு வடிவம் கொடுத்து கொழும்பில் அறிமுகப்படுதியவர்(சந்தொசம்தானே மச்சான்)